-
Notifications
You must be signed in to change notification settings - Fork 1
/
Tamil.txt
1361 lines (1361 loc) · 516 KB
/
Tamil.txt
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
241
242
243
244
245
246
247
248
249
250
251
252
253
254
255
256
257
258
259
260
261
262
263
264
265
266
267
268
269
270
271
272
273
274
275
276
277
278
279
280
281
282
283
284
285
286
287
288
289
290
291
292
293
294
295
296
297
298
299
300
301
302
303
304
305
306
307
308
309
310
311
312
313
314
315
316
317
318
319
320
321
322
323
324
325
326
327
328
329
330
331
332
333
334
335
336
337
338
339
340
341
342
343
344
345
346
347
348
349
350
351
352
353
354
355
356
357
358
359
360
361
362
363
364
365
366
367
368
369
370
371
372
373
374
375
376
377
378
379
380
381
382
383
384
385
386
387
388
389
390
391
392
393
394
395
396
397
398
399
400
401
402
403
404
405
406
407
408
409
410
411
412
413
414
415
416
417
418
419
420
421
422
423
424
425
426
427
428
429
430
431
432
433
434
435
436
437
438
439
440
441
442
443
444
445
446
447
448
449
450
451
452
453
454
455
456
457
458
459
460
461
462
463
464
465
466
467
468
469
470
471
472
473
474
475
476
477
478
479
480
481
482
483
484
485
486
487
488
489
490
491
492
493
494
495
496
497
498
499
500
501
502
503
504
505
506
507
508
509
510
511
512
513
514
515
516
517
518
519
520
521
522
523
524
525
526
527
528
529
530
531
532
533
534
535
536
537
538
539
540
541
542
543
544
545
546
547
548
549
550
551
552
553
554
555
556
557
558
559
560
561
562
563
564
565
566
567
568
569
570
571
572
573
574
575
576
577
578
579
580
581
582
583
584
585
586
587
588
589
590
591
592
593
594
595
596
597
598
599
600
601
602
603
604
605
606
607
608
609
610
611
612
613
614
615
616
617
618
619
620
621
622
623
624
625
626
627
628
629
630
631
632
633
634
635
636
637
638
639
640
641
642
643
644
645
646
647
648
649
650
651
652
653
654
655
656
657
658
659
660
661
662
663
664
665
666
667
668
669
670
671
672
673
674
675
676
677
678
679
680
681
682
683
684
685
686
687
688
689
690
691
692
693
694
695
696
697
698
699
700
701
702
703
704
705
706
707
708
709
710
711
712
713
714
715
716
717
718
719
720
721
722
723
724
725
726
727
728
729
730
731
732
733
734
735
736
737
738
739
740
741
742
743
744
745
746
747
748
749
750
751
752
753
754
755
756
757
758
759
760
761
762
763
764
765
766
767
768
769
770
771
772
773
774
775
776
777
778
779
780
781
782
783
784
785
786
787
788
789
790
791
792
793
794
795
796
797
798
799
800
801
802
803
804
805
806
807
808
809
810
811
812
813
814
815
816
817
818
819
820
821
822
823
824
825
826
827
828
829
830
831
832
833
834
835
836
837
838
839
840
841
842
843
844
845
846
847
848
849
850
851
852
853
854
855
856
857
858
859
860
861
862
863
864
865
866
867
868
869
870
871
872
873
874
875
876
877
878
879
880
881
882
883
884
885
886
887
888
889
890
891
892
893
894
895
896
897
898
899
900
901
902
903
904
905
906
907
908
909
910
911
912
913
914
915
916
917
918
919
920
921
922
923
924
925
926
927
928
929
930
931
932
933
934
935
936
937
938
939
940
941
942
943
944
945
946
947
948
949
950
951
952
953
954
955
956
957
958
959
960
961
962
963
964
965
966
967
968
969
970
971
972
973
974
975
976
977
978
979
980
981
982
983
984
985
986
987
988
989
990
991
992
993
994
995
996
997
998
999
1000
அமைச்சின் பணிகளை முன்னெடுப்பதற்கு கௌர அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களுக்கு தத்துவம் வழங்கப்பட்டதுடன் திருமதி எம். எஸ்.விக்கிரமசிங்க அமைச்சின் செயலாளராக செயலாற்றுகிறார்.
இவ்வமைச்சு இல 40, புத்கமுவ வீதி, இராஜகிரிய எனும் முகவரியில் அமையப்பெற்றுள்ளது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாடு தொடர்பான கொள்கைகள் நிகழ்ச்சித் திட்டங்களையும் கருத்திட்டங்களையும் வகுத்தமைத்தல்.
குறித்த தேசிய நோக்கங்களை எய்தும் பொருட்டு தேசிய திட்டமிடல் அதிகாரிகளுடன் உடன்பட்ட செயற்பாட்டு எல்லைகுள்ளும் வரவு செலவுத் திட்டத்தில் அடங்கப்பெற்ற வளங்களை விஞ்சாதவாறும் சொல்லப்பட்ட கொள்கைகளையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் கருத்திட்டங்களையும் செயற்படுத்தலும் நெறிப்படுத்தலும்.
தேசிய மொழிக் கொள்கையை வகுத்தமைத்தல், செயற்படுத்துதலுடன் தொடர்பான அலுவல்கள்.
சமூக ஒருமைப்பாடும் இனங்களுடனான அலுவல்களும்;.
தொலைநோக்கு வேற்றுமையில் ஒற்றுமையுடன் பலம் பெற்ற இரு மொழிகளுடன் இதயபூர்வமாக இணைந்து எல்லாவித இனங்களினதும் கலாசார தனித்துவங்களை பாதுகாக்கும் சமத்துவமிக்க இலங்கை தேசம்.
இலங்கை அரசகரும மொழிகள் கொள்கையை அமுலாக்குவது தொடர்பான நிகழ்ச்சித்திட்டங்களை அமுலாக்கலும் அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கல் செயற்பாடுகளை மேற்பார்வை மற்றும் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கு சாதகமான அடியை முன்வைத்து அமைச்சு 2010ம் ஆண்டு மொழிகள் பிரிவு தாபிக்கப்பட்டது.
மொழிப்பிரிவு மூலம் முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சிகளை திட்டமிடும் போது அடிப்படையாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் கீழ்வருபவை முக்கியமானவையாகும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அமைவான தேசிய கொள்கைக்கு அமைவாக அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்.
மும்மொழி இலங்கைக்கான பத்தாண்டு திட்டத்திற்கு அமைவாக அமைச்சின் விடயப் பரப்புக்கு அமைவாக சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்.
அரச உத்தியோகத்தர்கள் மொழித் தேர்ச்சி பெற்றுக் கொள்வதற்கு அமைவாக முன்வைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் குழு அறிக்கை சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தல்.
2014 ஆம் ஆண்டில் மொழிப் பிரிவானது 4 இலக்குகளை மையமாகக் கொண்டு அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதற்கேற்ப இதுவரையும் மேல் மத்திய தென் மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி பொலிஸ் நிலையங்களில் பிரதான உத்தியோகத்தர்களுக்காக இச் செயலமர்வு ஒழுங்குசெய்யப்பட்டது.
அதன் பிரதான ஆலோசகராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் திரு பிரதிபா மஹாநாம ஹேவா அவர்களை வளவாளராகக் கொண்டு இச் செயலமர்வு நடைபெற்றது.
அந்தந்த பகுதிகளில் பொலிஸ் சேவைகளுக்கு அமைவாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் நடைமுறை முரண்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிப்பதன் ஊடாக இச்செயலமர்வு இடம்பெற்றமை விசேடமாகும்.
அத்தோடு அந்த பிரதேசங்களில் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலின் முரண்பாடுகளை கண்டறிந்து அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அமைச்சு முன்வந்துள்ளது.
1.2. இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் காரியாலயங்களில் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மீளாய்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் முரண்பாடுகளை களைந்து அதன் பணிகளை முன்னேற்றுவதனை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டமாகும்.
அதற்கேற்ப இரு மொழி பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் ஏனைய பிரதேச செயலாளர் காரியாலயங்களில் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விமர்சனங்கள் மதிப்பீடு 24 நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்கள் மற்றும் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் பேரில் விமர்சனங்கள் மேற்கொள்வதற்காக மேற்பார்வை குழு தெரிவு செய்யப்பட்டது.
அதற்கேற்ப 2014.08.21 ஆம் திகதி மதிப்பீட்டுக் குழு வத்தளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 11 அரச நிறுவனங்களிலும் மற்றும் 2014.09.19 ஆம் 13 திகதி நீர்கொழும்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரச நிறுவனங்கள் 11 இலும் மேற்பார்வை செய்யப்பட்டன.
மேலும் 2014.10.31 2014.11.10.17.21.24 ஆம் திகதிகளில் களுத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் அரச நிறுவனங்கள் 55 ல் மேற்பார்வை செய்யப்பட்டது.
அதன் பிற்பாடு 2014.11.28ஆம் திகதி மாவனெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அரச நிறுவனங்கள் 7லிலும் 2014.12.05 திகதி கேகாலை மாவட்டத்திற்கு உட்பட்ட அரச நிறுவனங்கள் 11லும் மேற்பார்வை இடம்பெற்றன.
2014.12.11 ஆம் திகதியில் மாத்தளை மற்றும் உக்குவெலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரச நிறுவனங்கள் 10 மற்றும் 6 இல் மேற்பார்வை இடம் பெற்றன.
விமர்சன ரீதியான மேற்பார்வைக்கு அமைவாக அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
1.3. உள்@ராட்சி மன்ற உத்தியோகத்தர்களை அரச மொழிக் கொள்கை தொடர்பாக அறிவூட்டல் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச உத்தியோகத்தர்கள் பொது மக்கள் மட்டுமன்றி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக அறிவினைப் பெறுவதன் அவசியத்தை உணர்ந்த இவ் அமைச்சானது இது தொடர்பாக நிகழ்ச்சிகள் பல ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இதற்கேற்ப 2013 ஆம் ஆண்டில் சப்ரகமுவ மாகாண உத்தியோகத்தர்கள் மற்றும் 2014 ஆம் வருடத்தில் வடமேல் மற்றும் தென் மாகாணங்களை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தது.
அதற்கேற்ப அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தல் 2014.10.10 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் பசறை முகாமைத்துவ நிறுவனத்தில் ஊவா மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்கள் சார்பாக வெற்றிகரமாக நடைபெற்றது.
ஊவா மாகாண சபை அரச நிறுவனங்களின் அரசகரும மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்டுள்ள 125 உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதன் கீழ் 2014.11.28 ஆம் திகதி கூட்டுறவு மற்றும் உள்ளக வியாபார அமைச்சின் கீழ் உள்ள பாவனையாளர் சேவை அதிகாரி மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் 100 பேரை தெளிவுபடுத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதிகாரிகள் 100 இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் அரசகரும மொழிக்கொள்கை மற்றும் அது தொடர்பான சட்டங்கள் தொடர்பாக பேராசிரியர் திரு.
பிரதிபா மகாநாம ஹேவா அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
அமைச்சுக்கு உட்பட்ட நிறுவனங்களின் பணிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் போது அந்தந்த நிறுவனங்கள் எதிர்நோக்கும் முரண்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
14 1.5. தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு அமைவாக இடம்பெற்ற செயற்பாடுகள் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பாடசாலை அடிப்படையாகும்.
இதற்கேற்ப 2014/2015 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சிக்கு அமைவாக நடைபெற்ற நிகழ்ச்சிகளை கீழே காண்க.
2014 தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு அமைவாக கேகாலை மாவட்ட பாடசாலை வாசிகசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அறிவுப்போட்டிக்கான தேவையான வினாக்கள் தயாரிக்கப்பட்டன.
கேகாலை மாவட்டத்தின் பத்து வாசிகசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கான பணம் வழங்கப்பட்டன.
தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சியின் போது வினா விடை போட்டிக்கு பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு மும்மொழி அகராதி வழங்கப்பட்டன.
2015ஆண்டு தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சிக்கு அமைவாக பாடசாலை வாசிகசாலைகளுக்கான சிங்கள தமிழ் ஆங்கில புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன் மும்மொழி அகராதிகள் 750 கொள்வனவு செய்யப்பட்டன.
1.6. அமைச்சின் செய்தி மடல் ஒழுங்கமைத்தல் இந்த நிகழ்ச்சியின் முக்கிய கருப்பொருளானது அசை;சின் நோக்கம் தொடர்பாகவும் மொழிக் கொள்கை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை தொடர்பாக பொதுமக்களை விழிப்புணர்வூட்டல்.
அதற்கேற்ப 2014 ஆண்டுக்கு 4 வெளியீடுகள் வெளியிடப்படவிருந்தன அதில் 2 வெளியிடப்பட்டு முடிவுற்றுள்ளது.
2. மும்மொழி இலங்கைக்கான நிகழ்ச்சிகள் 2.1. தொடர்பாடல் ஊடகம் மூலமாக தேசிய மொழிகளை மேம்படுத்தல் வானொலி நிகழ்ச்சிகள் கேட்பவர்களுக்கு அமைச்சின் பணிகள் தொடர்பாகவும் மொழிக் கொள்கை மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை தொடர்பாக விழிப்புணர்வை ஊட்டல்.
இந் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
அதற்கேற்ப சிங்களம் மற்றும் தமிழில் ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வர்த்தக சேவை மற்றும் தென்றல் அலைவரிசை ஊடாக ஒலிபரப்பப்படுகின்றது.
(ஒவ்வொறு ஜாயிறு தினங்களிலும் மு.
ப10.30 முதல் 11.00வரை ஒலிபரப்பப்படும்).
இது வரையில் 52 நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டுள்ளதுடன் ஒவ்வொறு புதன் கிழமைகளிலும் அமைச்சில் ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2.2. மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலயங்களில் இரு மொழி உதவு நிலையங்கள் உருவாக்குதல் அரச நிறுவனங்களில் பொது மக்கள் தாம் விரும்பிய மொழியில் சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்பை இலகுபடுத்துவதை நோக்கமாக கொண்டு 2012 தொடக்கம் இரு மொழி உதவு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் கீழ் இதுவரையும் 72 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலகங்களில் 72இரு மொழி உதவு நிலையங்கள் இவ் அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் முகமாக பிரதேச செயலக காரியாலயங்களுக்கு இவ் காலம் பாடசாலை தொகை மாணவர்கள் தொகை 2014.01.06 முதல்2014.02.10 வரை 03 860 2014.10.10 முதல் 2014 11.19 வரை 07 1005 15 அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2013 ஆம் வருடத்தில் இவ்விடயத்தில் இன்னுமொரு படி மேலாக மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் 19 இல் இரு மொழி உதவு நிலையங்கள் அமைத்து வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் வருடத்தில் இரு மொழி பிரதேச செயலகங்கள் 6 இலும் மாவட்ட செயலகங்கள் 8 இலும் இரு மொழி உதவு நிலையங்கள் அமைக்க தீர்மாணிக்கப்பட்டது.
அதற்கேற்ப வவுனியா, மொணராகலை, களுத்தறை, மன்னார், நுவரெலியா, கண்டி, கடவத்சதர, இரத்தினபுரி, லாகுகல, மாத்தறை, முல்லைத்தீவு, கேகாலை, குருநாகல் போன்ற மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரு மொழி உதவு நிலையங்களுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கான இரு மொழி உதவு நிலையத்துக்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
2.3. அரச சேவை இருமொழியாக்கல் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு அமைவாக அரச சேவையை வலுப்படுத்தும் முகமாக 2009.11.25 ஆம் திகதி அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2009 அரசமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அனைத்து அரச நிறுவனங்களிலும் பிரதான அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் மற்றும் அரசகரும மொழி நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் மத்தியில் தமது நிறுவனத்தில் அரச மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்த பூரண பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் 2010.09.01ஆம் திகதிய அரச நிர்வாக சுற்றறிக்கை 03/2010 ஊடாக அரச நிறுவனங்களின் கடித தொடர்புகளின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனூடாக பொது மக்கள் தாம் விரும்பிய மொழியில் சேவையை பெற்றுக் கொள்வதற்கு அரச சேவையில் சிறந்த நிர்வாகத்துக்கான திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
2014.01.21 திகதி அரச நிர்வாக சுற்றறிக்கை 01/2014 அரச உத்தியோகத்தர்கள் மூலம் அடையப்பட வேண்டிய அரச மொழித்தேர்ச்சி மற்றும் அது தொடர்பான விடயங்கள் உள்ளடங்கப்பட்டுள்ளதுடன் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை அறிந்து கொள்ளல் மற்றும் சேவை வழங்குவதன் முக்கியத்துவம் தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தோடு அரச உத்தியோகத்தர்கள் மூலம் பெற வேண்டிய அரசகரும மொழித் தேர்ச்சி தொடர்பாக விடயங்கள் ஆராயப்பட்டு அனுமதி வெளியிடுவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குழு அறிக்கை மூலம் அனுமதி 28 தொடர்பாக 16 குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்து விடயங்கள் ஒன்றாக்கப்பட்டு அரசசேவை இருமொழியாக்கல் அமைவாக இது வரை அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக திருப்பதிகரமான தெளிவினைப் பெற வேண்டும்.
அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சுக்கு உள்ள தொடர்புகள் தொடர்பான கூட்டம் 2014.09.01 திகதி அமைச்சுகளின் செயலாளர்கள் மத்தியில் இடம்பெற்றது.
பிரதான விசேட அதிதியாக கௌரவ அமைச்சர் கலந்து கொண்டார்.
அரசகரும மொழிக் கொள்கை சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கை இன ஒற்றுமை தொடர்பாக முன்வைக்கப்பட்டது.
கலந்துரையாடல் நிகழ்வு செயலானரின் தலைமையில் இடம்பெற்றது.
அமைச்சுகளின் செயலாளர்கள் 40 பேர் உட்பட மேலும் 128 பேர் கலந்து கொண்டனர்.
3. இரு மொழி மக்கள் செயற்பாட்டு நிகழ்ச்சி 3.1. மொழிச்சங்கங்கள் உருவாக்குதல் இரு மொழிகளால் இதயப10ர்வமாக இணைந்த சமாதானம் மிக்க ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு அரசகருமமொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நிகழ்ச்சியாக மொழிச்சங்க தேசிய திட்டத்தை குறிப்பிடலாம்.
இந்நிகழ்ச்சி 2012 வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 2428 மொழிச்சங்கங்கள் இலங்கை பூராவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு சமமாக பொது மக்கள் மத்தியில் சிங்கள தமிழ் மொழிகளில் கற்பதற்கான வாய்ப்பினை முன்னேற்றுவதுடன் இருமொழிகளை மேம்படுத்துவதை நோக்கமாக நோக்கமாகக் கொண்டு மொழி வகுப்புகள் 206 ம் மாவட்டங்கள் 25ஐ உள்ளடங்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கேற்ப பொது மக்கள் தமது பிரதேசத்தில் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட புரிந்துணர்வானது சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
மொழிச்சங்கங்கள் ஊடாக நடைபெறும் இன்னுமொரு முக்கிய விடயமாக இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் ஒவ்வொருவருக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அந்த நிகழ்ச்சி திட்டங்கள் ஊடாக சிங்கள தமிழ் தேசிய விழாக்கள் ஒழுங்குபடுத்தல் இளைஞர் பங்குபற்றல் நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தல்.
மொழி புரிந்துணர்வின் ஊடாக சுயதொழில் வாய்ப்புக்கான நிகழ்ச்சிகள் நடாத்துதல்.
சிங்கள தமிழ் உறவுகளை வலுப்படுத்த முகாம்கள் மற்றும் மொழிப்பட்டறைகள் நடைமுறைப்படுத்தல்.
3.2. மொழிச்சங்க செயற்பாட்டு இயந்திரத்தை ஒழுங்குபடுத்தல் மற்றும் மொழிச்சங்கங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தல்.
17 மொழிச்சங்க செயற்பாட்டை வினைத்திறத்துடன் முன்கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டமாகும் அதற்கேற்ப 2014.04.21 கௌரவ அமைச்சரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
அமைச்சு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் நிதி அமைச்சுகளை பிரதிநிதித்துவப்படுத்தி உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.
மொழிச்சங்கங்களில் ஆரம்பம் முரண்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மொழிச்சங்க செயற்பாடு தொடர்பான நிகழ்ச்சிகள் கீழ் மொழிச்சங்க பிரதேச மாநாடுகள் 2014.05.10ஆம் திகதி குருவிட, இரத்தினபுரி 2014.05.27ஆம் திகதி ஓபநாயக, கொடகவெல 2014.05.30ஆம் திகதி பலாங்கொடை ஆகிய பிரதேச செயலக காரியாலயங்களில் வெற்றிகரமாக இடம்பெற்றன.
2014.07.11 திகதி தனமல்வில பிரதேச செயலக காரியாலயத்தில் மொழி மாநாடு இடம்பெற்றது.
தனமல்வில புத்தள வல்லவாய போன்ற பிரதேசங்களின் மொழிச்சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அந்த பிரதேசங்களின் மொழிச்சங்கம் தொடர்பான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.
இரத்தினபுரி மாவட்ட மொழிச்சங்கம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு 2014.09.12 திகதி இடம் பெற்றது.
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் மொழிச்சங்க பயிற்சி ஆசிரியர்கள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் 35 பேர் கலந்து கொண்டனர்.
2014.10.14 திகதி எம்பிலிபிடிய மொழிச்சங்க மாநாடு இடம் பெற்றது.
70 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மொழிச்சங்க முரண்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மொழிச்சங்க பிரதேச செயலமர்வு மூலமாக பெற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து விடயங்களும் மீளாய்வு செய்யப்பட்டு மாகாண மத்திய நிலையத்தில் முகாமைத்துவ திட்டம் ஒழுங்கமைப்பதற்கு உபயோகிக்கப்படவுள்ளது.
3.3. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கு அமைவாக மொழிச்சங்கள் மூலமாக முன்வைக்கப்படும் நிகழ்சித்திட்டங்களுக்கு அமைவாக நிதியுதவி வழங்குதல் இந்த அமைச்சின் நோக்கங்களை இலங்கை பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
திட்டமிடும் போது இது தொடர்பாக 200 நிகழ்ச்சித்திட்டங்களுக்காக நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
அதற்கேற்ப இரத்தினபுரி கம்பஹா பதுளை நுவரெலியா பொலநறுவை மற்றும் கண்டி மொழிச்சங்கங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட தைப்பொங்கள் விழாவுக்கான நிதியுதவி வழங்கல்.
களனி மொழிச்சங்கம் மூலம் நடைபெற்ற தமிழ் மொழி ஒரு நாள் செயலமர்வுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
திம்புலாகல வசந்த உதாணய பொலநறுவை மிகார மாதா மொழிச்சங்க உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
மொழிச்சங்க இணக்க முகாம் மற்றும் செயற்பாட்டு சிரமதானப் பணிகள் ருவன்வெல்ல மல்லிகா மொழிச்சங்கம் மூலம் நடைபெற்றது.
குருநாகல் மாவட்ட ஹொரம்பாவ மொழிச்சங்கங்கள் இணைந்து தரிசித்தல் மற்றும் கலை நிகழ்வுகளை வெற்றிகரமாக செயற்படுத்தியது.
இரத்தினபுரி மீடிபொல மத்திய மகா வித்தியாலயத்தின் புணரமைப்பு முகாம் மற்றும் பல்வகை கலாசார நிகழ்வு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீடிபொல சரஸ்வதி மொழிச்சங்க உறுப்பினர்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.
மேலும் பொலநறுவை மாவட்டத்தில் தமன்கடுவ பிரதேச மொழிச்சங்கங்கள் இணைந்து புலதிசி மிதுதம் சுற்றுலா நிகழ்ச்சியினை ஒழுங்கு செய்திருந்தது.
கண்டி உடபளாத ரண்தரு கலாசார பகிர்வு நிகழ்ச்சிகள் அந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து மொழிச் சங்கங்களும் இணைந்து செயற்படுத்தியது.
மீரிகமவில் அனைத்து மொழிச் சங்கங்களினதும் சிங்கள தமிழ் உறுப்பினர்கள் இணைந்து பல்கலாசார புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தது.
கஸ்பேவ அனைத்து மொழிச்சங்கங்களும் இணைந்து தேசிய ஒற்றுமைக்கான சிங்கள தமிழ் பக்மஹா 18 விழாவுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
தெஹிவலை மொழிச்சங்க உறுப்பினர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட சமாதான நிகழ்வு தெஹிவலை பிரதேச செயலக காரியாலய ஏற்பாட்டில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இரண்டாம் கட்ட 15 செயற்பாட்டுத்திட்டங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
ய10லை மாதம் நிகழ்ச்சித்திட்டம் 26க்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
இரத்தினபுரி பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
குருநாகல் மொழிச்சங்கங்கள் இணைந்து ஒழுங்குபடுத்திய சிங்கள தமிழ் மொழி தின போட்டிக்கான நிதியுதவி வழங்கப்பட்டது.
மாத்தளை, பதுளை, குருநாகல,; சீதாவாக்க, மற்றும் களனி பிரதேச செயலக திட்டங்களுக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.
மொழிச்சங்கங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் இன்னொரு செயற்பாடாக இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வாழ்பவர்கள் மத்தியில் ஒற்றுமை சகோதரத்துவம் மற்றும் இனங்கள் மத்தியில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சித்திட்டங்களில் சிங்கள தமிழ் விழாக்களை ஒழுங்கமைத்தல்.
இளைஞர் பரிமாற்று நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தல்; மொழியை கற்பதன் ஊடாக சுயதொழில் வாய்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்தல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பட்டறைகள் ஏற்படுத்தல்.
மொழிப் பட்டறைகளை ஏற்படுத்தல்.
3.4. தேசிய மொழிகளை மேம்படுத்துவதற்கு அமைவாக புத்தகங்கள் மொழிபெயர்த்து வெளியிடுதல் பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இரு மொழித் தேர்ச்சியை மேம்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியாகும்.
அதன் கீழ் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அவர்களால் எழுதப்பட்ட சிங்கள தமிழ் ஆங்கில கதைகள் மொழிபெயர்ப்புக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பேராதணை பல்கழைக்கழகம் கிழக்கு பல்கழைக்கழகம் மற்றும் சபரகமுவ பல்கழைக்கழக நிறுவனங்களில் இடம் பெற்றது.
சிறுகதை புத்தகங்கள் 10 தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ஹெஜ்ஜி மாலய எனும் சிறுவர் நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பு கிட்டியும் கழுத்து மணிமாலையும் என நாவலின் 1000 பிரதிகளும், கோழி அம்மாவும் மயில் குஞ்சுகளும் நாவலின் சிங்கள மொழி பெயர்ப்பு கிகிலி அம்மா சஹ மொணரா பெடவ் நாவலின் 1000 பிரதிகள் பதிப்பிக்கப்பட்டது.
அத்தோடு சிங்கள தமிழ் சிறுகதை தொகுப்புகள் இரண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன் அதில் 1000 வீதம் பதிப்பிப்பதற்காக திட்டமிடல் பிரிவில் வழங்கப்பபட்டுள்ளது.
4. தேசிய மொழிகள் திட்டத்துடன் இணைந்து நடாத்திய செயற்பாடுகள் 4.1. அரசகரும மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக நிகழ்ச்சிகள் திட்டமிடல் தலைமைத்துவ மற்றும் நிறுவனத்தை பலப்படுத்த தொடர்பாக மொழிப்பிரிவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குதல்.
அமைச்சின் உத்தியோகத்தர்களின் தேர்ச்சியை மேம்படுத்துவதன் ஊடாக மொழிப்பிரிவு உத்தியோகத்தர்களின் கணிணி அறிவை மேம்படுத்தும் முகமாக தேவையான 19 கற்கைநெறிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆண் பெண் பால் நிலை சமத்துவம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஊடாக தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் இணைப்பாளர் மற்றும் உதவுனர்களுக்கு அறிவ10ட்டும் நிகழ்ச்சி சிங்கள தமிழ் மொழி மூலம் 02 2014.09.18 மற்றும் 19 திகதிகளில் இடம் பெற்றது.
73 உத்தியோகத்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் 43 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
அத்தோடு 2014.11.20 ஆம் திகதி தேசிய மொழிகள் திட்டத்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளன.
அமைச்சு அரசகரும மொழிகள் திணைக்களம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அமைச்சின் அனைத்து பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
செயலமர்வில் செயலாளர் கலந்துகொண்டனர்.
அத்தோடு தேசிய மொழிகள் திட்டம் தொழில்நுட்ப ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
2015 வருடம் 3 மாதங்களுக்கான தேசிய மொழிகள் திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகள் சார்பான செயற்பாடுகள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.
அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி 03 நடாத்தப்பட்டது.
அதற்கேற்ப 2014.06.16 திகதி முதல் 2014.06.20 வரை சிங்கள மொழி மூலமான செயலமர்வும் 2014.06.23 திகதி முதல் 2014.06.27 ஆம் திகதி வரை தமிழ் மொழி மூலம் செயலமர்வும் 2014.07.28 ஆம் திகதி முதல் 2014.08.01 திகதி வரை சிங்கள மொழி மூலமும் இடம் பெற்றன.
இந்த நிகழ்ச்சியில் மனித வள விசேட தணஞ்சய ஹெட்டிஆரச்சி அவர்கள் மற்றும் சபீரா கப10ர் அவர்கள் இதில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
பயிற்சி கைநூல் ஒழுங்கமைவதற்கு அமைவாக நடவடிக்கைகள் அமைச்சின் வழிகாட்டலில் இடம் பெற்றது.
அதற்கேற்ப செயலமர்வுகள் 03 வெற்றிகரமாக இடம்பெற்றது.
சிங்கள மொழி மூலம் 49 உத்தியோகத்தர்களும் தமிழ் மொழி மூலம் 22 பயிற்சி பெற்றனர்.
அங்கு பேச்சுத்திறமை வெளிப்படுத்தல் முன் வைத்தல் நிகழ்ச்சிகளை நடாத்துதல் செயலமர்வுகள் நடாத்துதல் தொடர்பாக நடைமுறை சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் இலங்கை பூராகவும் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு உள்வாங்கப்படுவர்.
அமைச்சின் கொள்கை ஆய்வு மற்றும் மேற்பார்வை பிரிவினை வளமூட்டும் விதத்தில் ஆய்வு முறைமை தொடர்பான சான்றிதழ் கற்கைநெறி 2014.10.16 திகதி முதல் 2014.11.05 திகதி வரை மார்கா நிறுவனத்தில் இடம் பெற்றது.
அமைச்சு மற்றும் அதன் உள்ளக நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
ஆய்வு முறைமை மற்றும் ஆய்வு அறிக்கை தயாரித்தல் தொடர்பான அறிவு வழங்கப்பட்டது.
2014.11.10திகதி மேற்பார்வை தொடர்பான புத்தி ஜீவிகள் குழுக் கூட்டம் இடம் பெற்றது.
கனடா விசேட அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதற்கான தொழில் நுட்ப மற்றும் நிதியுதவிகள் கனேடிய நிதியுதவியின் கீழ் இயங்கும் தேசிய மொழிகள் திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
வழிகாட்டிக் கைநூலின் பிரதிகள் 3000 பதிப்பிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டிக் கைநூலில் அரச நிறுவனங்களில் அரச மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக பின்பற்ற வேண்டிய முறைமைகள் தொடர்பாக அடிப்படை படிமுறைகள் 04 மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு அவசியமான முறையான திட்டங்கள் அரச நிறுவனங்களில் உள்வாங்கப்படுவதன் ஊடாக பொது மக்களுக்கு இரு மொழி சமமான வாய்ப்பினை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்குவதுடன் பொது மக்களின் நிதியானது சிறந்த வகையில் பாவிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது.
தற்போது இந்த அமைச்சின் மூலம் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்ற மொழி தொடர்பான அறிவூட்டலின் போது இந்த மொழிக் கைநூல் வழங்கப்படுகின்றது.
2014 ஆம் ஆண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் மொழி தொடர்பாக அறிவூட்டல் செயலமர்வின் போது இக் கைநூல் வழங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு வழித்தட திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதான அமைச்சுகள் 06 மற்றும் அதன் நிறுவனங்கள் மத்தியில் மொழித்திட்டம் ஒழுங்கமைக்கும் திட்டம் இவ் அமைச்சின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த கருத்தை முதனிலைப்படுத்தி இந்த அமைச்சின் மூலம் 2012 ஆம் ஆண்டு வழித்தட திட்டம் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக அனைத்து அரச நிறுவனங்களையும் ஒன்றிணைத்தல் இடம்பெறுகின்றது.
வழித்தட திட்டம் மூலம் அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஐந்தாண்டு குறுகியகால மற்றும் நீண்ட கால உபாய மார்க்கங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இந்த அமைச்சின் மூலம் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் 2016-2020 வரையாகும்.
வழித்தட திட்ட நிகழ்ச்சியின் அடிப்படை மூலம் பொது மக்களுக்கு மிகவும் நெருங்கிய சேவை வழங்கும் வகையிலான 16 பிரதான அமைச்சுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அந்த அமைச்சுகளுக்கிடையில் அரச நிர்வாக மற்றும் உள்நாட்டளுவல்கள் அமைச்சு கல்வி அமைச்சு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சு சுகாதார அமைச்சு நீதி மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பிரதான இடம் வகிக்கின்றது.
இந்த அமைச்சின் ஏனைய நிறுவனங்களான அரசகரும மொழிகள் திணைக்களம் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இவ் ஐந்தாண்டு திட்டத்தை ஒழுங்கமைத்து முடித்துள்ளது.
இச் செயற்பாட்டு திட்டத்துக்கு ஏற்ப அடிப்படை நிகழ்ச்சி ஆரம்பம் 2015 வருடம் இடம் பெறுவதுடன் வழித்தட திட்டம் செயற்படுத்தல் 2016 வருடத்தில் இருந்து எதிர்காலத்தில் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
4.4. பிரதேச சேவைகள் ஊடாக புத்தாக்க மாதிரிகளை கட்டியெழுப்புதல் 2014 வருடத்தில் இந்த அமைச்சின் மூலம் குறிப்பிடப்பட்ட புத்தாக்க மாதிரிகள் தொடர்பாக 08 மேற்பார்வை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் மூலம் அரசமொழிக் கொள்கை வினைத்திறத்துடன் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இது தொடர்பான மாதிரி நிறுவனங்களை கட்டியெழுப்பும் நிகழ்ச்சியாக இந்த புத்தாக்க மாதிரிகளை குறிப்பிடலாம்.
அதற்கேற்ப 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை இலங்கையில் பல்வேறுபட்ட அரச நிறுவனங்கள் பிரதிநிதிப்படுத்துவதன் ஊடாக புதிய புத்தாக்க மாதிரிகள் 14 இது வரை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர சபைகள் -கொழும்பு நுவரெலியா பதுளை காலி நகர சபை –வவுனியா திருகோணமலை பிரதேச சபை –கந்தளாய் வைத்தியசாலைகள் - திருகோணமலை காலி பேராதனை பிரதேச செயலகம் - பண்டாரவலை பொலிஸ் நிலையம் -நுவரெலியா திருகோணமலை வவுனியா 2014ஆம் வருடத்தில் இந்த அமைச்சின் மூலமாக மேற்குறிப்பிட்ட புத்தாக்க மாதிரிகள் 08 மேற்பார்வை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் மூலம் அரசகரும மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு அமைவாக அந்த நிறுவனங்கள் எதிர் நோக்குகின்ற முரண்பாடுகள் இணங்கண்டு அமைச்சின் மூலம் வழங்கக் முடியுமான சேவை தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
அத்தோடு புத்தாக்க மாதிரி இரு மொழி பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள அரச நிறுவனங்களுக்கு விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வருடத்தில் ஆசிய அபிவிருத்தி மன்றத்தின் தொழில்நுட்ப அனுசரனையின் கீழ் இந்த நிகழ்ச்சிகளை முன்னெடுக்க அமைச்சு முன்வந்துள்ளது.
4.5. மாகாண மத்திய நிலையங்கள் ஸ்தாபித்தல் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினது சேவைகளை மாகாண மட்டத்தில் வழங்குவதன் ஊடாக அதன் சேவைகளை விரிவு படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டமாக இம் மாகாண மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை குறிப்பிடலாம்.
இது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவும் 2013.08.29 திகதி நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதற்கமைவாக இவ் அமைச்சின் மூலம் 2013 ஆம் வருடத்தில் வடமாகாண மத்திய நிலையம் கிளிநொச்சியிலும,; சபரகமுவ மாகாண மத்திய நிலையம் குருவிட்டவிலும் ஆரம்பிக்கப்பட்டது.
22 2015 ஆம் வருடத்தில் மத்திய மாகாண நிலையம் கண்டி மாவட்டத்திலும், கிழக்கு மாகாண நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்திலும், தென் மாகான மத்திய நிலையம் மாத்தறை மாவட்டத்திலும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
வடமேல் வடமத்திய மற்றும் ஊவா மாவட்டங்களுக்கான மாகாண மத்திய நிலையம் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாகாண மத்திய நிலையத்தின் முன் ஏற்பாட்டில் மொழிச்சங்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும் நிகழ்வு 2014.12.13 திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம் பெற்றது.
பயிற்சிக்காக பாடசாலை ஆசிரியர்கள் அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் தனியார் சேவையில் உள்ள உத்தியோகத்தர்கள் மொழிச்சங்க உறுப்பினர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட 31 பேர் கலந்து கொண்டனர்.
பயிற்சி நிறைவின் பின்னர் இவர்கள் வட மாகாண மொழிச்சங்க வகுப்புகளுக்கு கற்பித்தலுக்காக இணைத்துக் கொள்ளப்படுவர்.
4.6. பொது மக்கள் பங்குபற்றல் நிதி பொது மக்கள் பங்குபற்றல் நிதியின் மூலம் தேசிய மொழிகள் கருத்திட்டத்தின் பிரதான காரியங்கள் 02ற்காக அமைச்சுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டது.
2013 வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட மொழிச்சங்க செயற்பாட்டு இணைப்பு நிலையங்கள் 05 திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கல்.
2014 வருடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மொழிச்சங்க செயற்பாட்டு இணைப்பு நிலையம் 05 திட்டங்களுக்காக நிதியுதவி வழங்குதல்.
இதன் முதல் செயற்பாட்டின் கீழ் எஹலியகொடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மொழிச்சங்க செயற்பாட்டு இணைப்பு நிலையம் மூலம் முன்வைக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்துக்காக நிதியுதவி வழங்கப்பட்டது.
அத்தோடு இரத்தினபுரி மாவட்ட செயற்பாட்டு இணைப்புக் குழு 05 உருவாக்கப்பட்டது.
(குருவிட்ட இரத்தினபுரி பலாங்கொடை கொடகவெல ஓபநாயக) வவுனியாவிலும் மாவட்ட மொழிச்சங்க செயற்பாட்டு குழு உருவாக்கப்பட்டது .
2014.11.03 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
கஹடஸ்திலிய செயற்பாட்டுக் குழு மூலம் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்காக தேசிய மொழிகள் கருத்திட்ட நிறுவனம் மூலம் ரூ.
140 000 நிதியுதவி வழங்கப்பட்டது.
இரண்டாம் செயற்பாட்டின் கீழ் பதுளை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மொழிச்சங்க செயற்பாட்டு இணைப்பு நிலைய நிகழ்ச்சித்திட்ட அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டது.
பதுளை செயற்பாட்டு நிலையம் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட சிங்கள தமிழ் புதுவருட பல்கலாசார பல்வகைத்தன்மை நிகழ்வுக்காக தேசிய மொழிகள் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2014.09.12 ஆம் திகதி குருவிட்ட மொழிச்சங்க செயற்பாட்டு இணைப்புக் கூட்டம் இடம் பெற்றது.
குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவின் மொழிச்சங்க நிகழ்ச்சிகளுக்கு அமைவாக முரண்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
2014.09.15 ஆம் திகதி கிளிநொச்சி மொழிச்சங்க செயற்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது.
கஹடகஸ்திகிலிய மொழிச்சங்க செயற்பாட்டு நிலைய உறுப்பினர்களின் தேர்ச்சி மட்டத்தை வளப்படுத்தல் தொடர்பாக அடிப்படை கலந்துரையாடல் 2014.02.18 ஆம் திகதி இடம் பெற்றது.
2014.02.28 -2014.03.02 திகதி வரை கஹட்டகஸ்திகிலிய மொழிச்சங்க செயற்பாட்டு நிலைய உறுப்பினர்களின் தேர்ச்சி மட்டத்தை வளப்படுத்தல் இடம் பெற்றது.
இதற்காக அமைச்சின் பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
கரைச்சி மொழிச்சங்க செயற்பாட்டுக் குழு அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
23 03.2 சமூக ஒருமைப்பாட்டுப் பிரிவு அறிமுகம் ஒரு நாட்டிலே வாழுகின்ற அனைவரும் அந்நாட்டின் பிரசைகள் எனக்கொண்டு அனைவரும் வாழ்வதற்கான சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதானது அந்நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதும் உதவும்.
அப்பணியினை நிறைவேற்றுவதற்கு சீரான பாதையொன்றினை தயாரித்தல் வேண்டும்.
அதாவது தெளிவான கொள்கை ஒன்றினுள் செயலாற்றுதல் வேண்டும்.
சமூக ஒருமைப்பாட்டிற்கு நாட்டிலே கொள்கையொன்று இருக்கவில்லை.
எனவே அதனைத் தயாரிப்பதற்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு முன்வந்தது.
அதன் போது சமூக ஒருமைப்பாட்டு செயற்பாட்டிற்கு வசதியளிக்கும் போது இடை ஊடகங்களாக மொழி தொடர்புகள் மற்றும் சமூக பொறுப்புக்களில் ஈடுபட்டுள்ள பொது ஊடகமொன்றில் காணப்படுகின்ற முக்கியத்துவம் என்பவற்றினை இனங்காணுவதும் இதன் நோக்கமாகும்.
இதன் பிரகாரம் “சமூக ஒருமைப்பாட்டின் ஊடாக தேசிய ஒற்றுமை” எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக நலன்புரி வசதிகள், கல்வி, கலை மற்றும் கலாசார நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றினை உள்ளடக்கிய சமூக ஒருமைப்பாட்டு வாரமானது 2014.07.14 ஆம் திகதி முதல் 2014.07.20 ஆம் திகதி வரையில் நாடு முழுவதிலும் இடம்பெற்றது.
பிரதேச மட்டத்திலான சமூக மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சித் திட்டங்கள் சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் முக்கிய நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றாகும்.
மக்களின் ஊழியப் பங்களிப்பினைப் பெற்றுக் கொண்டு முன்பள்ளிகள், சிறுவர் பூங்காக்கள், சுகநல சேவைகள், முதியோர் இல்லங்கள், பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், ஜனசமூக நிலையங்களை புனரமைத்தல், குடிநீர் வசதிகளை ஒழுங்கு செய்தல், பாலங்கள், வீதிகள், பாடசாலைக் கட்டடங்களை புனரமைத்தல் உள்ளிட்ட அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.
2014 ஆம் ஆண்டிலே ஒரு மாவட்டத்தில் இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் இரண்டு வீதம் 46 நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமூக மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக புனரமைப்புச் செய்யப்பட்ட முன்பள்ளி நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நிகழ்ச்சித் திட்டமானது சமூக ஒருமைப்பாட்டு வாரத்தின் மற்றுமொரு பிரதான நிகழ்ச்சித் திட்டங்களில் ஒன்றாகும்.
இதனூடாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களின் மாதிரி வினா விடை பற்றி கலந்துரையாடுவதற்கும் மற்றும் பதில் எழுதும் முன்னாயத்தப் பயிற்சி ஒன்றினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டமானது ஒரு மாவட்டத்திற்கு இரண்டு நிகழ்ச்சித் திட்டங்கள் வீதம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் அதிபர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற வேண்டுகோளின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டிலே இவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்கள் 55 அமுல்படுத்தப்பட்டன.
சிங்கள மொழியிலும் மற்றும் தமிழ் மொழியிலும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன.
2014 ஆம் ஆண்டிலே 16,620 மாணவர்கள் இதன் ஊடாக நன்மையடைந்துள்ளனர்.
25 சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மொழி சங்கங்களை தொடர்புபடுத்திக் கொண்டு சமூக ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் 2014 ஆம் ஆண்டிலே 23 அமுல்படுத்தப்பட்டன.
அதனூடாக இனங்களுக்கிடையே நட்புறவு, மொழி அறிவு, திறமை மற்றும் மனப்பான்மை விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் உட்பட மொனராகலை மற்றும் புத்தளை பிரதேச செயலக அலுவலகங்களில் அறிவித்தல் பலகைகள் மும்மொழிகளிலும் தயாரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுச் சுற்றுலா, நாத யாத்திரை இசைக் கச்சேரி, அதிமேதகு சனாதிபதி அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற பட்டம் விடும் விழா, சமூக ஒருமைப்பாட்டிற்காக பணியாற்றுகின்ற பங்காளர்களை அழைத்து மாநாடு ஒன்றினை நடாத்துதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக கல்வி, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வினைக் கட்டியெழுப்புதல், சமூக ஒருமைப்பாடு தொடர்பாக அறிவூட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் ஊடாக ஒவ்வொரு துறைசார்ந்த இனத்தவர்களையும் வலுவூட்டல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பக்கட்டன.
பல்லின, பல்சமய மற்றும் நானாவித சமூக நிலைகளிலுள்ள ஒரு நாடான இந்நாட்டிலே அமைதியாகவும், ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து துரித அபிவிருத்தியினை நோக்கி பயணிக்கும் ஒரு நாடாக மாற்றியமைக்கும் நோக்குடன், மென்மேலும் பல விடயங்களை உள்ளடக்கி எதிர்வரும் ஆண்டிலும் சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
2.தேசிய ஒருமைப்பாட்டிற்கான மாநாடு நாட்டிலே நிலவிய மோசமான சூழ்நிலை மாறி அபிவிருத்தியினை நோக்கி பயணிக்கின்ற ஒரே இலங்கை தேசத்து மக்களாக வெற்றியினை நோக்கிப் பயணிக்கும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றது.
இந்நிலையினைப் புரிந்துகொண்டு பல்வேறு இனக் குழுக்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான நட்பினை உறுதிப்படுத்தி சமூகத்தின் சகவாழ்வு மற்றும் நிலைத்திருக்கும் தன்மை என்பவற்றிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு தேசிய ஒற்றுமைக்கான கலந்துரையாடலொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது.
இலங்கைச் சமூகத்திலே வாழுகின்ற அனைத்து இனங்கள், இனக் குழுக்கள், சமயங்கள் மற்றும் காலாசாரங்களுக்கு இடையே புரிந்துணர்வினை உறுதி செய்து ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதே தேசிய ஒற்றுமைக்கான மாநாட்டின் நோக்கமாக அமைந்தது.
இதனூடாக சகவாழ்வு மற்றும் நல்லாட்சி என்பவற்றினை ஏற்படுத்தி சமத்துவமிக்க சமூகம் ஒன்றினை கட்டியெழுப்புவதே நோக்கமாக அமைந்தது.
சிவில் சமூக பொறுப்புக்களை ஏற்பதற்கு உதவுகின்ற முறைபற்றியும் கலந்துரையாடப்பட்டது.
அதன் பிரகாரம் மக்களிடையே சிறந்த தொடர்பினை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு வசதியளிக்கப்படுவதுடன், தேசிய ஒற்றுமை பற்றிய செய்தியை நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தேசிய மாநாட்டினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டியொன்றும் நடைபெற்றது.
இப்போட்டியானது மாகாண மட்டத்திலும் மற்றும் அகில இலங்கை மட்டத்திலும் நடாத்தப்பட்டது.
அதில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் என்பன வழங்கப்பட்டன.
ஒரே இடத்தில் இந்த அனைத்துச் சேவைகளையும் மக்களுக்குத் தடையின்றி பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த சேவைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
(உதாரணமாக தேசிய அடையாள அட்டைக்குத் தேவையான புகைப்படங்கள் மற்றும் முத்திரைகள், பிறப்புச் சான்றிதழ், விவாகச் சான்றிதழ் மற்றும் மரண சான்றிதழ் என்பவற்றிற்காக அறவிடப்படுகின்ற கட்டணங்கள் மற்றும் புதிய விவாகங்களுடன் தொடர்படைய கட்டணங்கள் என்பனவும் அந்த நபர்களிடம் எதுவிட கட்டமுமின்றி பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
) இதனூடாக மக்களுக்குக் காலம் மற்றும் சிரமம் என்பன மீதப்படுத்தப்படுவதுடன், பிரசை ஒருவர் என்ற ரீதியில் தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான அடிப்படை ஆவணமான தேசிய அடையாள அட்டையினைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுவதன் மூலம் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர்.
இதன் போது பெற்றுக்கொடுக்கப்பட்ட சேவைகள், தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுத்தல்.
2014 ஆம் ஆண்டிலே சுமார் 2364 பேருக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தல், காலம் கடந்து பிறப்பினை பதிதல், திருத்தங்கள், அன்னளவான வயதுச் சான்றிதழ் பெற்றுக் கொடுத்தல், 2014 ஆம் ஆண்டிற்கு சுமாராக 6229 பேருக்கு மேற்படி ஆவணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய விவாகங்களை செய்து வைத்தல் 2014 ஆம் ஆண்டிலே மாத்திரம் விவாகமாகாது ஒன்றாக வாழ்க்கை நடாத்தும் நபர்கள் 413 பேருக்கு இலவசமாக விவாகப் பதிவு செய்து வைக்கப்பட்டது.
காணாமற்போன அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் சான்றிதழ்களை வழங்குதல் காணாமற்போன தேசிய அடையாள அட்டைகளுக்காக பொலிஸ் அறிக்கைகள் இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொடுத்தல் சமாதான நீதவான் சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுத்தல்.
இதனூடாக தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள், மரண மற்றும் விவாகச் சான்றிதழ்கள் என்பவற்றுடன் தொடர்புடைய சத்தியக் கடதாசிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதியோர் அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுத்தல்.
சிரேஷ்ட பிரசைகளுக்கு இலவசமாக புகைப்படங்களைப் பெற்றுக்கொடுத்து முதியோர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டிலே சுமார் 70 பேர் இதன் மூலம் நன்மையடைந்துள்ளனர்.
இந்த நடமாடும் சேவைகள் முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள், தோட்டப்புற பிரதேசங்கள், பின்தங்கிய பிரதேசங்கள் என்பன உள்ளடக்கப்படும் வகையில் நடாத்தப்பட்டுள்ளன.
4.சமூக ஒருமைப்பாட்டு இளைஞர் முகாம் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளைஞர்களிடையே சமாதானம், சகவாழ்வு மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட சமூக இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதன் ஊடாக இதய சுத்தியுடன் கூடிய இளம் சமூதாயம் ஒன்றினை உருவாக்குவதே இந்த இளைஞர் முகாமின் நோக்கமாகும்.
இளம் சமுதாயத்தினர் நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்பதற்கும் மற்றும் சமூகத்திலே மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டிலே முன்னணி வகிக்கக் கூடிய குழுவொன்றாக புரிந்து கொண்டு அமைச்சினால் ஒவ்வொரு ஆண்டிலும் விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றாக “சமூக ஒருமைப்பாட்டு” இளைஞர் முகாம் நடாத்தப்படுகின்றது.
ஓர் ஆண்டிலே இவ்வாறான முகாம்கள் 04 வீதம் நடாத்தப்படுவதுடன், ஒரு முகாமிலே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் 100 – 150 இடைப்பட்டவர்கள் பங்கேற்கச் செய்யப்பட்டனர்.
2014 ஆம் ஆண்டினுள் 3 இளைஞர் முகாம்கள் நடாத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 300 இளைஞர் யுவதிகள் இதில் கலந்துகொண் டுள்ளனர்.
மொனராகலை, நுவரெலியா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான முகாம்கள் நடாத்தப்பட்டுள்ளன.
29 இதன் போது வருகின்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி அதிகாரசபையானது தொழில் வழிகாட்டல் சேவையின் ஊடாக அவர்களுக்குக் காணப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் அதனூடாக ஏற்படுகின்ற தொழில் வாய்ப்புக்கள் என்பன பற்றிய விளக்கத்தினையும் வாய்ப்பினையும் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5. பெற்றோரை இழந்த மற்றும் ஒரு பொறுப்புதாரர் மாத்திரம் உள்ள பிள்ளைகளுக்கான சமூக ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் சமூக ஒருமைப்பாட்டுக் கொள்கையின் ஒரு இலக்காக அமைவது கல்விக்கான நுழைவாகும்.
இந்த உரிமையினைப் பெற்றுக் கொடுப்பதற்காக பொருளாதார, சமூக ஏற்றத்தாழ்வுகள் அல்லது இனத்துவத்தின் காரணமாக அல்லது சமயம் காரணமாக கல்வித் துறையினுள் எதுவித அசாதாரணமும் அல்லது துறைசார் வகையாதலை தடுப்பதற்காக கவனம் செலுத்தப்படுகின்றது.
துறைசார்ந்துள்ள குழுக்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக்கான நுழைவிற்கு வசதியளிக்கும் பொருட்டு பெற்றோரை இழந்த அல்லது ஒரு பொறுப்புதாரர் மாத்திரம் காணப்படுகின்ற பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்று எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
2014 ஆம் ஆண்டிலே கிளிநொச்சி, இரத்தினபுரி, வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
300 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளன.
இதனூடாக குறைந்த சலுகையுடைய மாணவர்களின் கல்விக்கு வசதியளிப்பதன் ஊடாக அவர்களை கல்வியின் பக்கம் கவனம் செலுத்த வைப்பதற்கும், சமூகத்திலே பீதிக்கப்படக் கூடிய குழுக்களின் அறிவு, திறமை, மனப்பான்மை விருத்தி என்பவற்றின் ஊடாக அவர்கள் சமூகமயப்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.
6. பெண்கள் தலைமைத்துவத்தை சமூக ஒருமைப்பாட்டிற்காக வலுவூட்டல்.
பெண்கள் சமூகத்திலே நிறைவேற்றுகின்ற பணியினைப் பலப்படுத்துவதற்காக அவர்களை சமூக ஒருமைப்பாட்டிற்காக வலுவூட்டும் நோக்குடன் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் சமூக ஒருமைப்பாட்டிற்காக பெண் தலைவிகளை வலுவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு வருட காலப் பகுதியினுள் அமுல்படுத்தப்பட்ட நிகழச்சித் திட்டம் ஒன்றான இதன் அடிப்படை 30 நோக்கமாக அமைவது 30 பெண்களை பெண் தலைவிகளாக சமூக ஒருமைப்பாட்டிற்காக வலுவூட்டுவதாகும்.
அமைச்சின் கண்காணிப்பின் கீழுள்ள இந்நிகழ்ச்சித் திட்டத்துடன் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சும் இணைந்து இது மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மொனராகலை மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் 15 பெண்கள் வீதம் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தலைமைத்துவம், சமூக ஒருமைப்பாடு, தொடர்பாடல், ஆண் பெண் சமூகத்தன்மை, மற்றும் துணை வலிமை என்ற அடிப்படையில் 05 பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டன.
இந்த பயிற்சி செயலமர்வின் ஊடாக பெற்றுக் கொண்ட அறிவினை செயற்படுத்துவதற்காக இந்த பெண்களுக்கு தமது இரு மாவட்டங் களிலும் சமூக ஒருமைப்பாடு, மொழி மற்றும் ஒற்றுமை என்பவற்றுட் தொடர்புடைய 03 கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
நிவாரண சுற்றுப் பயணம் மற்றும் மாவட்ட கூட்டங்களை நடாத்துதல் என்பவற்றின் ஊடாக இந்நிகழ்ச்சித் திட்டத்தை செயல் முறையில் அமுல்படுத்துவது இலகுவாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சித் திட்டமானது 2013 ஆண்டின் இறுதி காலாண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2014 ஆண்டு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டது.
7. கலாசார மற்றும் சமய விழாக்கள் பல்லின சமூகங்கள் வாழும் ஒரு நாடான இலங்கையினுள் சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த இனங்களுக்கு ஏற்ப அவர்களது சமயம், கலாசாரம் என்பன ஒன்றையொன்று வேறுபட்டு காணப்படுகின்றது.
தைப்பொங்கல் விழா, சிங்கள தமிழ் புத்தாண்டு விழா, ஹஜ் விழா, தீபாவளி, சரஸ்வதி பூஜை, நத்தார் உற்சவம் என்பன அவ்வாறான கலாசார விழாக்களாகும்.
இவ்வாறான ஒன்றுக்கொன்று வித்தியாசமான சமய மற்றும் கலாசார விழாக்களை கொண்டாடும் நிகழ்வானது எமது அமைச்சினால் வருடா வருடம் 31 மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஒரே சமூகத்தினுள் ஒன்றுக்கொன்று வித்தியாசமான சமய மற்றும் கலாசார பெறுமதிகள் பற்றி அறிந்து கொள்வதற்கு இச்சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
அதனூடாக இலங்கைச் சமூகத்தினுள் வாழுகின்ற ஒவ்வொரு இனத்தவர்களிடையேயும் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துகொள்ளல் மற்றும் பரஸ்பர கௌரமளித்தல், வரவேற்பு என்பன உறுதிப்படுத்தப்படுகின்றது.
இன பேதமின்றி அனைத்து இனத்தவர்களும் இந்த விழாக்களில் கலந்துகொள்கின்றனர்.
2014 ஆம் ஆண்டிலே எமது அமைச்சினால் இவ்வாறான விழாக்கள் நாடு முழுவதிலும் நடாத்தப்பட்டன.
யாழ்ப்பாணம், இரத்தினபுரி, மாத்தளை, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அவ்விழாக்கள் நடாத்தப்பட்டன.
8.வெளி நிறுவனங்கள் அமுல்படுத்துகின்ற சமூக ஒருமைப்பாட்டுக்கான நிதி அனுசரணை வழங்குதல்.
சமூக ஒருமைப்பாட்டினைக் கட்டியெழுப்பும் நோக்கில் சமூக ஒருமைப்பாட்டுடன் தொடர்புடைய நிகழச்சித் திட்டங்கள் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளல் அல்லது நிதி பங்களிப்பினைப் பெற்றுக்கொள்ளல் என்பன எமது அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன் பிரகாரம் 2014 ஆம் ஆண்டிலே நிதிசார் அனுசரணை பெற்றுக்கொடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வருமாறு.
அவையாவன.
“சிகித்தி புத்தாண்டு விழா”.
எம்பிலிப்பிட்டிய, “சுரல் நத”.
இம்புல்பே, சமூக ஒருமைப்பாட்டு பக்மஹ செனகெலிய”.
எஹலியகொட பிரதேசச் செயலக பிரிவுகள் இரண்டில் நடாத்தப்பட்டன.
“சகோதரத்வயே பக்மஹ செனகெலிய”.
” “பல்வகைமையின் ஒன்றிணைவானது பலமிக்க மும்மொழியில் இதய சுத்தியுடன் 32 அனைத்து மக்கள் கலாசார அடையாளங்களைப் பாதுகாக்கின்ற ஒற்றுமைமிக்க இலங்கை மக்களை கட்டியெழுப்புவோம்” என்ற அமைச்சரின் செய்தியுடன் இலங்கைக் குடியரசு சுகாதார ஊழியர்களின் 60 ஆவது ஆண்டு பூர்த்தி ஞாபகார்த்த வெளியீட்டில் அமைச்சிற்காக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டது.
சமய பக்தியை ஏற்படுத்தல், சகவாழ்வின் முக்கியத்துவம், நட்புறவு, ஒற்றுமையை ஏற்படுத்தல் என்பவற்றிற்காக எஹலியகொட பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அசிரிமத் புது தெமகுல” கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம்.
தேசிய மற்றும் சமய ஒற்றுமைக்கான சிறுவர் மன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட “சாமயே கீத்தய” மற்றும் சமூக ஒருமைப்பாட்டு ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட “சங்கலன கீ” நிகழ்ச்சித்திட்டம்.
மேலும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் அமைச்சின் ஏற்பாடுகளின் மூலம் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
அவற்றில், “சிறுவர்கள் மற்றும் பெண்கள் விரும்பக் கூடிய நாளைய தினம்” எனும் தொனிப் பொருளின் கீழ் சிறுவர்கள் மற்றும் பெண்களை விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்.
மகளிர் தினத்தை முன்னிட்டு “தொழில் புரியும் பெண்களின் நாளாந்த வாழ்க்கை மற்றும் மன அழுத்தம்” விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம்.
“பௌத்த கண்ணோட்டத்தின் பிரகாரம் பெண்கள்” மற்றும் “ஆண் பெண் சமத்துவத்திற்கு மதிப்பளிப்போம்” உள்ளிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ரத்மலானை கண் பார்வையற்றோர் கல்லூரியில் “அன்பு காட்டி எம்மை பராமரியுங்கள்” நிகழ்ச்சித் திட்டம்.
பெண் பிள்ளையின் சர்வதேச தினத்தை முன்னிட்டு “மகளே நீ தான் எமது எதிர்காலம்” நிகழ்ச்சித்திட்டம் மஹரகமை சுச்சரித்த சிறுவர் இல்லத்தில் நடாத்தப்பட்டது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடாத்தப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைச்சினால் ரூ.
242,111.60 பெறுமதியான ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன 33 03.3 நிர்வாகப் பிரிவு அறிமுகம் அமைச்சின் அலுவலக நிர்வாகம், மனித மற்றும் பௌதீக வளங்களின் முகாமைத்துவம் என்பன நிர்வாகப் பிரிவின் பிரதான தொழிற்பாடுகளாகும்.
அமைச்சின் உத்தியோகத்தர் குழாமிற்கு புதிய பதவி நிலைகளை ஏற்படுத்தும் அடிப்படையில் நீதி அலுவலர் பதவி அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, உள்ளககணக்காய்வாளர் பதவி தரம் உயர்த்தப்பட்டமை இவ்வருடத்தினுள் இடம் பெற்றுள்ளன.
மாகாண காரியாலயங்கள் 8 தொடர்பாக அமைச்சின் கீழ் 64 பதவி நிலைகளும், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் சார்பாக 20 பதவிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக அமைச்சினால் அலுவலக உதவியாளர் பதவி 3ம், சாரதி பதவி 1ம் மொழி அழைப்பு ஒருங்கிணைப்பாளர் பதவி மூன்றிற்கான ஆட்சேர்ப்பும் இடம் பெற்றுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான 205 அலுவலர்களின் ஆட்சேர்ப்பானது தொடர்புடைய ஆட்சேரப்;பு ஒழுங்குமுறைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நவம்பர் மாதத்தினுள் நியமனம் வழங்கவும் சேவை ஆரம்பபயிற்சி மற்றும், மொழிப் பயிற்சிவழங்கவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டு மாகாண காரியாலயங்களுக்கான உதவிப்பணிப்பாளர்கள் பதில் கடமையாற்றல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதோடு அபிவிருத்தி உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பப்படிவங்கள் கோரப்பட்டுள்ளது.
அமைச்சின் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மொழிக்கற்கை பயிற்சி மற்றும் அடையாளம் காணப்பட்ட பயிற்சி தேவைகளுக்கு ஏற்ப அலுவலர்களுக்கு தேவையான பயிற்சி வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
முகாமைத்துவ மீளமைப்பின் கீழான கருமங்கள் மற்றும் வேலைநடைமுறை மீளாய்வு அறிககையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் இடம்பெறுவதோடு, அவற்றுள் சில நடைமுறைப்படுத்தப்பட்டு முடிவடைந்துள்ளன.
அமைச்சின் இணையதளத்தை இற்றைப்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களினால் இற்றைப்படுத்தப்பட்டது.
அமைச்சுக்கான புதிய மின்னஞ்சல் தயாரிக்கும் பணி இடம்பெற்று வருகிறது.
மொழி அழைப்பு நிலையத்திற்கு வரும் அழைப்புகளை ஒலிப்பதிவு செய்யும் வசதி மற்றும் தரவு தளம் ஒன்றுடன் மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
34 03.4 திட்டமிடல் பிரிவு அறிமுகம் திட்டமிடல் பிரிவானது, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் பிரதான பிரிவுகளில் ஒன்றாகும்.
பெற்றுக் கொள்ளப்படும் பெறுபேறுகள், வினைத்திறன், விளைத்திறன் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக துறைசார் அடிப்படையில் அமுல்படுத்தப்படும் கருத்திட்டம்/நிகழ்ச்சித்திட்டம் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்பன மேற்கொள்ளப்படும்.
மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த முன்னேற்ற அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உயர் முகாமைத்துவ, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு முன்வைக்கப்படும்.
பிரதான பணிகள் கூட்டுத்திட்டம், செயற்பாட்டுத்திட்டங்கள், வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டுத் திணைக்களம் போன்ற நீண்டகால/ குறுங்கால திட்டங்களை தயரிக்க அமைச்சின் பல்வேறு பிரிவுகளானது அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுடன் ஒருங்கிணைதல்.
அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட முன்னோக்கு கருத்திட்டங்கள் தொடர்பான செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல்.
அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடல்.
மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த அறிக்கைகளை தயாரித்தல் மற்றும் அதனை அமைச்சின் செயலாளர், தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களம், வெளிநாட்டு உதவி மற்றும் வரவு செலவு திட்ட மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் ஏனைய அக்கறைகொண்ட பிரிவினர்களுக்கு சமர்பித்தலும்.
முன்னேற்றம் மற்றும் செயற்பாட்டு திட்ட அற்க்கையை அமைத்து வரவு செலவு தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்றத்திற்கு முன்வைத்தல்.
பிரிவின் தரவுகளை பராமறித்தல், இற்றைப்படுத்தல் மற்றும் விருத்தி செய்தல்.
வருடாந்த செயற்பாட்டு அறிக்கையை ஒழுங்கமைத்து பாராளுமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் கணக்காளருக்கும் சமர்ப்பித்தல்.
35 03.5 நிதிப் பிரிவு அறிமுகம் நிதி சேவைகள் ஒருங்கிணைப்புச் செய்தல், ஏற்புடைய பிரிவுகளை ஒருங்கிணைப்பதனூடாக நிரூபிக்கத்தக்க நிதி தகவல்களை மற்றும் அமைச்சின் முகாமைத்துவ முறைமையை பராமரித்தல்.
பிரதான பணிகள் பிரதம கணக்காளர் என்ற வகையில் அமைச்சின் செயலாளருக்கு அமைச்சின் நிதிக் கடப்பாடுகளை பூர்த்தி செய்யவும் பாராளுமன்றத்திற்கு வகைப்பொறுப்புக்கூறவும் உதவுதல அரசாங்கத்தின் நிதி விதிகள் மற்றும் ஒழுங்கு விதிகளுடன் இணங்கி செயற்படுதலை உறுதி செய்தல்.
நிதி முகாமைத்துவம் உட்பட சிறந்த நிதி கணக்கீட்டு முறைமையை தாபித்தலும் பராமரித்தலும்.
திறைசேரி, அமைச்சுக்கு கீழ்வரும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடனான கருத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்து நிதி அறிக்கைகள் மற்றும் வரவு செலவு தேவைகளை தயாரித்தல்/இற்றைப்படுத்தல்/மீள்பார்வை செய்தல் மற்றும் பூர்த்தி செய்தல்.
நிதி திட்டமிடல் மற்றும் வரவு செலவை தயாரித்தல்.
உரிய நேரத்திற்கு மற்றும் துல்லியமான நிதி அறிக்கையிடலை உறுதிப்படுத்தல்.
அமைச்சின் சொத்துக்களை முகாமை செய்தல்.
03.6 உள்ளக கணக்காய்வு பிரிவு அறிமுகம் அமைச்சில் மற்றும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆகியவற்றின் அணைத்து தளத்திலும் மேற்கொள்ளப்படும் சேவைகள் மற்றும் பணிகளை மீளாய்தல், அளவிடுதல், மதிப்பிடுதல், மற்றும் உள்ளக நிர்வாக முறையில் விடய பங்களிப்பு தொடர்பாக அறிக்கை இடுவதன் மூலம் முகாமைத்துவத்திற்கு உதவுதல்.
உள்ளக கணக்காய்வை பலப்படுத்த இதுவரை காணப்பட்ட உள்ளக கணக்காய்வு (இ.
உள்ளக கணக்காய்வுப் பிரிவின் பணிகள் பிழைகள் மற்றும் மோசடிகள் தடுப்பதற்காக அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களில் அமுலாக்கப்படும் உள்ளக நிர்வாக முறைமையின் வெற்றிக்கான தன்மையை மதிப்பிடலும் உள்ளக நிர்வாகத்தை பலப்படுத்த உதவுதல்.
கணக்குகள் மற்றும் வேறு அறிக்கைகளின் நம்பகத்தன்மையை நிர்ணயித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு முறைகளினால் சரியான நிதிக் கூற்றுக்களை தயார் செய்வதற்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை பரிசீலனை செய்தல்.
நிறுவனத்தின் பதவியணியினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்களின் செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
அமைச்சு மற்றும் அதன் கீழ் இருக்கின்ற நிறுவனங்களின் சொத்துக்களை எல்லா வகையான பாதிப்புகளில் இருந்தும் எவ்வளவு தூரம் பாதுகாக்கப்படுகிறது என்பதை தேடிப்பார்த்தல்.
தாபனக் கோவை, நிதிக்கோவை, பொது நிர்வாகம், திறைச்சேரி மற்றும் வேறு சுற்றறிக்கை மற்றும் நெறிப்படுத்துகை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை கண்காணித்தல்.
36 04.அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் அவற்றின் செயலாற்றுகைகள் 37 04.அரசகரும மொழிகள் திணைக்களம் அறிமுகம் 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக 1956.10.01ஆம் திகதியன்று அரசகரும மொழிகள் திணைக்களம் தாபிக்கப்பட்டது.
1987 – 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் 1988 – 16ஆம் அரசியலமைப்பு திருத்தத்திற்கும் அமைவாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டும் இலங்கையின் அரசகரும மொழிகளாக்கப்பட்டதோடு, ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டது.
’பாஷா மந்திரய’’, இலக்கம் 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய எனும் முகவரியில் அமைந்துள்ள இத் திணைக்களத்தின் பிரதான பதவியை அரசகரும மொழிகள் ஆணையாளர் வகிக்கிறார்.
நோக்கு சகவாழ்வுடன் கூடிய சமாதானமான மும்மொழிச் சமூகம்.
செயற்பணி இன ஒற்றுமை மற்றும் சமாதானத்தை நோக்கமாகக் கொண்ட அரசகரும மொழிக் கொள்கையை வினைத்திறன்மிக்கதாக நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கலும் ஒருங்கிணைத்தலும்.
திணைக்களத்தினால் நிறைவேற்றப்படும் பணிகள் 1. பொது நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 03/2007 மற்றும் 07/2007 பிரகாரம் அரசகரும மொழித்தேர்ச்சியை பெற்றுக்கொள்ள வேண்டிய அரச உத்தியோகத்தர்களுக்கான எழுத்து மூல மற்றும் வாய்மூல பரீட்சைகளை நடாத்தலும் சான்றிதழ்களை வழங்கலும்.
2. அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களின் மொழிபெயர்ப்பு பணிகளை நிறைவேற்றல் (சிங்களம் /தமிழ்/ ஆங்கிலம்) 38 3. பல்வேறு துறைகளுக்குரிய கலைச்சொற்றொகுதிகளை தொகுத்தல் (சிங்களம் /தமிழ்/ ஆங்கிலம்) 4. அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சி பரீட்சைகளுக்கான பாடப்புத்தகங்களையும் வழிகாட்டல் நூல்களையும் தொகுத்தலும் விற்பனை செய்தலும்.
5. மும்மொழி அகராதிகளை தொகுத்தல்.
6. நவீன தொழிநுட்ப முறைகளை பயன்படுத்தி சிங்களம் , தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் போன்றே சர்வதேச ரீதியான மொழிகளை கற்பித்தலும் பரீட்சைகளை நடாத்தலும்.
7. வெளி நிறுவனங்களின் பணிக் குழுவினருக்கு மொழித் தேர்ச்சி பரீட்சைகளையும் வினைத்திறன் காண் தடைப் பரீட்சைகளையும் நடாத்தல்.
39 2013ம் செயற்திட்டத்தின் படியான செயலாற்றுகை அரசகரும மொழிகள் திணைக்களத்தின் பொருளாதார முன்னேற்றம் தொ Æஇல செயற்பாடு உத்தேசிக்கப்பட்ட தொகை உண்மைச் செலவு விகிதம் 01 மொழித் தேர்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு உதவும் நூல்களையும் பயிற்சிப் புத்தகங்களையும் அச்சிடுதல்.
மொழித் தேர்ச்சி வாய்மூல (மீள்) பரீட்சையானது ஊவா மாகாணத்தில் 146 பரீட்சார்த்திகளின் பங்குபற்றுதலுடன் 2014.01.11ஆம் திகதி நடாத்தப்பட்டதோடு அதற்கு சமாந்தரமான மேல் மாகாண பரீட்சையானது 2014.02.10,11 மற்றும் 12 ஆம் திகதிகளில் 358 பரீட்சார்த்திகளின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டது.
2014 அரசகரும மொழித் தேர்ச்சி வாய்மூல பரீட்சைகள் மாகாண மட்டத்தில் நடாத்துவதை அடிப்படையாகக்கொண்டு வடமேல் மாகாணத்தின் 2549 பரீட்சார்த்திகளுக்கு 2014.11.15/16/22/23 மற்றும் 29ஆகிய நாட்களிலும் தென் மாகாணத்தின் 3821 பரீட்சார்த்திகளுக்கு 2014.11.15/16/22/23/29 மற்றும் 30 ஆகிய நாட்களிலும் பரீட்சை நடாத்தப்பட்டது.
2014.11.24/25/26 ஆகிய நாட்களில் ஊவா மாகாணத்தின் 2440 பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை நடாத்தப்பட்டது.
அதன்படி 2014 வருடத்தினுள் அரசகரும மொழித் தேர்ச்சி எழுத்து மூல பரீட்சையிலும் க.
த) பரீட்சையின் இரண்டாம் மொழியிலும் சித்திபெற்ற 6007 உத்தியோகத்தர்களுக்கான வாய்மூல பரீட்சை மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்டது.
அரசகரும மொழித் தேர்ச்சியை பெற்ற உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதலானது பரீட்சை பிரிவுக்குரிய இன்னொமொரு பணியாகும்.
1222 ஊவா மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் 2014.01.11 ஆம் திகதி வழங்கப்பட்டதோடு அமைச்சரின் தலைமையில் 2014.10.25 ஆம் திகதி எஹெலியகொட பிரதேச செயலகத்தில் 70 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
603 சான்றிதழ்கள் தபால் மூலம் உரிய உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பரீட்சை பிரிவின் ஓர் பணியாக வெளி நிறுவனங்களுக்கான பரீட்சைகளும் நடாத்தப்படுகின்றன.
அதன்படி ரன்டெம்பே தேசிய மாணவர் படையணி தலைமயகத்தின் 74 உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் அடிப்படை தமிழ் மொழி பரீட்சை 2014.01.20 ஆம் திகதியும் கொத்மலை தேசிய மாணவர் படையணி தலைமகத்தின் 107 உத்தியோகத்தர்களுக்கான உயர் தமிழ் பரீட்சை 2014.03.07 ஆம் திகதியும் நடாத்தப்பட்டன.
அநுராதபுர மாவட்ட வணிக சபையின் 74 உத்தியோகத்தர்களுக்கான தமிழ் விசேட எழுத்து மூல/வாய் மூல பரீட்சை 2014.04.29 ஆம் திகதி நடாத்தப்பட்டது.
அதே போன்று அரச மொழிகள் ஆணைக்குழுவிற்கான பிரதான முகாமைத்துவ உதவியாளரை நியமிக்கும் போட்டிப் பரீட்சை 2014.07.05 ஆம் திகதி 27 பரீட்சார்த்திகளுக்கு நடாத்தப்பட்டது.
41 மொழி பெயர்ப்பு உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டற் பரீட்சை 2014.10.25,26 ஆகிய திகதிகளில் 09 உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடாத்தப்பட்டது.
மொழித் தேர்ச்சி பரீட்சையை நடாத்துவதற்கு 2014ஆம் வருடத்தில் செலவிடப்பட்ட மொத்த தொகையானது ரூபா. 5419783.30 ஆகும்.
2.மொழித் தேர்ச்சியை பெற்றுக்கொள்வதற்கு உதவும் நூல்களையும் பயிற்சிப் புத்தகங்களையும் அச்சிடுதல்.
07/2007ஆம் அரச நிர்வாக சுற்று நிருப இலக்கத்திற்கு உட்படும் தொழில் புரிவோருக்கும் அரசகரும மொழித் தேர்ச்சியை கற்பதற்கு விருப்பமுள்ள அனைவருக்கும் எழுத்து ஊடகமாக பயன்படுத்தக்கூடிய முறையில் பாடநூல்களையும் ஏனைய துணை நூல்களையும் தயாரித்தல் மற்றம் விற்பனை செய்தலானது வெளியீடுகள் மற்றும் விற்பனை பிரிவின் முக்கிய பணியாகும்.
அதன்படி 2014 ஆம் ஆண்டில் பேச்சுத் தமிழ் புத்தகங்களின் 5000 பிரதிகளும்,எழுத்து தமிழ் புத்தகங்களின் 3500 பிரதிகளும், நாங்கள் சிங்கள,தமிழ்,ஆங்கிலம் கற்போம் புத்தகங்களின் 50000 பிரதிகளும் மும்மொழி சஞ்சிகையின் 1000 பிரதிகளும் அச்சிடப்பட்டன.
இதன் பொருட்டு 2014ஆம் வருடத்தில் செலவிடப்பட்ட மொத்த தொகையானது ரூபா. 5191443.60 ஆகும்.
3.அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களுக்கு மொழி பெயர்ப்புச் சேவைகளை வழங்கல் அங்கீகரிக்கப்பட்ட முறைகளுக்கு அமைவாக தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தரம்மிக்க மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்குதலானது மொழி பெயர்ப்பு பிரிவின் பணியாகும்.
அதன்படி தேசிய மொழிகள் திட்டத்தின் நிதி உதவியோடு திணைக்களத்தின் மூன்றாம் மாடியில் தாபிக்கப்பட்ட நவீன வசதிகளுடனான மொழி பெயர்ப்பு நிலையமானது ஜனாதிபதி செயலாளரினதும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினதும் தலைமையில் 2014.01.03 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இவ் வருடத்தில் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை மாதமொன்றிற்கு 05 நாட்கள் வீதம் மொழி பெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அரச மற்றும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களின் மொழி பெயர்ப்புக்களை மேற்கொள்வதன் கீழ் அந்நிறுவனங்களினால் வழங்கப்பட்ட 723 ஆவணங்களில் 3035 பக்கங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அதன் போது புதிய கலைச்சொற்தொகுதிகளை தாயரித்தலுடன் தற்போதுள்ள இரு மொழி கலைச்சொற்றொகுதிகளை கொண்டு மும்மொழி கலைச்சொற்தொகுதிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம்- சிங்களம் கலைச்சொற்றொகுதி தயாரித்தலின் கீழ் 12 பாட துறைகளுக்கு மும் மொழி 42 கலைச்சொற்றொகுதி தயாரிக்கப்பட்டுள்ளதுடன் இணையதளத்தில் அவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஏனைய பாட துறைகளில் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
ஆங்கிலம் - தமிழ் கலைச்சொற்றொகுதி தயாரித்தலின் கீழ் கல்வி, கட்டடிட நிர்மானம், மொழியியல், மற்றும் வரலாறு ஆகிய பாட துறைகளில் மும்மொழி கலைச்சொற்றொகுதி தாயரிக்கப்பட்டுள்ளன.
சட்டம், தகவல் தொழில்நுட்பம், உளவியல், புள்ளிவிபரவில், விவசாயம், தாவரவில், கணிதம், பௌதீகவியல், ஆகிய பாட துறைகளில் கலைச்சொற்றொகுதிகளில் 85% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய பாடத் துறைகளில் 3500 ற்கும் அதிகமான சொற்கள் சேர்க்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டு முடிந்துள்ளது.
5.தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான மொழிகளை மேம்படுத்தல் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான மொழிகளை கற்பதற்கு விருப்பமுடைய நபர்களுக்கான நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மொழி ஆய்வுகூடத்தில் சிங்களம்,தமிழ்,ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பாடநெறிகள் அரை ஆண்டு ரீதியில் நடைபெறுகின்றன.
அதன்படி 2014ஆம் வருடத்தில் 17 பாடநெறிகளின் கீழ் 1664 மாணவர்கள் மொழிக் கல்வியை பெற்றுள்ளனர்.
அப்பாடநெறிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்ததோடு அதற்கான மொத்த செலவானது ரூபா.1031344.00 ஆகும்.
முதல் அரை ஆண்டில் மொழிப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 599 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவமானது 2014.12.02ஆம் திகதி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றது.
இப் பாடநெறிகள் மூலம் வருடத்தில் அரசாங்கத்திற்கு ஈட்டப்பட்ட வருமானது ரூபா.11824500.00 ஆகும்.
04 நிகழ்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு விடயம் தொடர்பான 02 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.
25 அரச நிறுவனங்களினால் 112 பதங்கள் இப்பிரிவிற்கு சமர்பிக்கப்பட்டிருந்ததோடு அதில் 12 நிறுவனங்களின் 47 சிங்கள பதங்கள் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்டன.
05 நிபுணர் குழுவின் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளதோடு அதில் பங்குபற்றும் வளவாளர்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான அனுமதியை கோரும் கடிதங்கள் வேதனங்கள் மற்றும் பதவியணி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
7.அரச உத்தியோகத்தர்களின் மொழித் தேர்ச்சி தொடர்பாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்.
மேற் குறிப்பிட்ட சபையின் 8.2 (அ) ஆம் இலக்க பரிந் துரைக்கமைய அரச உத்தியோகத்தர்கள் இலகுவாக பயன்படுத்தக் 43 கூடிய பாடநூல்கள் 04 வீதம் சரளமான மொழியுடன் கூடிய சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தயாரித்தலானது திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பணியாகும்.
இதன் பொருட்டு செலவிடப்பட்ட மொத்த செலவானது ரூபா..27,00,000/- ஆகும்.
திணைக்களத்தின் பணிற்றொகுதியின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று 2014.12.29ஆம் திகதி நடாத்தப்பட்டது.
மேலும் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கமைய கட்டமைக்கப்பட்ட நேர்முக பரீட்சையின் மூலம் மொழி ஆய்வுகூட கண்காணிப்பாளர் பதவிக்கு 2014.07.23 ஆம் திகதி உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
திணைக்களத்தின் அனைத்து நிதி செயற்பாடுகளையும் பெறுகை நடவடிக்கைகளையும் நிறைவேற்றுதல் கணக்கு பிரிவினால் மேற்கொள்ளப்படும் பிரதான பணிகளாகும்.
திணைக்களத்திற்கு ஒதுக்கப்படும் வருடாந்த மதிப்பீட்டு ஏற்பாடுகளின் கீழ் பொது நிர்வாகத்திற்குரிய சம்பளத்தை செலுத்துதல் முதலான செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை செலவு செய்தலும் திணைக்களத்தின் மூலதன கருத்திட்டங்களுக்குரிய பெறுகை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இதன் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
சிறந்த நிதி கட்டுப்பாட்டுடன் மேற் குறித்த பணிகளை நிறைவேற்றுதலும் அது தொடர்பான திறைசேரிக்கும் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் அறிக்கையிடலும் முன்னேற்றத்தை சமர்ப்பித்தலும் மேற்கொள்ளப்பட்டன.
அதே போன்று வருடாந்த பொருட்கள் ஆய்வு நடவடிக்கைகளும் வருடத்தில் நிறைவேற்றப்பட்டன.
திணைக்களத்தின் வருடாந்த வரவு செலவு திட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை பேணல் மற்றும் முன்னேற்றத்தை மாதாந்தம், மூன்று மாதங்கள், அரையாண்டு, வருடாந்தம் என்ற ரீதியில் அமைச்சுக்கும் தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களுக்கும் அறிக்கையிடலானது அபிவிருத்தி பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது.
அதே போன்று ஏனைய சமாந்தர அமைச்சுக்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் மனித உரிமைகள் செயற்பாட்டு திட்டம், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு திட்டத்தின் கீழ் முன்னேற்றத்தை அறிக்கையிடலும் பாராளுமன்ற ஆலோசகர் குழுவிற்குரிய அறிகையிடல்களும் குறித்த காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டன.
அதே போன்று நூலகத்தில் இருந்த பழைய இராக்கைகளுக்கு பதிலாக புதிய இராக்கைகள் பயன்படுத்தி முறையான நவீன வடிவத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
9.விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் சந்தர்ப்பங்களும் தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2014 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பதை குறிக்கோளாகக் கொண்டு 6 நிகழ்ச்சித்திட்டங்கள் திணைக்களத்தினால் நடைமுறைபடுத்தப்பட்டன.
அதன் கீழ் பிரதான நிகழ்ச்சித்திட்டங்களாக கண்காட்சி மூலம் உள்ளடங்கப்பட்ட மூன்று மாவட்டங்களின் மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் சித்திபெற்ற 736 அரச உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்களின் தலைமையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதே போன்று திணைக்கள வெளியீடுகள் விற்பனை நிலையம் ஊடாக 1248 வெளியீடுகள் விற்பனை செய்யப்பட்டதோடு அதில் அரசுக்கு ஈட்டிய வருமானம் ரூ.
2,24,475.00 ஆகும்.
கண்காட்சி பூமியில் “நாங்கள் சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்போம்” புத்தகங்களின் 18000 பிரதிகள் இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதே போன்று இடம்பெற்ற கணனி சார்ந்த மொழி விளையாட்டுகளுக்கு திணைக்கள கண்காட்சி கூடத்திற்கு வந்தவர்களில் 80% க்கு அதிகமானோர் பங்குபற்றியதோடு 2014.02.24ஆம் திககியிலிருந்து கண்காட்சி நடைபெற்ற ஒவ்வொரு நாட்களிலும் காலையும் மாலையும் 2 காட்சிகள் “சமூக ஒருமைப்பாடு” என்பதை தொனிப் பொருளாகக் கொண்ட 2 நாடகங்கள் திணைக்கள பணிற்றொகுதியினரால் முன்வைக்கப்பட்டன.
அதே போன்று அமைச்சின் கூடம் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு சிங்களம்,தமிழ்,முஸ்லிம் ஆகிய இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மூன்று உத்தியோகத்தர்கள் நாளாந்தம் ஈடுபடுத்தப்பட்டனர்.
திணைக்கள கண்காட்சி கூடத்திற்கான மொத்த செலவானது ரூ.
4,11,305.66 ஆகும்.
நோக்கு பொது மக்களுக்குச் சேவையினை வழங்குகின்ற சகல நிறுவனங்களும் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரம் செலுத்தும் நிறுவனமாக இருத்தல்.
செயற்பாடு அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக நுண்ணாய்வு, கண்காணிப்பு கல்வி மற்றும் போதனைகளினூடாக பொதுமக்களின் இருமொழித் தேவைகளை வழங்குதல்.
இ) அரசகரும மொழிகள் நன்கு மதிக்கப்படுதலை மேம்படுத்துவதுடன், அவற்றின் அந்தஸ்து, சமத்துவம், உபயோக உரிமை என்பன ஏற்றுக்கொள்ளப்படுதல், பேணப்படுதல், அத்துடன் தொடர்ந்து பேணப்படுதல் மேம்படுத்தல்.
ஈ) தம் நடைமுறைகளினால் வரும் ஏதாவது முறைப்பாடுகளுக்கு பதிலாக இரு வழிகளிலும் ஆய்வு நடாத்துதல் மற்றும் இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய சரி செய்தல்.
மேற்குறிப்பிட்ட பிரிவுக்குட்பட்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஆணைக்குழுவினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
47 செயற்திட்டத்தின் படியான செயலாற்றுகை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பொருளாதார முன்னேற்றம் தொ Æஇல செயற்பாடு உத்தேசிக்கப் ட்ட தொகை உண்மைச் செலவு விகிதம் 01 அதிகார சபைகள் மற்றும் சபைகளிலுள்ள நிறுவனத் தலைவர்களுக்கு அறிவூட்டல் 200,000.00 100,000.00 50% 02 அரசகரும மொழிக் கொள்கை சம்பந்தமாக தனியார் நிதி நிறுவனத் தலைவர்களுக்கு அறிவூட்டுதல்.
200,000.00 150,000.00 75% 03 மொழி ஆய்வுகள் 2013 வரை ஆய்வுக்குட்படுத்திய நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான பின்னூட்டல் நடாத்துதல்.
200,000.00 100,000.00 50% 04 2013ம் வருடம் வரை ஆய்வுக்குட்படுத்திய சிறுபான்மை மக்களின் விகிதாசாரம் 15% கூடுதலான பிரதேச செயலாளர் பரிவுகளில் இருக்கும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்குட்படுத்தல்.
200,000.00 175,000.00 87.5% 05 அரசகரும மொழிக் கொள்கையினை மீறுதல் சம்பந்தமாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை நுண்ணாய்வு செய்தல்.
அதன்படி இந்த நிறுவனத்தினூடாக சேவைகளை வழங்குகின்ற பொதுமக்களின் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எனின், தமது தாய்மொழிகளில் தமக்கு அவசியமான சேவைகளைப் பெறுவதற்காக அதிகாரசபைகளும், சபைகளுமாகிய நிறுவனங்களும் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளை பகுப்பாய்வு செய்யும் போதும் சபைகள் மற்றும் அதிகாரசபைகள் சம்மந்தமாகவும் முறைப்பாடுகள்; முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி மொழி உரிமைகள் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் சம்பந்தமாக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலைமையினைக் கவனத்திற்கு எடுத்து நியதிச்சட்ட அமைப்புகள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக அறிவுரை வழங்குவதற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் அறிவுரை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
அந்த நிகழ்ச்சித் திட்டம் 2014.06.02ம் திகதி தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களின் தலைமையின் கீழ் அரசகரும மொழிகள் ஆணைக்குழுக் காரியாலயத்தில் நடைபெற்றது.
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கியதோடு 49 கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்; திரு.
மேனக்க ஹரங்கஹ அவர்களால் இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கைச் சட்டத்தின் பார்வையில் மற்றும் அதன் நடைமுறைப் பாவனை சம்பந்தமாக விரிவுரையாற்றப்பட்டது.
இதற்கு மேலதிகமாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் செயலாளர்; மற்றும் அரசகரும மொழிகள் ஆணையாளர் திரு.
ஜயசிங்க அவர்களும்;, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.
பிரசாத் ஆர் ஹேரத் ஆகியோர்கள் வளவாளர்களாகக் கலந்து கொண்டதோடு கலந்துரையாடலும் நடைபெற்றது.
அதில் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்தும் போது எழுகின்ற பிரச்சினைகளை இனம் கண்டதோடு அந்தப்பிரச்சினைகளுக்கான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
2.அரசகரும மொழிக் கொள்கை சம்பந்தமாக தனியார் நிதி நிறுவனத் தலைவர்களுக்கு அறிவூட்டுதல்.
1991ஆம் ஆண்டின் 18ம் இலக்க சட்டத்தில் தாபிக்கப்பட்ட அரசகரும மொழிகள் ஆணைக்குழு இலங்கை பிரஜைகளுக்கு இருமொழிகளிலும் தத்தம் சேவைகளைப் பெற்றுக் கொள்வதனை விருத்தி செய்ய பல்வகையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனியார் நிதி நிறுவனங்களிற்காக இப்படியான நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்தது பொதுமக்களுடன் நிரந்தரமாக செயற்படுகின்ற நிறுவனங்களான வங்கிகள் அற்ற நிதி நிறுவனங்கள் பொதுமக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளையும் கவனத்திற் கொண்டாகும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்காக தனியார் நிதி நிறுவனங்களின் 56 தலைவர்கள் அழைக்கப்பட்டதோடு பிரதான அதிதியான விரிவுரையாளரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்; திரு.
மேனக ஹரன்கஹ அவர்களும், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்கள் கண்காணிப்பு திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.
டபிள்யூ பள்ளேகம அவர்களும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு நிமல் ஆர் ரணவக்க 50 அவர்களும் அரசகரும மொழிகள் ஆணையாளர் திரு.
ஜயசிங்க அவர்களும் கலந்து கொண்டார்கள்.
அங்கு தனியார் நிதி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஆவணங்கள் அரசகரும மொழிக்கொள்கையின்படி தயாரிக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பு அவசியமென்றும், தனியார் நிதிநிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழித்திறன் விருத்திக்கு செயலமர்வு அவசியமெனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அங்கு முதலாவது நடவடிக்கையாக தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் போது பாவிக்கப்படுகின்ற ஆவணங்கள் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு வரவழைக்க தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2013 வரை ஆய்வுக்குட்படுத்திய நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான பின்னூட்டல் நடாத்துதல்.
2013 ஆம் வருடம் வரை ஆய்வுக்குட்படுத்திய நிறுவனங்களுக்காக ஆணைக்குழு சிபாரிசினை வழங்கியுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக குறித்த நிறுவனத்தலைவர்களும் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பர்.
சிபாரிசினை நடைமுறைப்படுத்த விசாரணை செய்வதற்கு பின்னூட்டல் மொழி ஆய்வுகளின் நோக்கமாகும்.
2014 ஆம் ஆண்டில் 09 பிரதேச செயலாளர் காரியாலயங்கள், 02 பொலிஸ் 51 நிலையங்கள், 01 வைத்தியசாலை என்பனவற்றில் மொழி ஆய்வு செய்யப்பட்டன.
கொழும்பு மாநகர சபை மொழி ஆய்வு.
இதற்கு மேலதிகமாக கொழும்பு மாநகரத்தினுள் அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான செயற்திட்டம் ஆணைக்குழுவினால் நடைபெற்றது.
இங்கு கொழும்பு மாநகர சபையின் திணைக்களங்கள் 16 மற்றும் 214 பிரிவுகளில் ஆய்வுக்குட்படுத்தி சிபாரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் நகர சபை எல்லைக்குட்பட்ட சகல வீதிப்பெயர்ப்பலகைகளும் மும்மொழிகளில் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சகல நிறுவனங்களிலும் அரசகரும மொழிக் கொள்கையினைச் சரியாக நடைமுறைப்படுத்துவதனூடாக பொதுமகனுக்குத் தான் விரும்பிய மொழியில் சேவையினைப் பெற்றுக் கொள்ளும் திறன் இதனூடாகக் கிடைக்கிறது.
2013ம் வருடம் வரை ஆய்வுக்குட்படுத்திய சிறுபான்மை மக்களின் விகிதாசாரம் 15% கூடுதலான பிரதேச செயலாளர் பரிவுகளில் இருக்கும் அரச நிறுவனங்கள் ஆய்வுக்குட்படுத்தல்.
அரசகரும மொழி ஆணைக்குழுவின் ஊடாக 2013 வரை ஆய்வுக்குட்படுத்தப்படாத அரச நிறுவனங்களை ஆய்வு செய்தல் இந்த வருடத்தில் நடைபெற்றது.
இங்கு நிறுவனங்களைத் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு அரச நிறுவனங்களும் அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் மக்கள் விகிதம் கவனத்திற் கொள்ளப்படும்.
மொழி ரீதியாக சிறுபான்மை 20% த்திற்கு கிட்டிய பிரதேச செயலாளர் காரியாலயங்களில் அமைந்துள்ள அரச நிறுவனங்கள் ஆய்வுக்குட்படுத்த விசேட கவனம் செலுத்தப்படும்.
இந்த வருடத்தில் 05 பிரதேச செயலாளர் செயலகங்கள், 12 பொலிஸ் நிலையங்கள், 16 வைத்தியசாலைகள், 01 மாநகர சபை, 01 தபால் நிலையம், 03 வேறு நிலையங்களில் மொழி ஆய்வுகள் நடைப்பெற்றன.
04.அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி சிற்றறைகளை ஆய்வுக்குட்படுத்தல்.
2014ம் வருடத்தில் தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி குளியாப்பிட்டி நகரத்தில் நடைபெற்றதோடு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் அதற்கு 52 இணங்க கண்காட்சி வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட கண்காட்சிச் சிற்றறைகள் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப முன்வைக்கப்பட்டதா என்பது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற அரச பிரிவில் கண்காட்சி சிற்றறைகள் 400 அளவில் ஆய்வுக்குட்படுத்தி சிறந்த சிற்றறைகள் 3 தெரிவு செய்யப்பட்டன.
இந்த மதிப்பீட்டின்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் கல்வியியலாளர்கள் 30 போர் அடங்கிய குழுவின் மூலம் குறித்த சகல சிற்றறைகளும் ஆய்வு நடாத்திச் சேகரித்த தரவுகளில் மொழி விஞ்ஞானம் சம்பந்தமாக விசேட அறிவும், ஆற்றலும் கொண்ட பேராசிரியர்கள் 5 பேர்கள் அடங்கிய விசேட குழுவின் மூலம் மதிப்பீட்டுக்கு உள்ளடக்கப்பட்டு இந்தத் தெரிவுகள் நடைபெற்றன.
அதன்படி இலங்கை மத்திய வங்கி,துறைமுகங்கள் அதிகாரசபை, மற்றும் வெளிநாட்டு முகவர் செயலகம் ஆகிய அரசநிறுவங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட சிற்றறைகள் மூன்றும் அரசகரும மொழிகள் விருதுகள் 3ஐயும் வெற்றி பெற்றுக் கொண்டன.
அதே போன்று ஒவ்வொரு கண்காட்சிச் சிற்றறைகளும் பெற்றுக் கொண்ட புள்ளி மட்ட அளவினை உள்ளடக்கிய அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
05.அரசகரும மொழிக் கொள்கையினை மீறுதல் சம்பந்தமாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை நுண்ணாய்வு செய்தல்.
அரசகரும மொழிகள் ஆணைக்குழுச் சட்டத்தின் மூலம் உரிமையாகியுள்ள அதிகாரத்தின்படி 2014ம் வருடத்தில் மொழி உரிமையினை மீறுதல் சம்பந்தமாக நடைபெற்ற முறைப்பாடுகள் நுண்ணாய்வு செய்தது பின்வரும் முறைகளிலாகும்.
2014ம் வருடத்தில் நுண்ணாய்வு செய்யப்பட்ட முறைப்பாடுகள் சம்பந்தமாக உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சிபார்சுகள் கீழே குறிப்பிடப்படுகின்றன.
இலங்கை மின்சாரசபையினால் பாவனையாளர்களுக்கு அனுப்பப்படுகின்ற 53 பட்டியல்களில் சகல அறிவுரைகளும் மும்மொழிகளிலும் பிரசுரித்தல்.
கல்வி அமைச்சினால் நானாவித விடயங்கள் சம்பந்தமாக வழங்கப்பகின்ற பொதுவான சுற்றறிக்கைகள், கடிதங்கள் மும்மொழிகளில் வழங்குதல்.
அதிவேகப்பாதைகளில் பொதுமக்களின் பார்வைக்கான அறிவித்தல்களும் இலத்திரனியல் பெயர்பலகைகளும் மும்மொழிகளிலும் குறித்த அறிவிப்புகள் காட்சிப்படுத்தல்.
அரச வங்கிகளில் பொதுமக்கள் பார்வைக்கான அறிவுறுத்தல் பலகைகள், அறிவித்தல் பலகைகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தல்.
6.பாடசாலை மட்டத்தில் பாடசாலை வட்டங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்தல் மற்றும் பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்களை அந்த வட்டங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தல்.
2013 மற்றும் 2014 வருங்களில் ஆணைக்குழு ஏற்பாடு செய்த பாடசாலை விவாதப்போட்டிகளில் மற்றும் பேச்சுப் போட்டிகளின் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்காக நிகழ்ச்சித்திட்டங்களைச் செயற்படுத்தும் முக்கியத்துவம் ஆணைக்குழுவின் கவனத்தை ஈர்ந்தது.
இதில் எதிர்கால நடவடிக்கையாக பாடசாலைகளுக்கிடையே மொழிவிருத்தி வட்டங்களை உருவாக்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமாக பாடசாலைச் சிறார்களின் அறிவு நற்சிந்தனை கல்விவிருத்தி என்பவற்றுள் மும்மொழிச் சூழலை இலங்கையினுள் ஸ்தாபிப்பதும் நீண்ட கால இலக்கினைக் கொண்ட மொழி வட்டங்களை அமைப்பதற்காக அரசகரும மொழி ஆணைக்குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்கீழ் இலங்கையின் சகல பாடசாலைகளிலும் மொழிவட்டங்கள் அமைக்க அரசகரும மொழிகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.
இதில் பாடசாலையினுள் பிரதான பெயர்ப்பலகை முதல் பாடசாலையினுள் நிகழும் சகல செயற்பாடுகளும் இரு மொழிகளிலும்; நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மொழி வட்டங்கள் ஊடாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புறங்களில் வாழும் மக்களின் மொழித் தேவைகளின் போது அவற்றிற்கு ஒத்துழைப்பு நல்கி ஒழுகுதல் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டதாகும்.
மொழி வட்டங்கள் அமைப்பதற்காக அரசகரும மொழிகள் ஆணைக்குழு கல்வி அமைச்சுடன் சம்பந்தப்பட்டு உரிய கருமங்களை நெறிப்படுத்தும்.
இதற்காக பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சினால் அவை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்குத் தயாராக உள்ளன.
7. நாடளாவிய ரீதியில் பொதுமக்களுக்கு அறிவூட்டல் 7.1 அச்சிடப்பட்ட ஊடக அறிவித்தல்கள் அச்சிடப்பட்ட ஊடக அறிவித்தல்கள் பிரசுரிப்பது அடிப்படையான இரண்டு நோக்கங்களிலாகும்.
அதில் ஒரு நோக்கமாவது தமது மொழி உரிமையினை பொதுமகனுக்கு அறிவூட்டுவதன் மூலம் இருமொழியுடனான அரச சேவையில் பொதுமக்களின் ஆவலினைக் கூட்டுவதாகும்.
இருமொழி பொதுமக்கள் சேவையினை வழங்குவது சம்பந்தமாக அரச ஊழியர்களுக்குள்ள சட்டரீதியான பிணைப்பு சம்பந்தமாக அறிவூட்டுதல் இங்கே அடுத்த நோக்கமாக காட்டலாம்.
இலங்கை வாழ்மக்களின் பிரதான சமய கலாச்சார மற்றும் தேசிய முக்கியத்துவத்துடனான தினங்களை நோக்கமாகக் கொண்ட இந்த அறிவித்தல்கள் இரு மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகின்றது.
அந்தத்தினங்களுக்காக வாழ்த்துச் செய்திகளும், மக்களின் மொழி 55 உரிமைகள் பற்றியும் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் சம்பந்தமான செய்திகளும் இந்த அறிவித்தல்களில் உள்ளடங்கும்.
அதன்படி 2014ம் வருடத்தில் பிரசுரிக்கப்பட்ட இவ்வாறான அறிவிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
இந்த அறிவித்தல்களின் கட்டமைப்புக்கள் கீழேகாட்டப்பட்டுள்ளன.
7.2.தேசத்துக்கு மகுடம் கண்காட்சிச் சிற்றறைகள் நிர்மாணித்தலும் கண்காட்சிச் சிற்றறைகளுள் படிகம் காட்சிப்படுத்தலும் தேசத்துக்கு மகுடம் மொழி மதிப்பீட்டு ஆய்வோடு இணைந்ததாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினூடாக தேசத்துக்கு மகுடம் கண்காட்சி வளாகத்தினுள் படிகம் நிர்மாணிக்கப்பட்டதுடன் இந்த படிக நிர்மாணத்தின் நோக்கம் இரண்டாகும்.
1. கண்காட்சிச் சிற்றறைகள் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப நிர்மாணித்தல் மற்றும் அவற்றினை மதிப்பிடுதல் சம்பந்தமாக கண்காட்சி வளாகத்தில் அரச நிறுவனங்களுக்கு அறிவூட்டுதல்.
2. கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அறிவூட்டுதல்.
தேசத்தக்கு மகுடம் கண்காட்சி சிற்றறைகள் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப அமைப்பது சம்பந்தமாக உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்மாணிப்பவர்களுக்கும் அறிவூட்டுதலுக்காக கண்காட்சி ஆரம்பிப்பதற்கு ஒருமாத காலத்துக்கு முன்பே பிரதான 3 வாசல்களின் அருகில் அரசகரும மொழி விருதுகளை வெல்லுங்கள் என்ற அறிவித்தல்கள் நிறுவப்பட்டன.
அதேபோல கண்காட்சிக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்காக கண்காட்சிச் சிற்றறைகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் கண்காட்சி வளாகம் முழுவதும் மொழிகளின் உரிமை சம்பந்தமாக ஒன்றுக்கொன்று வித்தியாசமான 56 செய்திகள் 5ஐ உள்ளடக்கிய படிகங்கள் 300 பொதுமக்கள் பார்வைக்காக நிறுவப்பட்டன.
8.சமூக ஒருமைப்பாட்டு வாரம் மேல் மாகாண அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான திறந்த தனிப் பேச்சுப்போட்டி அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நடைபெற்ற விவாதப்போட்டித் தொடருக்காக பாடசாலைச் சிறார்கள் விசேட உற்சாகத்தோடு பங்குபற்றியமையால் 2014ம் வருடத்திலும் சமூக ஒருமைப்பாட்டு வாரத்தினை முன்னிட்டு மேல்மாகாணப் பாடசாலைகளுக்கிடையே பேச்சுப்போட்டி நடாத்தப்பட்டது.
விவாதப் போட்டித் தொடருக்காக கலந்து கொள்ள முடிந்தது, விவாதக் குழுக்களோடு கூடிய பாடசாலைகளுக்கு மாத்திரமே.
ஆகையால், தனிப்பட்ட திறமைகளுடன் கூடிய அதிகமான மாணவ, மாணவிகள் அதிகமானவர்கள் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கத்தில் பேச்சுப் போட்டி நடாத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒழுங்கிணைப்பு வாரம் - 2014 முன்னிட்டு இந்த பேச்சுப் போட்டி மேல்மாகாண சபை பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்டது.
இதற்காக பத்திரிகை அறிவித்தல்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
அதன்படி தமிழ் மொழி விண்ணப்பங்கள் 120 மற்றும் சிங்கள மொழி விண்ணப்பங்கள் 239 அளவில் ஆணைக்குழுவுக்குக் கிடைத்தன.
மூன்று போட்டித் தொடர்களின் கீழ் இந்தப் போட்டித் தொடர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் நடைபெற்றதோடு இறுதிப்போட்டி 2014.07.21ம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது.
அதில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு பரிசுகளும்,விருதுகளும் வழங்கப்பட்டன.
இறுதித்தின போட்டியின் போது சமூகமளித்திருந்த ரசிகர்களின் வாக்கின் மூலம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மக்கள் அபிமானம் பெற்ற பேச்சாளர் தெரிவு நடைபெற்றது.
அரசகரும மொழிக்கொள்கை சம்பந்தமாக பாடசாலைச் சிறார்களிடையே இருக்கும் அறிவு மற்றும் சிறந்த நற்சிந்தனையினை விருத்தி செய்வதினூடாக எதிர்காலத்தில் இருமொழிகளுடனான அரச சேவையினை உருவாக்குவதே அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.
57 9. 2014 செயற்திட்டத்திற்கு மேலதிகமாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்.
9.1.நுவரெலியா மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களை அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள்.
9.2.வடமாகாண அழைக்கப்பட்ட பாடசாலைகளின் விவாதப்போட்டித் தொடர்.
அரசகரும மொழிகள் ஆணைக்குழு 2013 வருடத்தில் மேல் மாகாணத்தின் பாடசாலைகளுக்கிடையே விவாதத் தொடரை நடத்தியது.
இந்தப் போட்டிக்காக பாடசாலைச் சிறார்கள் விசேட உற்சாகத்துடன் பங்குபற்றினர்.
இந்த நிலையை கவனத்திற்; கொண்டு வடமாகாணத்திலும் பாடசாலைகளுக்கிடையிலான விவாத் தொடர் ஒன்றினை நடாத்துவதற்கு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலை விவாதப்போட்டி 2013.10.18ம் திகதி நடாத்தப்பட்டது.
இப்போட்டித் தொடரின் தொனிப்பொருள் “அரசகரும மொழிக் கொள்கை, அதன் பயன்பாடு மற்றும் இனப்பிரச்சினையும் சமாதானமும்” என்பதாகும்.
நாட்டின் எதிர்காலச் சிறார்களுள் இரு மொழிகள் பாவனையில் பெறுமதி மிக்க சிறந்த நற்சிந்தனைகளைக் கட்டியெழுபப்புவதே இப்போட்டித் தொடரின் அடிப்படை நோக்கமாகும்.
வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைகளை உள்ளடக்கக் கூடியதாக இப்போட்டித் தொடர் நடைபெற்றது.
தமிழ்மொழிப் பாடாசாலைகள் 16ம் மற்றும் சிங்கள மொழிப்பாடசாலைகள் 6ம் இதற்கு தெரிவு செய்யப்பட்டன.
2013.10.18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போட்டித் தொடரில் சிங்கள மொழி மூலம் சம்பியனாக உ/பெரகும் வித்தியாலயமும் இரண்டாவது சம்பியனாக அழகன்ன வித்தியாலயமும் தமிழ்மொழி மூல சம்பியனாக வித்தியானந்தா வித்தியாலயத்துக்கும் இரண்டாவது சம்பியனாக புதுக்குடியிருப்பு வித்தியாலயமும் வெற்றி பெற்றன.
அதன்படி 2014.01.28ம் திகதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி மண்டபத்தில் இந்த விவாதத் தொடரின் பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
வடமாகாண முதலமைச்சர் கௌரவ சீ.
விக்கினேஸ்வரன் அவர்களும் 58 மற்றும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார அவர்களும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
சான்றிதழ் வழங்கலின்விசேட அம்சம் என்னவெனில் தமிழ்;; மற்றும் சிங்கள மொழி மாணவ மாணவிகளைக் கொண்ட இரு குழுக்களுக்கும் இடையே கண்கவர் விவாதப்போட்டி நடைபெற்றதாகும்.
இங்கு மொழி பெயர்ப்பு கருவிகளின் உதவியுடன் சிங்கள தமிழ் மொழி மாணவர்களிடையே தொடர்பாடல் ஏற்படுத்தப்பட்டது.
9.3.பாவனையாளர் சேவை அதிகார சபையுடன் நடைபெற்ற கலந்துரையாடல்.
பாவனைப் பொருட்கள் கொள்வனவின்போது பாவனையாளரால் அவசியமாகத் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களான பாவிப்பு, காலம் முடிவு பெறுதல், பொதி செய்யப்பட்டுள்ளமை.
அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப தயாரிப்பது சம்பந்தமாக பாவனையாளர் சேவை அதிகாரியுடன் உரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் சுகாதார அமைச்சின் உணவு ஆலோசனைக் குழுவுடனும் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது.
9.4.பெருந்தோட்டக் கைத்தொழில்சார் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டல் 2014ம் வருடத்தில் ஆணைக்குழு பொருந்தோட்டக் கைத்தொழில்சார் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது.
இதன் நோக்கம் தோட்டங்களை அண்மித்த தமிழ்மக்களின் மொழி உரிமைகளைப் பாதுகாப்பதோயாகும்.
இந்த நிகழ்ச்சித் திட்டங்களில் சமூக அழுத்தங்கள் என்னவெனில் அரசநிறுவனங்களில் அரசகரும மொழிக்கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் சட்ட ரீதியான கட்டுப்பாடும் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் சம்பந்தமாக அறிவூட்டப்பட்டு பொது மக்களின் மொழி உரிமையினைப் பாதுகாப்பதுமாகும்.
9.5.சிறு அறிக்கை நிகழ்ச்சித்திட்டம் தயாரித்தல்.
அரசகரும மொழிக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட சிறு அறிக்கை நிகழ்ச்சித்திட்டம் தயாரித்தல் இந்த வருடத்துள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நிகழ்ச்சித்திட்டம் “மொழியிலிருந்து இருமொழிக்கு” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அரசகரும மொழிக் கொள்கை சம்பந்தமாகத் தெளிவு படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களில் 59 பயன்படுத்துவதே இந்த அறிக்கை நிகழ்ச்சித் திட்டங்கள் நடத்துவதன் நோக்கமாகும்.
அதன்படி ஆணைக்குழு அரசகரும மொழிகள் திணைக்களத்தில் மொழி பெயர்ப்புப் பிரிவுக்கு அந்த ஆவணங்களை அனுப்பி மொழி பெயர்ப்புக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ் வருடத்தில் வழஙகப்பட்ட மொழி பெயர்ப்பு உதவிகள் பின்வருமாறு.
இலங்கை இராணுவ முகாம்களின் சகல பெயர்ப்பலகைகளும் மும்மொழிகளிலும் தயாரித்தல்.
மட்டுப்படுத்தப்பட்ட “ருஹ_ணு டிவலொப்மென் கண்டக்டர்ஸ் என்ட் எஞ்சினியர்ஸ்” தனியார் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பலவகையான வீதி அபிவிருத்திகளின் பெயர்ப்பலகைகள் மும்மொழிகளிலும் தயாரிக்கப்படல்.
9.7.அரச நிறுவனங்களில் கடிதத்தலைப்புகள் அரசகரும மொழிக்; கொள்கைக்கு ஏற்ப தயாரித்தல்.
அரச நிறுவனங்களின் கடிதத் தலைப்புக்களில் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப தயாரிப்பதற்கு அரசகரும மொழிகள் ஆணைக்குவினால் அடிக்கடி அறிவூட்டல் மற்றும் சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இது சம்பந்தமாக நிலவும் நிலைமை சம்பந்தமாக அலசி ஆராய சகல அரச நிறுவனங்களிலும் கடிதத்தலைப்புக்கள் சம்பந்தமாக ஆய்வுகள் நடாத்தப்பட்டன.
அதன்படி சகல அரச நிறுவனங்களிலும் பாவிக்கப்படுகின்ற கடிதத் தலைப்புகளில் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆய்வு செய்யவும் அவ்வாறு தயாரிக்கப்படாத கடிதத் தலைப்புக்கள் அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்ப தயாரிப்பதற்குத் தேவையான அறிவுரைகளையும் சிபாரிசுகளையும் ஆணைக்குழு மூலம் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின்; போது கீழ்காணும் அரச நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டன.
1. மாவட்ட செயலாளர் செயலகங்கள் 2. பிரதேச செயலளார் செயலகங்கள் 3. மாநகர சபைகள் 4. நகர சபைகள் 5. பிரதேச சபைகள் குறித்த ஆய்வுக்கு உரிய கடிதங்களின் தலைப்பு அரசகரும மொழிக் கொள்கைக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதனை 60 அவதானித்தது கீழ்க்காணும் 5 மூலப்பிரமாணங்களின் அடிப்படையிலாகும்.
1. காரியாலயத்தின் / நிறுவனத்தின் பெயர் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்டிருத்தல்.
(வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையே தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மற்றும் ஏனைய மாகாணங்களில் முறையே சிங்கள, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் காரியாலயங்களிலும் / நிறுவனங்களிலும் பெயர் தயாரித்திருத்தல்.
2. கடிதத்தலைப்புக்களில் உள்ளடக்கப்பட்ட தொலைபேசி இலக்கம், பெயர்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் பெயர்கள் எல்லாம் மும்மொழிகளிலும் தயாரித்தல்.
3. கடிதத்தலைப்புக்களில் மேலும் கீழும் எழுதப்படும் சிறிய மேற்கோள்கள் சகலதும் மும்மொழிகளிலும் இருத்தல்.
4. எழுத்துக்களில் பிழையின்மை.
9.8.வீதி ஆய்வு மொழி ஆணைக்குழுவினால் 2007/2008 வருடங்களில் அரச நிறுவனங்களில் மொழி வளங்களின் தேவைப்பாட்டினை மதிப்பீடு செய்யும் ஆய்வு நடாத்தப்பட்டது.
இதற்கான மாதிரியாக 50 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டன.
இதற்கான பின்னூட்டல் ஆய்வு 2014 ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரை நடைபெற்றது.
அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் அறிக்கை தயாரிப்புக்கள் என்பன தற்போது வீதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 2007 நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த நிறுவனம் அரசியலமைப்பு விவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் விடயதானத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டதுடன், அந்த அமைச்சு நிலைபெற்றிருந்த இல. 310, காலி வீதி, கொழும்பில் அமைந்திருந்த இடத்தில் இந் நிறுவனம் செயற்படுத்தப்பட்டது.
2010 ஏப்பிரல் மாதம் 25ஆம் திகதியில் இருந்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு என்ற பெயரிடப்பட்டதுடன் இந்த நிறுவனம் அந்த அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களில் ஒன்றாக இணைந்து கொள்ளப்பட்டது.
தற்போது இல. 40, புத்கமுவ வீதி, இராஜகிரிய என்ற இடத்தில் செயற்பட்டு வருகின்றது.
தற்போது நிறுவனம் தனது பணிகளை விரிவுப்படுத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் பலவற்றை நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தி வருகின்றது.
அவற்றில் கீழ் வரும் பயிற்சி கற்கைநெறிகள் முக்கியமானவைகளாகும்.
அரச உத்தியோகத்தர்களுக்கான 12 நாட்கள் குறுங்கால தங்குமிடமற்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.
ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்.
வளவாளர்களுக்கான மீளாய்வு நிகழ்ச்சித்திட்டம்.
மொழிபெயர்ப்பு பற்றிய டிப்ளோமா கற்கைநெறி (பகுதி நேரம்/ நீண்ட காலம்.
) அடிப்படை மொழிபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டம் ( 10 நாட்கள் தங்குமிடமற்ற) புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படும் குறுங்கால இரண்டாம் மொழி கற்கைநெறி.
(வைத்தியர்கள், பொது நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உயர்தொழில் செய்பவர்கள்) நிறுவனத்தினூடாக ஒழுங்கமைக்கப்படும் தங்குமிட வசதியுடனான கற்கைநெறிகள் பலவற்றுக்கு கலேவத்தை, அகலவத்தையில் உள்ள பயிற்சி நிலையத்தில் மேற்கொள்ளப்படும்.
மிகவும் கண்கவர் பிரதேசத்தில் அமையபெற்றுள்ள இந்த பயிற்சி நிலையத்தில் ஒரே தடவையில் 250 பேர் வரை பங்கு கொள்ள கூடிய மண்டபமும் குழு கலந்துரையாடலுக்கான வசதியுடன் 60 பேருக்கு வசதியுடனான தங்குமிடம் மற்றும் நூலகத்துடன் அமையப்பெற்றதாகும்.
மேலே குறிப்பிட்ட கற்கைநெறிகளை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு அனுபவமிக்க வளவாளர்கள் குழுவொன்றின் பங்களிப்பு பெறப்படுவதுடன் நிறுவனத்தின் பணிக்குழுவும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது.
63 தொலை நோக்கு தேசிய மொழிகள் பயிற்சியின் மூலம் இலங்கை மக்களிடத்திலே சமாதானம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்தல்.
பணிநோக்கு அரசகரும மொழிகள் அமுலாக்குவதற்கு மொழிகள் கற்கைநெறி மற்றும் பயிற்சிக்கு மும்மொழி அறிவுவை விருத்தி செய்யும் கேந்திர நிலையமாக செயற்படல்.
நோக்கங்கள் 1. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பதற்கு விரும்புகின்றவர்களுக்கு அந்த மொழியை கற்பிக்க கூடிய திறமையான ஆசிரியர்களை உருவாக்குதல்;.
2. எழுத்துமூல சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட அரசாங்க மொழிபெயர்ப்பாளர் மற்றும் உரைபெயர்ப்பாளர் சேவைக்கு நியமிக்கப்பட்ட வேண்டிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களை உருவாக்கும்.
3. சிங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக தகைமையுடைய ஆசிரியர்களை உருவாக்குதல்.
4. பொது மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க மும் மொழி திறன் கொண்ட அரச உத்தியோகத்தர்களை உருவாக்குதல்.
நிறுவனத்தின் பணிகள் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி திறனை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் நபர்களுக்கு சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியை கற்பிக்கும் திறமையுடைய நபர்களை உருவாக்குவாற்கு சிங்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பற்றிய நீண்ட பயிற்சியை வழங்குதல்.
நிறுவனத்தின் நடவடிக்கைகளை வினைத்திறனாக கொண்டு நடாத்துவதற்கு ஆய்வு மற்றும் கற்கைகளின் வெளியீடுகளை பயன்படுத்தும் நோக்கத்துடன் மொழி பயிற்சியை வழங்குவது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் பற்றிய ஆய்வு மற்றும் கற்கைகளை நடாத்தல்.
பொருத்தமான நபர்களுக்கு மொழி பயிற்சியை வழங்குதல் மற்றும் அந்த பயிற்சியையும் கற்கைகளையும் பூர்த்தி செய்யும் வெற்றிகரமான கற்கையாளர்களுக்கு சனாறிதல் மற்றும் டிப்ளோமா வழங்குதல்.
மொழிக் கற்றலை மேற்கொள்வதற்கு பயிற்றப்பட்ட நபர்களை உள்ளடக்கிய சபை ஒன்றை தாபித்தல்.
மொழிகள் தொடர்பான தரவுகளை சேமிக்கும் இடத்தை தாபித்தல்.
மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள், மற்றும் தட்டச்சு செய்பவர்கள் ஆகிய விசேட குழுக்களுக்கு சிங்கள, தமிழ் மற்றுமு; ஆங்கில ஆகிய மொழிகளில் விசேடமான பயிற்சி கற்கை நெறிகளை நடாத்தல்.
தேவை என கருதும் போது சிங்கள், தமிழ் மற்றுமு; ஆங்கில மொழிகளின் தரத்தை மேம்படுத்த அவற்றில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி பொருத்தமான அதிகார மையங்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல், சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பற்றிய மொழிசார் ஆய்வுகளை மேற்கொள்ளல், அவற்றுக்கு உதவியளித்தல் மற்றும் மேம்படுத்தல்.
மேற்கூறப்பட்ட நிறுவத்தின் நோக்கங்களை அடைந்து கொள்ள அனைத்து தீர்மானங்களையும் முகாமைத்துவ சபையினால் எடுக்கப்படுவதுடன் நிறுவனத்தின் கற்கை நடவடிக்கைககளுக்கு கற்கை சபை பல்வேறு வகைகளில் உதவி வழங்குகிறது.
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களை இரு மொழியிலும் வலுப்படுத்துவதற்கு பகுதி நேர கற்கைநெறியை நாடளாவிய ரீதியில் செயற்;படுத்துகிறது.
இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் சேவை நிலைய மட்டத்தில் ஒழுங்கமைக்கப்படுவதுடன் அரச திணைக்களங்கள், பிரதேச செயலகங்கள், பொலிஸ் நிலையங்கள் ஆகிய அரச நிறுவனங்களில் உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு தடை இல்லாத வகையில் வாரத்திற்கு 4 அல்லது 6 மணித்தியாலயங்கள் செயற்படுத்தப்பட்டுகிறது.
அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழித் தேர்ச்சியை வழங்குவதன் மூலம் அரச சேவையை வினைத்திறனை மேம்படுத்தல் அரசகரும மொழிகள் கொள்கையை வினைத்திறனாக மேற்கொள்ளுவதற்கு உதவிகளை வழங்குதலும் இந்த கற்கைநெறியை செயற்படுத்துவதன் நோக்கமாகும்.
அந்த வகையில் 2014ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட பகுதிநேர பயிற்சி கற்கைநெறி நெறிகளின் விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது.
இந்த குழுவிற்கு 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் அனுமதி வழங்கப்பட்ட மொழி வகுப்புகளில் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர் என்பது குறிப்பிடப்பட வேண்டும்.
அரச உத்தியோகத்தர்கள் பகுதி நேர கற்கைநெறிகள் ஊடாக இரண்டாம் மொழி பயிற்சியை வழங்குவதற்கு 2014ஆம் ஆண்டில் நிறுவனங்கள் ஊடாக ரூபா. 16,168,950.00 செலவு செய்யப்பட்டள்ளன.
68 1.1.அரச உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதியற்ற 12 நாள் இரண்;டாம் மொழி பயிற்சி கற்கைநெறி தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் பகுதி நேர கற்கைநெறிகளுக்கு இணைவதற்கு முடியாத அரச உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் குறுங்கால மொழி பயிற்சி கற்கைநெறிகள் ஒழுங்கமைக்கபட்டுள்ளன.
கலாசாரம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டிற்காக மனித நேயம் மற்றும் சகவாழ்வு பண்புடன் கூடிய அரச உத்தியோகத்தர்களை உருவாக்க நிறுவனம் மேற்கொள்ளும் முக்கிய முயற்சியாக இந்த 12 குறுங்கால மொழி பயிற்சியை குறிப்பிடலாம்.
இந்த கற்கைநெறியை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் 12 நாட்கள் தொடர்ந்து பங்குபற்ற வேண்டியதுடன் கற்கைநெறி நிறைவு செய்த பின்னர் முறையான எழுத்து மற்றும் பேச்சு மதிப்பீடுகளுக்கு அமைய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அந்த வகையில் 2014ஆம் ஆண்டில் 12 நாட்கள் தங்குமிட வசதியற்ற கற்கைநெறிகள் 10 நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒதுக்கப்பட்ட தெகை ரூபா. 1,400,000 ஆகும்.
2014ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 12 நாட்கள் தங்குமிட வசதியற்ற கற்கைநெறிகள் பற்றிய விபரம் கீழ் வருமாறு அமைந்துள்ளது.
2014ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்கள் 2563 பேர் 12 நாட்கள் தங்குமிட வசதியற்ற தமிழ் மொழி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 35 ஊடாக பயிற்சி பெற்றுள்ளன.
அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை ரூபா. 6,650,464.50 ஆகும்.
1.2.தேசத்திற்கு மகுடம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமாந்திரமாக மேற்கொள்ளப்பட்ட 12 நாட்கள் குறுங்கால பயிற்சி கற்கைநெறி நிறுவனத்தினால் தேசத்திற்கு மகுடம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமாந்திரமாக 12 நாட்கள் குறுங்கால மொழி கற்கைநெறி இடம்பெற்றன.
அதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூபா. 1,800,000 ஆகும்.
ஆரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழி தேர்ச்சியை பெற்றுக் கொடுப்பதன் மூலம் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் அரச மொழி கொள்கை அமுல்படுத்துவதற்கு உதவியளித்தல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்கொள்வதன் நோக்கமாகும்.
2014ஆம் ஆண்டில் தேசத்திற்கு மகுடம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமாந்திரமாக நடாத்தப்பட்ட 12 நாட்கள் இரண்டாம் மொழி நிகழச்சித்திட்டத்தின் விபரங்கள் கீழ் வருமாறு அமைந்தன.
2014ஆம் ஆண்டில் தேசத்திற்கு மகுடம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமாந்திரமாக இடம்பெற்ற 12 நாட்கள் குறுங்கால மொழி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக அரச உத்தியோகத்தர்கள் 977 பேர் பயிற்சி பெற்றுள்ளன.
அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை ரூபா. 2,297,858.00 ஆகும்.
1.3.ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நிறுவனத்தினால் 25 நாட்கள் தங்குமிட நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்கெடுத்து அதில் சித்தியடையும் ஆசிரியர்கள் மட்டுமே நாடாளவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மொழி பயிற்சி கற்கைநெறியை கற்பிப்பதற்கு தகமை பெறுவர்.
அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்த அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டாம் மொழிளை கற்பிப்பதற்கு சிறந்த திறமையான ஆசிரியர்களை உருவாக்குதலும் மொழிச் சங்க நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக பொது சமூகத்துக்க மொழி தேர்ச்சியை வழங்ககூடிய ஆசிரியர் குழுவை தாபிப்பதும் இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்துவதன் நோக்கமாகும்.
69 1.4. 2014ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு மற்றும் சாதாரண மக்களுக்கு கற்றலுக்காக நடாத்தப்பட்ட ஆசிரியர் ஆலோசகர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் 2014ஆம் ஆண்டில் இவ்வாறான 04 நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்த திட்டமிடப்பட்டதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூபா. 719,981.00 ஆகும்.
1.5.ஆசிரியர்களுக்கான மீளாய்வு நிகழ்ச்சித்திட்டங்கள் 2014ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்கான 06 மீளாய்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூபா. 700,000 ஆகும்.
அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை ரூபா. 621,663.00 ஆகும்.
1.6.பொது மக்களுக்கான மொழி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினூடாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய பொது மக்களுக்கு மொழி பயிற்சி வழங்கல் 2012ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கற்கைநெறி 150 மணித்தியால பேச்சு கற்கைநெறி என்பதுடன் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது.
பொது மக்களுக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி திறனை வழங்குவதன் மூலம் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இந்த கற்கைநெறியின் நோக்கமாகும்.
2014ஆம் ஆண்டில் இவ்வாறான வகுப்புகள் 314 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டதுடன் அதற்கு ரூபா. 18,840,000 ஒதுக்கீடு செய்யப்பட்டத.
வருடம் முழுதும் மேற்கொள்ளப்பட்ட மொழிச் சங்க வகுப்புகள் பற்றிய விபரம் கிழே தரப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் அங்கீகாரம் வழங்கப்பட்ட வகுப்புகள் மொழி வகுப்புகளின் எண்ணிக்கை பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை சிங்களம் 42 1260 தமிழ் 322 12660 மொத்தம் 364 13920 அந்தவகையில் 2014ஆம் ஆண்டில் 364 வகுப்புகள் ஊடாக 13920 பங்குபற்றுனர்களுக்கு மொழி பயிற்சியளிக்க நிறுவனத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.
2014ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட வகுப்புகள் மொழி வகுப்புகளின் எண்ணிக்கை பங்குபற்றியவர்களின் எண்ணிக்கை சிங்களம் 23 690 தமிழ் 157 4710 மொத்தம் 180 5400 மேற்குறித்த அட்டவணையின்படி 2014ஆம் ஆண்டில் 180 வகுப்புகள் ஊடாக 5400 பேர் மொழி பயிற்சியை பெற்றுள்ளனர்.
இதற்கு 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட கற்கைநெறிகளும் உள்ளடங்கும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
2014ஆம் ஆண்டில் மொழிச் சங்க வகுப்புகளுக்காக நிறுவனத்தினால் 71 செய்யப்பட்ட மொத்த செலவு ரூபா. 12,834,616.00 ஆகும்.
மொழிச் சங்கம் தேசிய இயக்கத்தின் கீழ் பொது மக்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்கு 55 வகுப்புகள் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட போதும் அதற்கு நிறுவனத்திற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
ஆங்கில ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 01 இடம்பெற்றதுடன் அதற்கு 36 ஆசிரியர்கள் பங்குகொண்டனர்.
அதற்கு ஒதுக்கப்பட்ட செலவு ரூபா. 75,356.00 ஆகும்.
1.7.அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஏற்புடைய புதிய செயற்பாடுகள் இந்த செயற்பாடுகளின் படி கண்டி மாவட்டத்தில் புதிய கிராம உத்தியோகத்தர்கள் 339 பேருக்கு 17 நாள் தமிழ் மொழி கற்கைநெறியொன்று 2014.12.06 – 2014.12.22 வரை கண்டி மாவட்ட செயலகத்தில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக அதற்கு கிராம உத்தியோகத்தர்கள் அத்தியாவசியமானவர்கள் என்பதன் காரணமாக மீண்டும் அறிவிக்கும் வரையில் நிகழ்ச்சித்திட்டத்தை ஒத்திவைக்க நேரிட்டுள்ளதாக கண்டி மாவட்ட மேலதிக செயலாளருக்கு 2014.11.25ஆம் திகதிய கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.8.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி கற்கைநெறி தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மக்கள் பிரதிநிதிகளுக்கு மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மொழியை கற்பதன் மூலம் மக்களிடத்தில் உள்ள உறவை மேலும் வலுப்பெற செய்தல் மற்றும் அவர்களுக்கு மிகவும் வினைத்திறனாக சேவைகளை வழங்குதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதன் நோக்கமாகும்.
அந்த வகையில் இலங்கை பாராளுமன்றித்தின் கௌரவ உறுப்பினர்களுக்கு 108 மணித்தியால பேச்சு சிங்கள மற்றும் தமிழ் கற்கைநெறிகள் இரண்டு இந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்டன.
கற்கைநெறிகள் இரண்டும் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் இடம்பெற்றதுடன் சிங்கள கற்கைநெறிக்கு 06 உறுப்பினர்களும் தமிழ் கற்கைநெறிக்க 16 உறுப்பினர்களும் பங்குகொண்டனர்.
அதற்காக ரூபா. 87,000 ஒதுக்கப்பட்டதுடன் இந்த வருடத்தில் ரூபா. 11,200 ஒதுக்கப்பட்டுள்ளது.
1.9.நிறுவனத்தின் பணிக்குழுவுக்கு பயிற்சி மற்றும் கொள்திறன் நிகழ்ச்சித்திட்டங்கள் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பணிக்குழுவின் கொள்திறனை மேம்டுத்த நிறுவனத்தினால் பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன.
அதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வகையில் வேறு நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டதுடன் நிறுவனத்தின் முழு பணிக்குழுவிற்கும் ஒரே நேரத்தில் ஒரு பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சித்திட்டதினூடாக பணிக்குழுவிற்கு தொழிசார் வழிகாட்டலுடன் ஆளுமை விருத்திக்கு தேவையான அம்சங்களும் வழங்கப்பட்டன.
இதற்காக 2014ஆம் ஆண்டில் ரூபா. 300,000 ஒதுக்கபட்டதுடன் ரூபா 111,017.00 செலவிடப்பட்டது.
2.வருமானம் உழைக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் நிறுவனத்தினால் சில கற்கைநெறிகளுக்கு கற்கைநெறியை மேற்கொள்பவர்களிடம் இருந்து கட்டணம் அறிவிடப்பட்டு நடாத்தப்படுகிறது.
இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பெரும்பாலானவைகள் அகலவத்தை பயிற்சி நிறுவனத்தில் நடாத்தப்படுவதுடன் கற்கைநெறி மேற்கொள்பவர்களின் உணவு மற்றும் தங்குமிடத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
வளவாளர்கள் மற்றும் எனைய செலவுகள் நிறுவனத்தினால் கையேற்கப்படும்.
2.1.வைத்தியர்களுக்கான தமிழ் மொழி கற்கைநெறி பகுதிநேர பயிற்சி பெறுகின்ற வைத்தியர்களுக்கான சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுவனத்தினால் 11 நாட்கள் இரண்டாம் மொழி பயிற்சி கற்கைநெறியை நாடத்துகிறது.
இந்த கற்கைநெறிக்காக செலவாகும் அனைத்து செலவுகளும் சுகாதார அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன் மக்களுக்கு மிகவும் இன்முக மற்றும் வினைத்திறனான சேவை வழங்குதல் இந்த கற்கைநெறியின் நோக்கமாகும்.
2014ஆம் ஆண்டில் இவ்வாறான 10 நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
2.2.ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் 2014ஆம் ஆண்டில் வருமானம் பெறுகின்ற ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்த திட்டமிடப்பட்டதுடன் இடம்பெற்ற நிகழ்ச்சத்திட்டங்கள் கீழ்வருமாறு அமைந்திருந்தது.
அதற்காக செலவாகியுள்ள தொகை ரூபா. 740,591.00 ஆகும்.
73 2.3.அடிப்படை மொழிபெயர்ப்பு திறன் கற்கைநெறி நிறுவனத்தினால் விண்ணப்பதாரர்களினால் பெற்ற கவனத்திற் கொண்டு 2014 ஆகஸ்ட் 22 – 31 வரை 10 நாட்கள் அடிப்படை மொழிபெயர்ப்பு கற்கைநெறியொன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
எனினும் போதுமான விண்ணப்பதாரிகள் வருகை தருவது உறுதி செய்யப்படாமையினால் கற்கைநெறியை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டன.
மொழிபெயர்ப்பு கற்கைநெறி பற்றிய டிப்ளோமா கற்கைநெறி (முழு நோரம்) மொழிபெயர்ப்பு பற்றிய டிப்ளோமா கற்கைநெறியின் பாடப்பரப்பு மீளாய்வு செய்தல் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த கற்கைநெறி ஆரம்பிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டது.
மொழிபெயர்ப்பு கற்கைநெறி பற்றிய டிப்ளோமா கற்கைநெறி (பகுதி நோரம்) மொழிபெயர்ப்பு பற்றிய டிப்ளோமா கற்கைநெறியின் பாடப்பரப்பு மீளாய்வு செய்தல் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த கற்கைநெறி ஆரம்பிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டது.
2.4.அரச மற்றும் பகுதி நேர நிறுவனங்களுக்கு குறுங்கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் அரச மற்றும் பகுதி நேர நிறுவனங்களுக்கான குறுங்கால பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் 10 நடாத்த 2014ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.
இந்த கற்கைநெறிகளுக்கான செலவு அந்தந்த நிறுவனங்களினால் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்கு அரச உத்தியோகத்தர்களுக்கு மொழி பயிற்சியை வழங்குதல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.
2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய விபரங்கள் கீழ் வருமாறு அமைந்துள்ளன.
04 தமிழ் ஊவா மாகாண சபை டிசம பர் 15-27 45 155,467.00 மொத தம் 165 74 2.5.விசேட கோரிக்கையின் பிரகாரம் நடாத்தப்படும் கற்கைநெறிகள் நிறுவனத்தினால் ஒவ்வொரு நிறுவங்களினால் நடாத்தப்படும் விசேட கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு அவர்களுக்காகவும் செயற்படுத்தப்படும்.
அந்தவகையில் 2014ஆம் ஆண்டில் சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்கு சமாந்திரமாக எல்.
உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் இரண்டு நிகழ்ச்சித்திட்டங்களும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு அலுவலக உத்தியோகத்தர்களுக்கு ஒரு நிகழ்ச்சித்திட்டமும் செயற்படுத்தப்பட்டன.
அது பற்றிய விபரத்தை கீழே காண்க.
3.1.மொழிச் சங்க தேசிய இயக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மொழிச் சங்கத்திற்கிடையில் பகிர்ந்தளிப்பதற்காக மொழி பாட புத்தகம் தயார்ப்படுத்தல்.
சிங்கள மொழி பாட புத்தகம் தயாரிக்கும் பணியில் கீழ் வரும் 04 வளவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
லசித் நலந்த (அரசகரும மொழிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி) திரு.
சுனில் ஆரியரத்தின திரு.
எம். நிசாம் திரு.
எஸ்.ராகுலன் 2014ஆம் ஆண்டில் சிங்கள மொழி பாட புத்தகத்தை தயாரிப்பதற்காக 06 செயலமர்வுகள் கீழ் வரும் திகதிகளில் இடம் பெற்றுள்ளது.
யூன் 31 – ஆகஸ்ட் 03 வரை ஆகஸ்ட் 03 – 17 வரை செப்டபம்பர் 12 – 14 வரை செப்டம்பர் 20 – 24 வரை ஒக்டோபர் 11 – 15 வரை டிசம்பர் 08 – 12 வரை வருட இறுதியில் அந்த பணியின் 60 வீதம் வரை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 2015ஆம் ஆண்டில் அது பூர்த்தி செய்யப்படவுள்ளது.
3.2.அரச உத்தியோகத்தர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளை கற்க மொடியூல் மற்றும் இறுவட்டுகளை தயாரித்தல் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பாட புத்தகங்களை தயாரித்தல் அரசகரும மொழிகள் திணைக்களத்தினூடாக இடம்பெறுவதுடன் அது முடிவடைவதற்குள் பயிற்சி மொடியூல் மற்றும் இறுவட்டுகளை தயாரிக்க முடியாது.
3.3.அரச உத்தியோகத்தர்களுக்கு ஆங்கில மொழி கற்பதற்காக உள்ள பாட விதானத்தை மீளாய்வு செய்தல் இந்த பணியை மேற்கொள்வதற்காக வளவாளராக திரு.
நொயல் ஜயமான்ன (கருத்திட்ட பணிபாளர், ஜனாதிபதி விசேட செயலணி – வாழ்கை தேர்ச்சியாக ஆங்கிலம்) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவரின் சுய விபரக் கோவை அனுமதிக்காக பணிப்பாளர் சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு 75 பணிப்பாளர் சபையின் பரிந்துரை கிடைத்த போதும் முகாமைத்துவ சபையின் ஆலோசனைக்கு அமைய இந்த பணி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
3.4.அமைச்சரவை குழுவின் மற்றும் ஆய்வின் பரிந்துரைகளின் அடிப்படையில் தரவுகளை சேமிக்க தரவு தளத்தை தயாரித்தல் இந்த பணியில் 90 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் தேசிய மொழிக் கருத்திட்டத்தின் மூலம் அதற்கான தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது.
தரவுகளை சேமித்ததன் பின்னர் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களை அதற்காக பயிற்றுவிக்கபட உள்ளது.
3.5.மொழிபெயர்ப்பு கற்கைநெறி பற்றிய டிப்ளோமா கற்கைநெறியின் மீளாய்வு இதற்கான வளவாளராக பேராசிரியர் அசோக பிரேமரத்தின (ஒருங்கிணைப்பாளர், மொழிபெயர்ப்பு கற்கைநெறி, களனி பல்கலைக்கழகம்) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவருடன் இடம்பெற்ற அடிப்படை கலந்துரையாடலின் பின்னர் கருத்திட்ட பரிந்துரைகள் பல முன்வைக்கப்பட்டன.
இந்த கருத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய வினாக்கொத்து ஒன்றின் மூலம் தேவை பகுப்பாய்வு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதுடன் அதன் அடுத்தப்பட்ட ஏற்பாடுகள் 2015ஆம் ஆண்டில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய மொழிகள் மற்றும் சமூகஒருமைப்பாட்டு அமைச்சானது இலங்கை அரசாங்கத்தினைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது.
மக்கள், அவர்களின் தெரிவுக்குரிய மொழிகளில் தகவல்களையும் சேவைகளையும் அணுகுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சுக்கு உதவியளிக்கின்றது.
இத்திட்டத்தினை படிமுறையினூடாக அமைச்சு திட்டமிட்டிருப்பதுடன் அதன் முதற் படியாக அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்களான அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிக்கல்வி மற்றும்; பயிற்சி நிறுவனத்திற்கான ஒருமித்த மொழித்திட்டத்தினை அமைச்சரவையின் அனுமதிக்காக 2014ம் ஆண்டு இறுதியில் முன்வைக்கவுள்ளது.
ஒருமித்த மொழித்திட்டம் மற்றும் பொறுப்புக் கூறு நிலை உள்ளடக்கப்பட்ட வரைவு தயார்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சிற்கான பயிற்றுவிப்பாளர் குழுவொன்றை உருவாக்குவதற்காக அமைச்சின் அலுவலர்கள் 73 பேருக்கான (சிங்களம் மற்றும் தமிழ்) பயிற்றுவிப்பாளர் பயிற்சி வழங்கப்பட்டது.
அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சின் அலுவலர்கள் 30 பேருக்கு சமூகவிஞ்ஞான ஆய்வு தொடர்பான சான்றிதழ் கற்கைநெறிமற்றும் மொழிப்பிரிவைச் சேர்ந்;த அலுவலர்களுக்கான தொழில்நுட்பசான்றிதழ் கற்கைநெறிக்கான அணுசரணை வழங்கியது.
“அரச நிறுவனங்கள் மொழித்திட்டத்தை தயார் செய்வதற்கான வழிகாட்டி” 2800 பிரதிகள் இருவட்டுக்களுடன் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டமை இவ்வருடத்தில் அடையப் பெற்றவெற்றியாகும்.
மக்களுக்கு தரமான சேவையை வழங்குமுகமாக தெரிவு செய்யப்பட ஐந்து மாதிரி இருமொழி உதவுநிலையங்களை வலுப்படுத்துவதற்கான உதவிவழங்கியது.
அத்துடன் மாகாண மட்டத்திலான நிலயங்களை நிறுவுவதற்கான உதவிகளை அமைச்சுக்கு வழங்கவுள்ளது.
இதனூடாக உதவி ஆணையாளரின் கீழ் இயங்கும் மொழிபெயர்ப்பு நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்நிலையத்திற்கு நியமனம் பெற்ற அலுவலர்கள் கணனியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்வதை ஆரம்பித்துள்ளனர்.
மொழிபெயப்பாளர் பயிற்சி சிங்களம்-தமிழ், ஆங்கிலம்-தமிழ் மற்றும் ஆங்கிலம்- சிங்களம் ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது.
அரசகரும மொழிகள் திணைக்களம் 14 சொல்லகராதிகள்; தயாரித்தலை ஆரம்பித்துள்ளதுடன் தேசிய மொழிகள் திட்டம் 2 அகராதிகள்; தயாரித்தலுக்கான 79 உதவியை வழங்கவுள்ளது.
அரசகரும மொழிகள் திணைக்களத்தின் இணையத்தளத்தை இற்றைப்படுத்துவதற்கு உதவியளிக்கின்றது.
2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அரசமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் இவ்வருடம் குறிப்பிட்டளவு முன்னேற்றம் அடைந்துள்ளது.
அத்துடன் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கான ஐந்தாண்டு மூலோபாயத்திட்டம் மற்றும் நிறுவன இயலுமையை அதிகரிப்பதற்கான அறிக்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழு, கௌரவ அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கையளிக்கப்பட்டது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் ஒன்றான அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் பிரதேசமட்டத்திலான செயற்பாடுகளை சட்டரீதியாக ஆய்வு செய்வதற்கு தேசிய மொழிகள் திட்டம் உதவியளிக்கின்றது.
இவ்விடயம் இயலுமையை அதிகரிப்பதற்கான அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2013 மார்ச் மாதம் நடைபெற்ற நல்லாட்சி முன்னேற்ற மதிப்பாய்வு நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கமைய மொழிக்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனசட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான உதவி வழங்கப்பட்டது.
பொதுமக்கள் ஈடுபாடு நிதியம் -மொழிக் கொத்தணிகள் அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட ஐந்து மொழிக் கொத்தணிகளினதும் உறுப்பினர்களின் ஆற்றலை அதிகரிப்பதற்காக 2014ம் ஆண்டின் போது தேசிய மொழிகள் திட்டமானது தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றியது.
கிளிநொச்சி மாவட்டதில் 2 மொழிக் கொத்தணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் எகலியகொட மற்றும் பதுளை மொழிக் கொத்தணிகளுக்கு உதவி மானியம் வழங்கப்பட்டது.
பதுளை மொழிக் கொத்தணியூடாக சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி பேசும் மக்களிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்றும் சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கான நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 885வது கூட்டத்தில் விசேட கலைமானிப்பட்டத்திற்கு அனுமதியளிக்கப்பட்டதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், களனிப்பல்கலைக்கழகம் மற்றும் சபரகமுவ பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2014/2015 கல்வி ஆண்டுக்கான உளப்பாங்கு பரீட்சை நடாத்தப்பட்டதுடன் 75 பேருக்கான பட்டப்படிப்புக்காக 3500 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இலங்கையின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு கருத்திட்ட பங்காளர் ஆகும்.
2014 ஜனவரியில், புதியதும் இறுதியானதுமான கட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன் 2017 மார்ச்சில் அது முடிவுறும்.
இந்த கட்டத்தின் நோக்கம்: “முக்கிய அரச மற்றும் அரசு சார துறையினர் இணைந்து சமூக ஒருமைப்பாட்டின் முக்கிய கூறுகளை வெற்றிகரமாக பிரயோகிப்பதாகும்” எட்டப்படவுள்ள பெறுபேறுகள்: 1. சமூக ஒருமைப்பாட்டு அறிவை அதிகரித்தல் 2. முக்கிய அரச மற்றும் அரசு சாரா துறையினரின் கொள்திறனை விருத்தி செய்தல்.
3. உள்@ர் தேவைகளை அடிப்படையாக கொண்டு சமூக ஒருமைப்பாட்டுக்கு பங்களித்த முன்னெடுப்புகள் மீள செயற்படுத்த திடமாக்குதல்.
அவையாவன; 1. தேசிய மற்றும் மாவட்ட மட்டத்தில் சமூக ஒருமைப்பாட்டு தேசிய கொள்கைச் சட்டத்தை அமுலாக்குதல்.
2. உள்@ர் மற்றும் சமூக மட்டத்தில் சமூக ஒருமைப்பாட்டு தேசிய கொள்கைச் சட்டகத்தை அமுலாக்குதல்.
3. கலை மற்றும் கலாசாரத்தினூடாக சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்.
4. கொள்திறன் விருத்தி, கற்றல் மற்றும் புத்தாக்கம்.
இக் கருத்திட்டத்தினை தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு, நீதி அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு ஆகிய அமைச்சுக்களில் தேசிய மட்டத்தில் செயற்பாடுகளை மேம்படுத்துதல்.
சட்ட அமுலாக்கம், நீதி அணுகுவழி, சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தல் தொடர்பான கருத்திட்டத்தினை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது இந்தக் கருத்திட்டத்திற்கு முன்னர் செயற்பட்ட நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது கட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களின் அனுபவமாகும்.
நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்தித்திட்டத்தின் மூலம் சட்டஉதவி, சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும் சட்ட ஆவணங்களை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் பிரதேச மட்டத்திலான செயற்பாடுகளையும் பொறிமுறைகளையும் மேலும் முன்னேற்றுவதற்குரிய வசதிகளை வழங்கியுள்ளது.
அதனூடாக முறையான செயற்பாடுகளின் மூலம் நீதி வெளிக்களப் பிரிவுகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பிற்கான வழியினை கட்டியெழுப்புதல்.
சட்ட வலுப்படுத்தல், நியாயத்திற்கான அணுகுவழி, சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தல் கருத்திட்டத்தின் மூலம் நிகழ்த்தப்படும் அடிப்படை செயற்பாடுகள் இரண்டு ஆகும்.
அவையாவன : 1. சமூக ஒருமைப்பாடு மற்றும் அது தொடர்பான கொள்கையினை தயாரித்தல் மற்றும் அவற்றினை செயற்படுத்துவதற்காக தேசிய மட்டத்திலான (அரச மட்டத்தில்) மற்றும் சிவில் அமைப்புக்களுக்கான இயலுமையை முன்னேற்றுதல்.
2. சமூக ஒருமைப்பாடு மற்றும் சகவாழ்வினை செயற்படுத்தப்படுவதற்கு சமூகத்தினருக்குள் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என்பதனை இளைஞர்கள்;;; மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வ10ட்டுதல்.
மேற்குறிப்பிட்ட அடிப்படை செயற்பாடுகளின் கீழ் கீழே குறிப்பிட்டவாறு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துதல் வேண்டும்.
அமைச்சினால் சட்ட ஆவணங்களை இலவசமாக வழங்குதல், ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தின் அறிக்கைககளை மொழிபெயர்ப்புச் செய்வதற்கான நிதி வசதியினை வழங்குதல்.
85 இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவுடன் இணைந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இலவசமாக சட்ட உதவி நிகழ்ச்சித்திட்டத்தினை நடாத்துதல்.
எதிர்காலத்தில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண மத்திய நிலையத்தினை ஆதாரக் கட்டமைப்பினை மேலும் முன்னேற்றுவதன் மூலம் அதனை முன்னேற்ற முடியும் 25 பிரிவிலும் சமூக ஒருமைப்பாடு மற்றும் இனவிவகார நல்லுறவு தொடர்பான நாட்டிய நிகழ்வினை தயாரித்தல்.
சிறிய இனக்குழுக்கள் தொடர்பாக அச்சிடப்பட்ட நாட்காட்டி (2014 வருடத்திற்குரியது) பாடசாலைகளுக்கு விநியோகித்தல்.
(புத்தளம், பதுளை, மொனராகலை, வவுனியா) அது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல் தேசிய ஐக்கியத்திற்கான மாநாட்டின் போது சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடாத்துதல்.
இனிவருங்காலங்களில் நீதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் மொழிக் கொள்கையினை அமுல்படுத்துவது தொடர்பாக மதிப்பீடு செய்தல்.
அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இணைபாடசாலை நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
சமூக ஒருமைப்பாடு மற்றும் சமரசத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் இளைய பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் தலைவர்கள் தேசிய மற்றும் மக்கள் மட்டத்தில் பங்களிக்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் (UCIARS) ஆண்டறிக்கை 2012 5 எமது தொலைநோக்கு சர்வதேச தரத்திலான யதார்த்தமானதும் தொழில்முயற்சி நிலையானதுமான தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகமாகுதல்.
எமது பணிக்கூற்று இலங்கையின் அறிவுசார் பொருளாதாரத்திற்கு உதவும் தொழில்முயற்சியாண்மை சார்ந்த நிறுவனமொன்று என்றவகையில் பிராந்திய அறிவியல்களுடன் இணைந்ததான தொழில்நுட்பங்களைக்கொண்ட தொழில்முயறியாண்மை மையமாகக்கொண்ட பட்டதாரிகளையும் ஏனைய மனித வளங்களையும் உற்பத்திச் செய்தல் ஆகும்.
பதில் பணிப்பாளருடைய குறிப்பு 1990களின் கடைசிப்பகுதியில் தொடக்கப்பட்டதொன்றான கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனமானது இலங்கையின் கிராமிய விவசாய சமூகத்திற்கு சமகாலத்து தொழில்நுட்பவியலும் விஞ்ஞான அறிவையும் வழங்குதல் என்ற மிக முக்கியமான தேவையை கருத்தில்கொண்டு தொடக்கப்பட்டு தற்பெர்த ஓரு நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார ரீதியாக இலாபகரமானதும் சுற்றுசூழலுக்கு சாதகமானதுமான இழையம் வளர்ப்பு வாழைக்கன்றுகளை வழங்குவதன் வழியாக தொடக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளானது இந்த நிறுவனம் சான்றிதழ்,டிப்புளோமா மற்றும் பட்டதாரி என்றவகையில் மூன்று மட்டங்களைக்கொண்ட கல்வி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியதுடன் விவசாயம் மற்றும் பிராந்திய அறிவியல்கள் சார்ந்த கோட்பாடு ரீதியான பார்வைகளையும் அத்துடன் நவீன தொழில்நுட்பவியலையும் அறிமுகப்படுத்த தொடங்கியது.
புதிய அறிவை பெறுவதில் ஆர்வமாகவும் ஆவலாகவும் உள்ள கிராமிய விவசாய்களிடம் இக்கல்வி பாடநெறிகள் மிகவும் பிரபல்யமாகின.
இந்த விவசாய மாணவர்களுக்கு அவர்கள் அடைந்த மட்டத்துடன் பொருந்துவதான ஒரு சான்றிதழை வழங்கப்பட்டதுடன் அது பலவிதமான காரணங்களால் இவவ்hறான சந்தர்ப்பத்தை பெறமுடியாதவர்களாக இருந்தவர்களுக்கு ஒரு மேலதிகமான ஊக்கமூட்டும் விடயமாக அமைந்தது.
உயர் டிப்புளோமா பாடநெறியை வெற்றிக்கரமாக முடிந்தவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பை மேற்கொள்ள முடிந்த நிலையில் உள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் முகாமைத்துவமானது தற்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியர் க்~ணிகா ஹிரிகும்புரேகம மற்றும் கொழும்புப் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி டப்லியு.கே.
ஹிரிகும்புரேகம என்பவர்களுடைய ஒத்துழைப்பைக்கொண்டதாக உள்ளது.
இந்த நிறுவனத்தை மேலும் பலப்படுத்துவதாக அமையும்படி சுற்றுசூழல் விஞ்ஞானங்கள், விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் பிராந்திய அறிவியல்கள் என்று மூன்று பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்கும் நோக்கத்துடன் செயற்படுகிறது.
ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தலின் வழியாக இழையம் வளர்ப்பு வாழைக் கன்றுகளின் உற்பத்திச் செயற்பாடுகளை நிறுவனத்தால் விரிவுப்படுத்தியுள்ளது.
இதற்காக இரு புதிய “வலை வீடுகளை” (Net houses) கட்டியமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் புதியத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திகொண்டு இந்த வலை வீடுகளை மேலும் வளர்ச்சியடைய செய்ய தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொகண்டுள்ளன.
இழையம் வளர்ப்பு வாழைக்கன்றுகளை விற்பனை செய்வதன் வழியாக வருமானம் பெறுகின்ற காரணத்தால் ஒரு சுயமாக நிலைத்துநிற்கக் கூடிய அலகாக செயற்பட நிறுவனத்தால் முடிந்துள்ளது.
இந்த நிறுவனத்தால் வழங்கப்படும் இழையம் வளரப்பு வாழைக்கன்று ஒன்றின் விலையானது சந்தை விலையை விட அரைவாசி விலையைக்கொண்டதாக உள்ளது என்பதையும் ஆயினும் உள்@ர் விவசாய்களுடைய நன்மைக்கருதி அதனை அதே விலைக்கு தொடர்சியாக வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தின் பணியாளர்க்ள அனைவரும் ஒப்படை அடிப்படையில் பணியாற்றுக்கின்றவர்களாகவும் நிறுவனத்துடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றவர்களாகவும் உள்ளமையை மிகவும் சிறப்பான அம்சமாக குறிப்பிடலாம்.ஒவ்வொரு வருட இறுதியிலும் அவர்களுடைய செயலாற்றுகைகளை பாராட்டப்படுகின்றன.
அத்துடன் மதிப்பீட்டின்படி போதியளவு ஈடுபணவும் வழங்கப்படுகிறது.வணிக ரீதியானதும் அதேநேரம் கல்வித்துறைச் சார்ந்ததுமானது ஒரு 5 நிறுவனம் என்ற வகையில் பல் பார்வைகளைக்கொண்டதாக வரும் வருடங்களின்போது இந்த நிறுவனத்தின் வெளிப்புற சூழலை பார்க்கப்படுகினறதாக உள்ளது.
மறுபுறத்தில் புதிதாக தாபிக்கப்பட்டுள்ள ஹம்பந்தொட்டை துறைமுகமும் மத்தளை விமான நிலையமும் புதியத் தொழில்முயற்சியான்மைகளுக்கான பல நுழைவாய்ல்களை திறக்கப்படுவதாக உள்ளன.
எனவே இக்குறிப்பிட்ட செய்றபாடுகளின்போது கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் வழிகாட்டும் நிறுவனமாக செயற்படக்கூடியதாக உள்ளது.
உலகளாவிய ரீதியல் போட்டித்திறமையைக்கொண்ட மனித வளங்களையும் தொழில்நுட்ப பலன்களையும்கொண்டுள்ள ஒரு நவீன பிராந்தியப் பல்கலைக்கழகமாக இலங்கைப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும்படியாகவும் மஹிந்த சிந்தனை முன்னோக்குப் பார்வையில் குறிப்பிட்டுள்ளதன்படியும் இலங்கை அறிவு மையமாக திகழக்கூடியதாக கொழும்புப் பல்கலைக்கழக விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் வளர்ச்சியடைய செய்தல் என்பது எமது ஓரேயொரு குறிக்கோளாக உள்ளது.
ரி.எல்.ஆர். சில்வா பதில் பணிபப்hளர்/ கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் (UCIARS) 5 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகள்
1. உலகக் கல்வி உச்சி மாநாட்டின் போது (கே-12 மற்றும் உயர் கல்வி இந்தியா நடாத்தியது) திறந்த மற்றும் தொலைக்கல்விக் கற்றல் சார்ந்த மிக சிறந்த புத்தாக்கத்திற்கான விருது கிடைத்தது.
97 மாணவர்களை பதிவுசெய்துக்கொள்ளலின் வழியாக டிப்புளோமா பாடநெறிக்கான நான்காவது மாணவர் அணியை உள்வாங்கிக்கொள்ளல் நிகழ்ந்தது.
நான்காவது நுழைவாய் அதாவது ஆய்வுப் பரப்படையச்செய்தல் மற்றும் வணிகமயமாகக்ல் செயல்திட்டத்தின் கீழ் தர மற்றும் புத்தாக்க மானியங்களுக்காக எச்.ஈ.ரி.ஸி.
நிறுவனத்தால் எமது நிறுவனத்தை 2012 ஆம் ஆண்டில் தர மதிப்பீடு செய்யப்பட்டது.
தாய்வான் நாட்டில் நவம்பர் மாதம் இடம்பெற்ற சர்வதேச வாழை மாநாட்டில் பங்குக்கொண்டது.
தம்பானை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு என்ற பிரதேசங்களில் கிராமிய விவசாய்களுக்கு இழையம் வளர்ப்பு தொழில்நுட்ப அறிவூட்டல் பயிற்சியமர்வுகளும் செயல்பட்டறைகளும் நடாத்தியதுடன் வியாபார விவசாய செயற்பாடாக வாழை இழையம் வளர்ப்பு பயிற்செய்கையில் ஈடுபட ஊக்கவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்களிடம் இழையம் வளர்ப்பு தொழில்நுட்பவியலும் அதன் பயன்பாடும் பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டன.
வாழை இழையம் வளர்ப்புக் கன்றுகளை உற்பத்திச் செய்தலை அதிகரிக்க ஒரு புதிய வலை வீடு கட்டியமைக்கும் பணி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
பல்கலைகக்ழக மாணியங்கள் ஆணைக்குழுவால் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதாக 2000ஆம் ஆண்டில் ஹம்பாந்தொட்டை வெளிகத்த என்ற இடத்தில் மாகம்புர விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் சமூகச் சேவை நிலையமாக இந்த நிறுவனத்தை தாபிக்கப்பட்டது.இந்த நிலையத்தின் வரலாறு 1998ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகின்றது.
பல்கலைகழக ஆய்வாரள்களால் பல வருடகாலமாகவே முன்னெடுத்துக்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறிப்பிட்ட பிரதேசத்திற்குள் விவசாயத்தினதும் விவசாயத் தொழிற்றுறையிலும் செயல்நுட்பங்களை வளர்ச்சியடைய செய்யவும் தொழில்நுட்பமும் அறிவையும் இறுதி பயன்பாட்டாளர்களிடம் நேரடியாக சென்றடைய செய்யமையும் காரணமாக அமைந்தது.
எனவே பல்கலைக்கழகத்திற்கு சமுதயாத்துடன் நெருங்கிய இணைப்புகள் உருவாக்கிக்கொள்ள முடிந்தது.
இந்த நிறுவனத்தின் தாபகர் கொழும்பு பல்கலைகக்ழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தற்போதைய பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவியுமாகிய பேராசிரியர் க்~ணிகா ஹிருகும்புரேகம ஆவார்.
1978 ஆம் ஆண்டு 16ஆம் இலக்கத்தின் கீழ்வரும் பல்கலைக்கழக சட்டத்தின் 24A பிரிவின்படியும் 2008ஆம் ஆண்டு இலக்கம் 02 பிரிவின் கீழு; வரும் விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் சார்ந்த சட்டத்தின்படியும் கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் (UCIARS) ஒரு உயர் கல்வி நிறுவனமாக தாபிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதியில் இருந்து இந்த சட்டப்படியான அங்கீகாரம் அமுலுக்கு வந்தது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் விவசாயத் தொழில்நுட்பவியால்மாணி பட்டம் வரை செல்லக்கூடியதான சான்றிதழ் பாடநெறி,டிப்புளோமா பாடநெறி மற்றும் உயர் டிப்புளோமா பாடநெறிகளை கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் வழங்குகின்றது.
வயது,இடவசதி,காலம் மற்றும் கல்விசார் பின்னணி என்ற தடைகளைத் தாண்டிச்சென்று விவசாயச் சமுதாயத்திற்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும்பொருட்டுத் தொலைக் கல்வி மாதிரியைக்கொண்டதாக இந்த எல்லா பாடநெறிகளையும் கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் வழங்குகிறது.
அவர்கள் உயர் கல்விற்கான அபிலாi~களையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட,குடும்ப மற்றும் பொருளாதார பின்னணிகளின் காரணமாக அந்த வாய்ப்புகளை அவர்கள் இழந்துள்ளார்கள்.
உள்வாங்கிக்கொள்ளல் மற்றும் பாடநெறி தெரிவுகள் என்பனவற்றின் நெகிழ்ச்சியானத்தன்மையுடன் வறிய கிராமியச் சமுதயங்களைச் சார்ந்த விவசாயச் சமுதயாத்து படிக்கின்றவர்களுக்கு அவர்களுடைய கல்விசார்,தொழில்சார் மற்றும் சமூக அபிலாi~களை புரிந்தக்கொண்டு நவீன தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டு தரமான உயர் கல்வியை வழங்க முடியும் என்பதை இந்த நிறுவனம் எடுத்தக்காட்டியது.
கல்விசார் நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக இந்த நிறுவனத்தால் வாழை இழையம் வளர்ப்பு கன்றுகளை உற்பத்தி செய்வதையும் அவை மிகவும் நியாயமான விலைக்கு உள்@ர் விவசாய சமூகத்திற்கு வழங்குகின்றமையும் மேற்கொள்கிறது.அது நிறுவனத்திற்கு வருமானம் தருவதாகவும் அமைந்ததுள்ளது.
தற்போது மூன்று இழையம் வளர்ப்பு ஆய்வுக்கூடங்கள் இயங்குகின்றதுடன் செடிப்பண்ணையில் மூன்று வலை கூடங்களை அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதத்திலும் இந்த மூன்று ஆய்வுக்கூடங்களில் 15,000 அளவு இழையம் வளர்ப்பு வாழைக் கன்றுகள் நிறுவனத்தின் செடிப்பண்ணைக்காக உற்பத்திச்செய்யப்படுகிறன.
நாட்டின் பல பகுதிகளில் வாழும் கிராமிய விவசாய்களுக்கு இழையம் வளர்ப்பு வாழைப் பயிற்செய்கைப் பற்றிய தொழில்நுட்பத்தை பரப்பும் பொருட்டு இந்த நிறுவனம் பல செயல்பட்டறைகளும் செயமர்வுகளும் நடாத்தியது.
கிராமிய அறிவியலுடன் இணைந்ததான புதிய தொழில்நுட்பங்களை பற்றிய அறிவை மக்களிடம் பரப்படையசெய்யும் பொருட்டும் இந்த நிறுவனம் அதன் வங்களை பயன்படுத்திக்கொண்டு பல வகையான தேசியமட்ட கண்காட்சிகளில் பங்குக்கொண்டது.
2) பிரதிப்பணிப்பாளர் 3) உயர் கல்வி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது உயர் கல்வி விடயத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சியின் செயலாளரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்.
4) விவசாயம் என்ற விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்.
5) பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதி ஏனைய ஆறு அங்கத்தவர்கள்: 1) விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் விவசாய வியாபார கைத்தொழில்துறைகளை பிரதிநிதித்துவம் செய்கின்றதாக ஆணைக்குழுவால் நியமிக்கப்படுகின்ற இரு அங்கத்தவர்கள்.
2) பல்கலைக்கழகப் பேரவையால் நியமிக்கப்படும் அதன் இரு அங்கத்தவர்கள்.
3) ஹம்பாந்தொட்டை மாவட்ட செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்டவர்.
4) கல்விசார் ஆலோசனை சபையால் நியமிக்கப்படும் அதன் ஒரு அங்கத்தவர்.
1.3 முகாமைத்துவசபை கூட்டங்கள் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ சபையானது குறிப்பிட்ட வருடத்தின்போது அதன் கல்விசார் மற்றும் நிர்வாகம் சார்ந்த விடயங்களுக்காக ஒழுங்கான முறையில் கூட்டங்களை நடாத்தியது.
2012 ஆம் ஆண்டில் முகாமைத்துவ சபையானது கீழ்வருமாறு அமைந்திருந்தது.
ஒட்டுமொத்த செயலாற்றுகை இந்த நிறுவனம் பிரதானமாகவே கல்விசார் நிகழ்ச்சிகளிலும், இழையம் வளர்ப்பு வாழைக்கன்றுகளை உற்பத்திசெய்தல் நிகழ்ச்சியிலும் கிராமிய தொழில்முயற்சி அபிவிருத்தி (RED) நிகழ்ச்சியிலும் ஈடுபட்டது.
இவற்றிக்கு மேலதிகமாக நிறுவனத்தின் சமுதாய பணிகளாக கிராமிய விவசாய்களின் சமூக தேவைகளை அடையாளங்கண்டு வாழைப்பயிர்ச்செய்கையில் புதியத் தொழில்நுட்பங்களையும் பெறுமதி சேர்க்ப்பட்டட உற்பத்திகளையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல செயல்பட்டறைகளையும் அறிவூட்டல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டது.
2012 ஆம் ஆண்டில் கல்விசார் துறையை பயன்படுத்திக்கொண்டு அதன் கல்விசார்ந்த நடவடிக்கைளை தொடர்ச்சியாக மேற்கொண்டு போனதுடன் அதன் செடிப்பண்ணைகளையும் ஆய்வுக்கூடங்களையும் பயன்படுத்திக் கொண்டு இழையம் வளர்ப்பு வாழை உற்பத்தியை மேற்கொண்டது.
2.1 கல்விசார் செயலாற்றுகை
கொழும்புப் பல்கலைக்கழக விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனம் அதன் கல்விசார் நிகழ்ச்சிகள் 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.
இந்த நிறுவனம் விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல்களை சார்ந்த பாடங்களில் உயர் கல்வியைக்கொண்டதாக தற்போது விவசாயத்திலும் விவசாயத் தொழில்நுட்பவியலிலும் ஈடுபாட்டைக்கொண்டவர்களிடம் உயர் கல்வியை வழங்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் அபிவிருத்தியடையச் செய்யவும் உரிமைக்கட்டளைக்கொண்டதாக செயற்படுகிறது.
உயர் கல்விக்கதவுகளால் உள் நுழைதல் என்பதை ஒரு கனவில் கூட நினைக்காதவர்களாக இருந்த விவசாய சமுதயாத்தின் காலடிற்கு ஒரு கலக்கப்பட்ட கற்றல் மாதிரியின் வழியாக கல்வி கற்றலின ஊடாகமாற்றமடையும் தனிநபரர் மற்றும் சமூக தேவைகளை பூர்த்திச்செய்ய இந்த நிறுவனம் செயற்படுகின்றது.
உயர் கல்விற்கான அபிலாi~களையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுடைய தனிப்பட்ட, குடும்ப மற்றும் பொருளாதார பின்னணிகளின் காரணமாக அந்த வாய்ப்புகளை இவர்கள் இழந்துள்ளார்கள்.
உள்வாங்கிக்கொளள்ல் மற்றும் பாடநெறி தெரிவுகள் என்பனவற்றின் நெகிழ்ச்சியானத்தன்மையுடன் வறிய கிராமிய சமுதயங்களைச் சார்ந்த விவசாய சமுதயாத்து படிக்கின்றவர்களுக்கு அவர்களுடைய கல்விசார், தொழில்சார் மற்றும் சமூக அபிலாi~களை புரிந்துக்கொண்டும் நவீன தகவல்தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொண்டும் தரமான உயர் கல்வியை வழங்க முடியும் என்பதை இந்த நிறுவனம் எடுத்துக்காட்டியது.
தற்போது முதலாம் மாணவர் அணி விவசாய தொழில்நுட்பவியல் உயர் டிப்புளோமாவை கற்றுக்கொண்டுள்ளது.
ஏனையோர் டிப்புளோமா பாடநெறியை கற்றுக்கொண்டுள்ளார்கள்.
இரண்டாவது மாணவர் அணியாக தகுதிப்பெற்றவர்கள் உயர் டிப்புளொமா பாடநெறிக்காக 2013 ஆம் ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
விவசாயத் தொழில்முயற்சியாளர்களுக்காக இது ஒரு புதிய கல்வி நடவடிக்கையாக உள்ளதுடன் இலங்கையில் கிராமிய விவசாய சமுதயாத்திற்கு தங்களுடைய தாய் மொழியை பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய அறிவை வளர்ச்சியடையசெய்துக்கொள்வதற்கான ஒரு முதலாவது வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது.
இலங்கையின் விவசாய சமுதாயமானது 6 Annual Report – 2012 , UCIARS பிரதானமாகவே கிராமியப் பிரதேசங்களில் செறிவாக வாழ்க்கின்றது.
விவசாயத்திற்கான அவர்களுடைய பங்களிப்பானது மிக அதிகம்.
ஆயினும் கிராமிய விவசாய சமுதாயம் தங்களுயைட கல்வியை, தனிப்பட்ட அபிவிருத்தியை மற்றும் தொழில்சார்நத அபிவிருத்தியை அடைவதற்காக மிகவும் குறைந்த வசதி வாய்ப்புகளைக் கொண்டவர்களாகவே உள்ளார்கள்.
எனவே முதலாவது முறையாக கொழும்புப் பலகலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதாக வெளிகத்தவில் அமைந்துள்ள விவசாயத் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனமானது அப்போது விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாய்களுக்கு சான்றிதழ் மற்றும் டிப்புளோமா பாடநெறிகளை வழங்கியது.
இந்தப் பாடநெறிகள் ஒன் லயின் மற்றும் இலத்திரனியல் தொலைக்கல்வி என்ற வகையில் நடாத்தப்பட்டமையானது இலங்கையை பொறுத்தவரை ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
இந்த நிறுவனத்து பாடநெறியானது டிப்புளோமா,உயர் டிப்புளோமா மற்றும் பட்டதாரி என்ற வகையில் மூன்று நிகழ்ச்சிகளைக்கொண்டதாக அமைந்துள்ளது.
விவசாயத் தொழில்நுட்பவியல் (இரண்டு வருடங்களும் 03 மாதங்கள்) பாடநெறியானது 09 சான்றிதழ் பாடநெறிகளைக்கொண்டுள்ளது.
விவசாயத் தொழில்நுட்பவியல் உயர் டிப்புளோமா பாடநெறியானது (ஒரு வருடம்) நான்கு சான்றிதழ் பாடநெறிகளையும் பட்டப்படிப்பை பூர்த்திச்செய்வதற்காக இன்னொரு வருடத்தையும் கொண்டதொன்றாக உள்ளது.
ஒவ்வொரு சான்றிதழ் பாடநெறியையும் மூன்று மாத காலத்தைக்கொண்டுள்ளது.09 சான்றிதழ் பாடநெறிகளில் சித்தியடைகின்றவர்கள் விவசாயத் தொழில் நுடபவியல் டிப்புளோமாவை பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.
09 பாடங்களிலும்குறைந்தது c சித்தியை பெற்று ஆகக்குறைந்ததாக 2.75 GPA பெறுகின்றவர்கள் விவசாயத் தொழில்நுட்பவியல் உயர் டிப்புளோமாவை தொடங்வதற்கு தகுதியுடையவர்களாக உள்ளார்கள்.
அதற்குப் பிறகு இன்னும் 07 சான்றிதழ் பாடநெறிகளையும் ஆறு மாத கால ஒரு ஆய்வு செயல்திட்டமும் மேற்கொள்வதன் வழியாக விவசாயத் தொழில்நுட்பவியல்மாணி பட்டத்தை பெற முடியும்.
மேலும் சமூக அங்கீகாரம்பெற்றதொன்றாக விவசாயத்தை இளம் தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் ஒன் லைன் டிப்புளோமா, உயர் டிப்புளோமா மற்றும் பட்டப்படிப்பு பாட நெறிகள் அமைந்துள்ளன.
2.2 பெற்றுக்கொண்ட விருதுகள் உலக கல்வி உச்சி மாநாட்டின் போது (கே-12 மற்றும் உயர் கல்வி இந்தியா நடாத்தியது) 2012ஆம் ஆண்டிற்கான திறந்த மற்றும் தொலைக்கல்வி கற்றல் சார்ந்த மிக சிறந்த புத்தாக்கத்திற்கான விருது இந்த நிறுவனத்திற்கு கிடைத்தது.
இது இலங்கையின் இலத்திரனியல் முறையிலான கற்றல் சார்ந்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.
உலக நட்பு ஆலோசகராக KOICA அமைப்பால் விவசாய தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியல் நிறுவனத்தை சார்ந்தவரான கொரியா குடியரசின் ஜின்ஜூ தேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிம் ஜயெ ஹொ இந்த வெற்றியின் முன்னோடியாக உள்ளாரர்.
அத்துடன் 2012ஆம் ஆண்டில் 97 மாணவர்களை பதிவு செய்துக்கொள்ளலின் வழியாக டிப்புளோமா பாடநெறிக்கான நான்காவது மாணவர் அணியை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது(மூன்றாம் அட்டவணை).
அவர்கள் தங்களுடைய கல்வி நடவடிக்கைகளில் வெற்றிக்கரமாக ஈடுபட்டுக்கொண்டுள்ளர்கள்.
நிகழ்ச்சி பதிவுச்செய்யப்பட்ட ஆண்கள் மாணவர்கள் பெண்கள் 2012.12.31 ஆண்கள் ஆம் திகதிற்கு பெண்கள் 4ஆம் அணி.
விவசாயத் தொழில்நுட்பவியல் டிப்புளோமா 86 11 50 11 (மூன்றாம் அட்டவணை) 2008ஆம் ஆண்டில் விவசாயத்தொழில்நுட்பவியல் டிப்புளோமா பாடநெறியை அறிமுகப்படுத்திய பின்பு நிறுவனத்தின் வருடத்திற்கான மாணவர்கள் உள்வாங்குதலை படிப்படியாக அதிகரித்துக்கொள்ள முடிந்தது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டத்தை நோக்கி செல்லக்கூடியதான விவசாயத் தொழில்நுட்பவியால் உயர் டிப்புளோமாவை தற்போது முதலாம் மாணவர் அணி கற்றுக்கொண்டுள்ளது.
விவசாயத்தில் ஈடுபாட்டைக்கொண்ட 35 மாணவர்கள் தங்களுடைய விவசாயத்தொழில்நுட்பவியல் டிப்புளோமா பாடநெறியை வெற்றிக்கரமாக பூர்த்திச்செய்துள்ளதுடன் தெரிவுச்செய்யப்பட்ட 28 மாணவர்கள் தற்போது பட்டப் படிப்பு வரை செல்லக்கூடிய உயர் டிப்புளோமா பாடநெறியின் கற்றலில் ஈடுபாடுக்கொண்டுள்ளார்கள்.
2008ஆம் ஆண்டில் இருந்து 2012ஆம் ஆண்டு வரை நிறுவனத்தில் மாணவர் தொகை 04 ஆம் அட்டவணையிலும் 02 ஆம் உருவத்திலும் காட்டப்படுகிறது.
சனநாயகத்தை ஸ்தாபித்து நல்லாட்சியை நாட்டு மக்கள் அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்தல் தற்கால அரசின் முதன்மை அபிலாஷையாகும்.
குறித்த அரசாங்கத்தின் கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசாங்க நிறுவனங்களும் மக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்குதல் கட்டாயமான விடயமாகும்.
நாட்டில் சனநாயகத்தை வெற்றிகரமாக செயற்படுத்தும் பொருட்டு சட்ட சபை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறை மற்றும் தொடர்பாடல் துறை என்பன சுயாதீனமாக நடைமுறைப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தேவையான சட்ட ஒழுங்கு வீதிகளை வலுவூட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
சுதந்திரமானதும் நியாயமானதுமான சமூகத்தை உருவாக்குவதற்காக தொடர்புசாதனங்களை வழிநடாத்துபவர்களும் ஒழுங்குபடுத்துநர்களும் பாரிய கதாபாத்திரத்தை ஏற்று பணியாற்றுகின்றனர்.
தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்குள்ள உரிமையை பாதுகாக்க வேண்டுமென்பதுடன், மக்களுக்காக தகவல் வழங்குகின்ற ஊடகவியலாளர்களும் சரியான புரிந்துணர்வுடன் தமது தொழிலில் ஈடுபடுதல் வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக துரிதமாகியுள்ள சிக்கலான தொடர்பாடல் முறையில் தமது தொழிலில் ஈடுபடுகின்ற போது ஒரு நபரின் கௌரவம் பாதுகாக்கும் வண்ணம் ஊடகங்களை வழிநடாத்த வேண்டுமென்பதுடன், அதன் போது மக்கள் தொடர்பாடல் அமைச்சு புதிய நோக்குடனும் சரியான புரிந்துணர்வுடனும் பணியாற்ற வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றேன்.
விதைப்பதற்கேற்ப அறுவடை கிடைப்பது போல் இவ் அமைச்சின் செயல் நிறைவேற்றுகை புதிய ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு காரணமாக அமையும்.
நன்கு அறிவூட்டப்பட்ட பல்லின பிரசைகள் சனநாயக சமூகத்தில் ஆரோக்கியமான நிலைப்பாட்டின் மீது அத்தியாவசியமாக தேவைப்படும் காரணியாகும்.
குறித்த காரணியை பூர்த்தி செய்து கொள்வதற்கென்றால் அந்த சமூகத்தின் மக்கள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்வதற்கும், தொடர்பாடல்களை மேற்கொள்வதற்குமான உரிமை பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
இலங்கை மக்களின் தகவல் அறிநதுகொள்ளும் உரிமையை பாதுகாத்து மக்கள் நேயத்துடனும்.
அபிவிருத்தியுடன் கூடியதுமான மற்றும் சுதந்திரமானதும், பொறுப்புடன் கூடியதுமான ஊடாக கலையை ஸ்தாபித்தல் மக்கள் தொடர்பாடல் அமைச்சின் பிரதான பணியாகும்.
தற்போது, தொழில்நுட்பத்துடன் நேரடி தொடர்பினை கொண்டுள்ள ஊடகத் தொழிலில், நாளுக்கு நாள் போட்டியுடன் கூடிய நிலை காணப்படுவதால் ஊடக முகாமைத்துவத்தின் தேவைப்பாட்டையும் எமது அமைச்சு நன்கு நிறைவேற்றுகின்றது.
இலங்கையில் மக்கள் தொடர்பாடல் துறையில் மேம்பாடு கருதி தேவையான கொள்கைகள் மற்றும் உபாய முறைகள் தயாரித்தல், குறித்த உபாய முறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை அளித்தல், அவற்றை கண்காணித்து நடைமுறைப்படுத்தல் மக்கள் தொடர்பாடல் அமைச்சின் முக்கியமான பணியாகும் அதே போன்று மக்கள் சபையுடன் கூடிய ஒழுக்கமுடைய ஊடக கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு தேவையான ஊடக ஆளுமையை உருவாக்கும் அபிப்பிராயத்துடன், ஊடகவியலாளர்களின் தொழில் சார் அந்தஸ்த்தை உயர்த்துவதற்கு எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் உள்ளது.
இந்த அபிலாஷைகளை எய்துக் கொள்ளும் பொருட்டு மக்கள் தொடர்பாடல் அமைச்சும் அதனுடன் இணைந்துள்ள நிறுவனங்களும் 2014 ஆம் ஆண்டில் நடைமுறைப்படத்திய கருத்திட்டங்களின் முன்னேற்றம் இந்த வருடாந்த செயல் நிறைவேற்றுகை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
முனைப்பான ஜனநாயகத்தின் பொருட்டு தேவையான தொடர்பாடலில் மக்கள் உரிமையை பாதுகாக்கின்ற ஊடக கலாச்சாரத்தை உருவாக்கும் பொறிமுறையை மேலும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் தொடர்பாடல் அமைச்சிற்கு எனது நல்லாசிகள் உரித்தாகட்டும்.
“ நன்றாக அறிவூட்டப்பட்ட பண்மைவாய்ந்த மற்றும் முனைப்பான சமூகம்.
“மக்கள் நேயமுடன் கூடிய, அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற சுதந்திரமானதும்.
" பொறுப்பு வாய்ந்ததுமான இலங்கை ஊடக கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதற்காக, கொள்கைகள் மற்றும் உபாயங்கள் என்பவற்றை தயாரித்தல், வசதிகளை அளித்தல், நடைமுறைப்படுத்தல், கண்காணித்தல் மற்றும் பின்னூட்டல்.
1. சிறந்த ஊடக கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான சூழலை உருவாக்குதல்.
2. பொது மக்களுக்கு தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவாக்குதல்.
3. ஊடக துறையை நவீன தொழில்நுட்பத்துடன் நாளதுவரைப்படுத்துவதற்கு தேவையான வசதி களை அளித்தல்.
4. ஊடகவியலாளர்களின் தொழில்சார் அந்தஸ்த்தை உயர்த்துவதற்குத் தேவையான அனுமதியை வழங்குதல்.
5. தேசிய அபிவிருத்தி முயற்சிகளில் ஊடகங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றை அதிகரித்தல்.
6. சர்வதேச ரீதியில் நாட்டின் சுய தோற்றத்தை மேலோங்கச்செய்வதற்கான பங்களிப்பை வழங்கு தல்.
7. அமைச்சின் நோக்கங்களை எய்துக் கொள்வதற்கு தேவையான மனித வள அபிவிருத்தியை மேற்கொள்ளுதல்.
8. அமைச்சுடன் இணைந்துள்ள நிறுவனங்களின் வளங்களை பயனுள்ளவாறு பயன்படுத்தல்.
01. இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடவடிக்கைகளின் பொருட்டு டிஜிரல் தொழில்நுட்பத்தை அறிமுகஞ்செய்தல் (Digitalization) .
தற்போது உலகத்தின் பல்வேறு நாடுகள் தமது தொலைக் காட்சி ஒளிபரப்பு நடவடிக்கைகளின் போது டிஜிரல் (Digital) தொழில்நுட்பத்தை மிக வெற்றிகரமாக பயன்படுத்துகின்றன.
ஆiகாயல் ஊடகத்துறையுடன் தொடர்ப்பு கொண்டுள்ள தொழில்நுட்ப உலகத்தை வெற்றிகொள்ளும் நோக்கில் இலங்கையில் ரூபவாஹினி ஒளிபரப்பு நடவடிக்கைகளின் பொருட்டு டிஜிரல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு இவ் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
இந்த நாட்டில் ரூபவாஹினி டிஜிரல் மயமாக்கல் பொருட்டு பொருத்தமான தொழில்நுட்பம் தொடர்பாக அரச மற்றும் தனியார் துறை இலத்திரனியல் ஊடகங்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள ஜப்பானின் ISBD-T தொழில்நுட்பம் மற்றும் ஐரோப்பாவின் DVB-T2 தொழில்நுட்பம் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கு மிக பொருத்தமான தொழில்நுட்பத்தின் கீழ் ரூபவாஹினி ஒளிபரப்பு டிஜிரல்மயப்படுத்தலை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
02. உள்நாட்டு சினிமாவிற்கு எண்ணியல் (டிஜிரல்) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தல் (டிஜிரல்மயமாக்கல்).
நாளுக்கு நாள் முன்னேற்றமடையும் சர்வதேச சினிமா துறையின் போக்குகளுக்கேற்ப இலங்கையின் சினிமா தொழிலின் மேம்படுத்தும் தேவைப்பாடு தொடர்பாக இவ் அமைச்சு இனம் கண்டுள்ளது.
அதன் படி புதிய தொழில்நுட்ப உபாய முறைகளை உள்நாட்டு சினிமா தொழில்நுட்பத்தின் மீது பதிலீடு செய்யும் நோக்கத்துடன், திரைப்படங்களின் பொருட்டு 2k தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் திரைப்படங்களை காட்சியிலிடுவதற்காக பயன்படுத்தப்படும் 35 mm சுருள் முறைக்குப் பதிலாக ஆகக் குறைந்த விவரக் குறிப்புகளுக்கமைவாக 2k தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் தேசிய கொள்கையாக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைக்கு மதிப்பளித்து உரிய தொழில்நுட்ப விவரக் குறிப்புகளுக்கமைவாக இலங்கையில் உள்ள திரையரங்குகளின் பொருட்டு 2k ஒளியுருப்படிவ (Projector) இயந்திரங்களை பொருத்துவதற்காக திரையரங்கு உரிமையாளர்களையும் விநியோகச் சபைகளையும் அறிவுறுத்துவதற்கு எமது அமைச்சு தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
03. மஹிந்த ராஜபக்ஷ தேசிய றெலி-சினிமா பூங்க.
தேசிய சினிமாவின் மேம்பாடு கருதி 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆந் திகதி புதிய பொழிவுடன் தேசிய ரெலி சினிமா பூங்கா ஆரம்பிக்கப்பட்டது.
சினிமா படைப்பாளிகளிடையே இப் பூங்காவின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்துடன், அதன் எல்லா தகவல்களும் உள்ளடங்கிய www serendibstudio.com இணையதளத்தை இற்றைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப் பட்டுள்ளன.
அதே போன்று கலைதுறையில் ஆற்றல்களைக் கொண்டுள்ள இளைஞர் யுவதிகளின் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் 161 மாணவ மாணவிகளை கொண்டமைந்த குழாமொன்றை (Talent pool) உருவாக்குவதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நவீனமயப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு சமமாக இந்திய திரைப்படமான “Bombay Velvet;” திரைப்படத்தின் படிப்பிடிப்புகள் இங்கு மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் போது பூங்காவின் வசதிகளை ஆகக்கூடிய மட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
அதற்காக ஏறத்தாழ 2 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியில் ரூபா. 150 மில்லியன் செலவில் பின்னணி அமைப்புக்கள் நிர்மாணிக்கப்பட்டன.
அதே போன்று இப் பூங்காவை சார்ந்து உள்நாட்டு ரெலி நாடகங்களின் படப்பிடிப்புகள் மேற்கொள்வதுடன், பூங்காவை பார்வையிடுவதற்கு நாள்தோறும் வருகின்ற பார்வையாளர்களை இலக்காகக்கொண்டு புதிய நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் இவ் அமைச்சு எதிர்பார்க்கின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலை படைப்புகளின் பொருட்டு தேவையான காட்சி அமைப்பு வசதிகளை வழங்கும் நோக்கத்துடன், ரண்மிஹிதென்ன மனம்கவரும் கலை கிராமமாக உருவாக்குவதற்கு தேவையான பின்னணி தற்போது நிருமாணிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ரெலி சினிமா பிரதேசத்தின் பின்னணி அமைப்புகள் மிகவும் மனம் கவரும் வண்ணம் மேம்படுத்தி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்ரூடியோவை ஸ்தாபிப்பதற்கும் எமது அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
04. சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு மோட்டார் வாகனம் கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லா கடனாக ரூபா 1.2 மில்லியன் வழங்குதல்.
2012 ஆம் ஆண்டின் வரவுசெலவு திட்டத்தின் யோசனைக்கிணங்க, முழு நேர காலம் இத்துறையில் ஈடுபட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்டு வட்டியின்றி மோட்டார் வாகனம் கொள்வனவு செய்வதற்காக சலுகை அடிப்படையில் கடன் வழங்கும் திட்டமொன்றை இவ்வமைச்சு நடைமுறைப்படுத்தியது.
அதன் பலனாக ரூபா. 1.2 மில்லியன் ஆன தொகை வட்டியில்லா கடனாக சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
அதற்கிணங்க, தகைமையுள்ள 837 கலைஞர்களையும் ஊடகவியலாளர்களையும் கடன் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டது.
அதன் முதலாவது கட்டத்தின் கீழ் 142 கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும், இரண்டாவது கட்டத்தின் கீழ் 156 கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும், மூன்றாவது கட்டத்தின் கீழ் 539 கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் மோட்டார் வாகன கடன் வசதி பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அதன் மூன்றாவது கட்டத்தின் கீழ் 314 ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் இலங்கை வங்கி, மக்கள் வங்கி , தேசிய சேமிப்பு வங்கி ஊடாக கடன் பெற்றுள்ளனர் 05. “அசி திசி” ஊடக புலமைப்பரிசில் வேலைத்த்pட்டம.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் தகைமைகளையும் ஆற்றல்களையும் மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன், பல்கலைக்கழகம், மற்றும் ஏனைய பயிற்சி நிறுவனங்கள் ஊடாக கற்கின்ற பட்டப்பின்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா பாடநெறி போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்குதல் “அசி திசி” ஊடக புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஊடகவியலாளர்களின் பொருட்டு வருடாந்தம் நடைமுறைப்படுத்தும் இந்த புலமைப்பரிசில் வேலைத் திட்டம் ஊடாக இது வரை 475 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு எமது அமைச்சு பணியாற்றியுள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை புலமைப்பரிசில்களுக்கான உரித்தை பெற்றுள்ள ஊடகவியலாளர்களின் புலமைப்பரிசில் நிதியத்தின் தவணைக் பணம் தற்போது செலுத்தப்படுவதுடன், அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதே போன்று 2014 ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்ட 105 புலமைப் பரிசில் பெறுநர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.
06. ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்.
ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்புகள், மோட்டார் சைக்கிள், மடிகணினி மற்றும் நிழற் படக் கருவி (கமெராக்கள்) என்பவற்றை கொள்வனவு செய்ய சலுகை வட்டி விகிதாசாரத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கு மக்கள் வங்கியுடன் இணைந்து கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.
07. வெகுசன ஊடக விருது விழா.
2013 ஆம் ஆண்டை அடிப்படையாகக்கொண்டு பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகிய பிரிவுகளின் கீழ் தொகுத்தளித்த ஆக்கப்படைப்புகளை மதிப்பிடும் நோக்கத்துடன் இவ்வாண்டில் (2014) வெகுசன ஊடக விருது விழாவை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அதிகளவிலான ஆக்கப்படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், உரிய மதிப்பீடுகள் மேற்கொண்ட பின்னர் விழாவை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
08. மக்களுக்கு மகுடம் (தெயட்ட கிருள) தேசிய அபிவிருத்தி கண்காட்ச.
2014.02.21 ஆந் திகதி தொடக்கம் 2014.03.01 ஆந் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை சேர்ந்த 22 இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பங்களிப்புடன் மனம் கவரும் வகையிலான ஊடக வலயமொன்று குருணாகல் வடமேல் மாகண பல்கலைக்கழக வளாகத்தில் நிருமாணிக்கப்பட்டிருந்தது 09. உலக இளைஞர் சம்மேளனம் - 2014. இவ்வாண்டில் இலங்கையில் நடைபெற்ற உலக இளைஞர் மாநாட்டின் பொருட்டு பங்குகொண்ட பல உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு ஏற்ற வகையில், பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச கருத்தரங்கு மண்டபத்தில் ஊடக நிலையமொன்றை பேணிச்செல்லப்பட்டது.
அதன் மூலம் உலகம் முழுவதும் செய்திகள் சென்றடைவதற்கான வசதிகள் அளிக்கப்பட்டன.
10. வெசாக் பக்தி கீதங்கள்.
மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சினால் ஒழுங்கமைக்கப்படும் வருடாந்த “வெசாக் பக்தி கீத நிகழ்ச்சி" இம்முறை வெசாக் போயாவை முன்னிட்டு 2014.05.13 ஆந் திகதி கொழும்பு தாமரை தடாக அரங்கு முன்பாக (நெளும் பொக்குண) நடைபெற்றது.
இதற்காக அமைச்சின் கீழ் இயங்கும் எல்லா நிறுவனங்களிலிருந்தும் பக்தி கீதம் பாடும் குழு பங்குபற்றியதால் இந்த பக்தி கீத இசை நிகழ்ச்சி வர்ணமயமாகியது.
அதற்காக மேன்மை தங்கிய சனாதிபதியின் சமூகமளிப்பும் மிக விசேடமாகும்.
11. இறக்குமதி செய்யப்பட்ட திரைப்படங்கள், தொலைகாட்சி நாடகங்கள் மற்றும் வர்த்தக விளம்பரங்களுக்கு வரி விதித்தல்.
2006 ஜூன் மாதம் 29 ஆந் திகதிய 1451ஃ16 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைக்கமைய இந்த நாட்டு ஊடகங்கள் மூலம் இறக்குமதி செய்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள், பல்வேறு வர்த்தக நிகழ்ச்சிகள் என்பவற்றுக்கு மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சு வரி அறவிடுகின்றது.
12. ஆசியாவின் அரசியல் கட்சிகளின் சர்வதேச கருத்தரங்கு.
(International Conference on Asian Political Parties – ICAPP ஆசியா நாடுகளுக்கிடையில் அன்னியோன்ய புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை என்பவற்றை விருத்தி செய்யும் நோக்கத்துடன் 53 ஆசியா நாடுகளும் 364 இற்கும் அதிகமான அரசியல் கட்சிகளினதும் பங்களிப்புடன் செப்தெம்பர் மாதம் 18 ஆந் திகதி தொடக்கம் 21 ஆந் திகதி வரை இலங்கையில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச கருத்தரங்கின் (International Conference on Asian Political Parties – ICAPP) 08 ஆவது மாநாட்டின் ஊடாக மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை வழிநடாத்தும் பாரிய பொறுப்பு எமது அமைச்சை சார்ந்திருந்தது.
இந்த சர்வதேச கருத்தரங்கின் ஊடக மற்றும் பிரச்சார உப குழுவின் தலைவராக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் செயலாளர் செயற்பட்டார்.
மாநாட்டுக்கு ஏற்புடையதாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் என்பவற்றை கூட்டிணைப்புச் செய்தல், ஊடகவியலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குதல், ஊடக அடையாள அட்டைகளை வழங்குதல், கலந்துரையாடல்களை ஒழுங்கமைப்புச் செய்தல் மற்றும் அதன் எல்லா பிரச்சார நடவடிக்கைகளையும் குறித்த உப குழு ஊடாக வழிநடாத்தப்பட்டது.
அதே போன்று குறித்த மாநாடு நடைபெற்ற நாட்களில் பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகத்தில் ஊடக நிலையமொன்றை பேணிச்சென்று ஊடகவியலாளர்களுக்கு தேவையான வசதிகளை அளித்தலும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
13. கொரியா - இலங்கை ஊடக மாநாடு.
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச கருத்தரங்குக்கு (International Conference on Asian Political Parties – ICAPP) சமமாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பவற்றின் சமபங்களிப்புடன் கொரியா - இலங்கை ஊடக மாநாடு நடைபெற்றது.
2014 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 04 ஆந் திகதி தொடக்கம் 07 ஆந் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த ஊடக செயலமர்வின், ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் எமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டதுடன், இலங்கை மற்றும் கொரியா நாட்டின் பல ஊடகவியலாளர்கள் இதில் பங்குபற்றினார்கள்.
அரசியல் கட்சி தலைவர்களுடன் சுமுகமான சந்திப்புகளும் கள சுற்றுலாக்களும் குறித்த மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
14. ஏனைய விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்.
சனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் போஷாக்கு செயலகத்துடன் இணைந்து “இலங்கை 2016 ஆகும் போது போஷாக்கு நிறைந்த தேசம்” என்ற இலக்கை அண்மித்துக்கொள்வதற்காக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சினது விசேட பங்களிப்பு வழங்கப்பட்டது.
அதற்கமைவாக மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் கீழ் திட்டமிடல் பிரிவால் போஷாக்கு தொடர்பாக ஊடகவியலாளர்களை அறிவுறுத்துவதற்கு 2014.06.17 மற்றும் 2014.08.29 ஆகிய திகதிகளில் 02 நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டதுடன், 134 ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.
போஷாகிற்கான பல்துறை செயற்றிட்டத்தின் படி குறித்த நிகழ்ச்சியை மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் திட்டமிடல் பிரிவால் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், 2014 ஆம் ஆண்டு ய10ன் மாதம் போஷாக்கு மாதமாக பெயரிடப்பட்டதுடன், அரச மற்றும் தனியார் துறைகளின் அச்சீட்டு, இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக மக்களை அறிவுறுத்தும் பல நிகழ்ச்சிகளை மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.
அதன் படி நேர்முக கலந்துரையாடல்கள், உரையாடல்கள் மற்றும் நேர்காணல் சபைகள் என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு ரூபவாஹினி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக 75 நிகழ்ச்சிகள் அமுல்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளின் பொருட்டு அரசாங்க மற்றும் தனியார் துறை ஊடகங்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சிற்கு இயன்றது.
15. போப் ஆண்டவரின் இலங்கை சுற்றுலா.
போப் ஆண்டவரின் இலங்கை சுற்றுலாவை முன்னிட்டு ஊடக நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்டது.
01. தகவல்களை அறியும் சட்டத்தை சமர்ப்பித்தல்.
02. ரண்மிஹிதென்ன மகிந்த ராஜபக்ஷ தேசிய ரெலி சினிமா பூங்காவின் இரண்டாவது கட்டத்தின் நிர்மாணிப்பு பணிகளை மேற்கொள்ளுதல.
03. இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் டிஜிரல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தினைச் (உருவங்களது எண்ணிக்கை) செயற்படுத்துதல்.
04. ஊடகவியலாளர்களுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வளவு செய்வதற்கான கடன் உதவிகளை வழங்கும் திட்டம்.
05. ஊடகவியலாளர்களுக்கு உயர் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் திட்டம்.
06. ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிச் செயலமர்வுகளை நடாத்துதல்.
07. ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன் வழங்கும் திட்டம்.
08. திரைப்படங்கள் - திரையரங்குகள் டிஜிரல் முறைப்படுத்தும் திட்டம் 09. வெகுசன ஊடக பாராட்டு விழாக்களை நடாத்துதல்.
“சுதந்திரம் மற்றும் பொறுப்புமிக்கதான ஊடாக சம்பிரதாயமொன்றுக்கு பங்களிப்புச் செய்தல்.
" “இலங்கையிலுள்ள தொடர்பாடல் ஊடகங்கள் மத்தியில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும், ஊடக கலாச்சாரத்தை மேம்படுத்து வதற்கு தேவையான வழிகாட்டல்களை மேற்கொண்டும் அரசின் தகவல்கள் மற்றும் அரசின் நோக்கங்கள் என்பனவற்றை அறிந்துகொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தல்.
" 1. அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடு உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காலோசிதமான செயற்பாடுகள்.
தொடர்பாக பொது மக்களை விழிப்புணர்வூட்டல்.
2. உயர் ஊடகக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புதல்.
3. அபிவிருத்தி செயற்றிட்டங்கள், விசேட செயற்றிட்டங்கள் என்பன தொடர்பாக குறுந் திரைப்படங்களை தயாரித்தல், விவரண நிகழ்ச்சிகளை தயாரித்தல், காட்சிப்படுத்தல் மற்றும் பாதுகாத்தல்.
4. மேலே குறிப்பிடப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித மற்றும் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்தல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
1. ஊடக தொகுப்பு, ஊடக கலந்துரையாடல், ஊடக அறிவிப்பு மூலம் தரவுகளை திரட்டுதல் மற்றும் தகவல்களை பகிர்தல்.
2. www.news.lk. இணையதளத்தை நாளதுவரைப்படுத்தல்.
3. வெளியீடுகளை தயாரித்தல் மற்றும் விநியோகித்தல்.
4. அரசாங்கத்தின் வெளியீடுகளை விற்பனை செய்தல்.
5. அலுவலக தளகோலம் மற்றும் வேலை சூழலை நவீனமயப்படுத்தல்.
6. ஊடக அடையாள அட்டை (நிரந்தர மற்றும் தற்காலக) வெளியிடுதல்.
7. ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை அளித்தல்.
8. ஊடக ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு.
9. குறுந் திரைப்பட தயாரிப்பு மற்றும் விவரண நிகழ்ச்சி தொகுப்பு.
10. தேசிய அபிவிருத்தி, சுயசரிதைகள், கலாசார நிகழ்ச்சி தயாரிப்பு.
11. நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தல்.
12. தயாரிப்பு நிகழ்ச்சிகளின் பாதுகாப்பு.
13. ஓசையற்ற புகைப்படவியல்.
14. ஊடக தொகுப்பு மற்றும் பிரச்சாரம்.
15. தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட முகாமைத்துவத்திற்கு வசதியளித்தல்.
16. பதவியணி முகாமைத்துவம்.
17. பதவியணியை ஊக்குவித்தல் மற்றும் நாளதுவரைப்படுத்தல்.
18. மனிதவள அபிவிருத்தி.
19. அலுவலக போக்குவரத்து வசதிகளை நாளதுவரைப்படுத்தல்.
“அச்சிடுதல் மற்றும் வெளியிடுதல் என்பனவற்றில் உயிர்நாடியாதல்.
" “அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பதவியணி, புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடனும் காலதாமதமின்றி தரத்துடன் கூடியதாகவும், சேவைபெறுநர்கள் திருப்தியடைகின்ற வண்ணம் அச்சீட்டு மற்றும் வெளியீட்டு சேவைகளை வழங்குதல்.
" திணைக்களத்தின் இலக்குகள்.
1. அச்சீட்டு மற்றும் வெளியீட்டுசேவை நடவடிக்கைகளை உயர் தரத்துடனும், செவ்வையாகவும் உரிய நேரத்தில் நிறைவேற்றுதல்.
2. வர்த்தக அச்சீட்டின் தரம், முடிவு மற்றும் ஆக்கம் என்பவற்றை அதிகரித்தல்.
3. நவீன தொழில்நுட்பம் மற்றும் முறைமைகள் என்பவற்றை விருத்தி செய்வதன் ஊடாக திணைக்களத்தின் உற்பத்திதிறனை அதிகரித்தல்.
4. முகாமைத்துவ முறைமைகள் மற்றும் நடைமுறை திட்டங்கள் என்பனவற்றை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உயர் சேவைகளை வழங்குதல்.
5. மனிதவள அபிவிருத்தியின் ஊடாக உளப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தி சேவைபெறுநர்கள் திருப்தியடையும் வண்ணம் உயர் சேவைகளை வழங்குதல்.
6. ஊழியர்களின் நலன்புரி மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தல்.
7. திணைக்களத்தில் மனம்கவரும் சூழலை உருவாக்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் திருப்தியடையும் வண்ணம் உயர் சேவைகளை வழங்குதல்.
8. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் என்பனவற்றுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.
9. பாதுகாப்பான அச்சீடு தொடர்பாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
01. Offset அச்சீட்டு ஆற்றல்களை விருத்தி செய்தல்.
02. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் Visa Stickes 02 மில்லியன்களை அச்சிட்டு வழங்குதல்.
03. ஒரேமுறையில் 04 வர்ணங்களில் அச்சிட முடியுமான அச்சீட்டு இயந்திரத்தை பொருத்துதல்.
“இலங்கை ஊடகத் துறையில் முன்னோடி ஒலிப்பரப்பாளராக பணியாற்றுதல்.
" “நேயர்களின் வாழ்க்கைக்கு ஏதுவாக அமையும் பொருளாதார, சமூக, கலாச்சார, ஓழுக்க, கல்வி, பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகள் தொடர்பில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வருவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அறிவு, மனோபாவம் மற்றும் ஆற்றல் விருத்தி என்பவற்றை மேற்கொள்வதற்கு இயன்றவாறு வானொலி ஒலிபரப்புத துறையை வழிநடாத்தல்.
" 1. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கும் அதிகமான நேயர்களுடன் கூடிய வானொலி அலைவரிசைகளை பேணிச்செல்கின்ற நிறுவனமாக தொடர்ந்தும் பணியாற்றுதல்.
2. பொறுப்புடன் கூடிய நடுநிலைமையான தகவல்களை உடனுக்குடன் வழங்குகின்ற, இலங்கை ஊடகத்துறையில் முன்னோடியாக பணியாற்றுதல்.
3. உள்நாட்டு கலாச்சாரத்தின் மேம்பாட்டுக்காக உயர் தரத்திலான மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்து வழங்குதல்.
4. அறிவு, மனோபாவம் மற்றும் ஆற்றல் என்பவற்றில் பரிபூரணமான சுயஊக்கமுடன் கூடிய பதவியணியினரை உருவாக்குவதற்கு தேவையான பயிற்சி வழங்குதல்.
5. உற்பத்தி மற்றும் ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தை உரியவாறு நாளதுவரைப்படுத்தி உள்நாட்டு வெளிநாட்டு நேயர்களுக்கு தெளிவாக கேட்ககூடியதாக மேம்படுத்தல்.
6. ஒழுக்க நெறிமுறைகளுக்கு பொருந்தும் விதத்தில் ஒரு அர்த்தமுள்ள ஒலிபரப்பு ஊடாக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் முன்னோடி நிறுவனமாக தொழில்படுதல்.
7. தேசிய வானோலியாக அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மக்களை அறிவுறுத்துவதற்காக ஆக்கத்துடன் கூடிய பங்களிப்பை வழங்குதல்.
8. சிறந்த நிதிசார் கட்டுப்பாடு மற்றும் மனித வளங்களின் முகாமைத்துவம் என்பவற்றை பேணிச்செல்லுதல்.
9. போட்டியுடன் கூடிய சந்தையை உபாயரீதியாக வெற்றிக்கொள்ளல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற்குத திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
1. கரகஹதென்ன எப். எம். ஒலிபரப்பு கூடத்தின் ஒலிபரப்பு மட்டங்களை மேம்படுத்துவதனை பூர்த்தி செய்தல்.
2. வெளியக வெளியீட்டுப்பிரிவில் வசதிகளை நாளதுவரைப்படுத்தல 3. ஒளிப்பதிவுகளை மேற்கொள்ளுதல் மற்றும் தொடர்பு கூடங்களில் வசதிகளை நாளதுவரைப்படுத்தல்.
4. ஹப்புத்தலை ஒலிபரப்பு கூடத்தின் ஒளிபரப்பு முறைமையை மேம்படுத்தல்.
5. கூட்டுத்தாபனத்தின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல்.
“அசி திசி ஊடகத்தின் இணையற்ற இலங்கை.
" “அறிவு, பொழுதுபோக்கு, கல்வி, நடப்பு விவகார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அர்ப்பணிப்புடன், ஒற்றுமையாக தயாரித்து புதிய தொழில்நுட்பத்துடன் நான்கு திசைகளிலும் உள்ள இலங்கையர்களின் அபிலாஷைகளை மேலோங்கும் வண்ணம் நிறைவேற்றும் வகையில் ஒளிபரப்புதல்.
" கூட்டுத்தாபனத்தின் இலக்குகள்.
1. ரூபவாஹினி நிகழ்ச்சிகளில் அடிப்படை மாதிரிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மனம்கவரும் தன்மை மற்றும் அவற்றின் அர்த்த புஷ்டித் தன்மையை மேம்படுத்தல்.
2. புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி ரசிகர்களை இலகுவில் சென்றடைதல்.
3. தாபனத்தின் பௌதீக மற்றும் மானிட வளங்களை பயனுள்ள முறையில் மேம்படுத்திக்கொள்ளல்.
4. நிறுவனத்திற்கு மேலதிக வருமானத்தை சம்பாதிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தல்.
5. போட்டித் தன்மைக்கேற்றவாறு நிறுவனத்தின் சட்டரீதியான கட்டமைப்பினை மாற்றியமைத்தல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
1. கலையகங்கள் மற்றும் வெளியக ஒளிபரப்பு வசதிகளை மேம்படுத்தல்.
I. கலையகங்கள் மற்றும் வெளியக ஒளிபரப்பு கெமரா வசதிகளை மேம்படுத்தல் - ரூ.மி.70.
II. வெளியக ஒளிபரப்புகளுக்கான ஒளியீட்டல் உபகரணங்களை கொள்வனவு செய்தல் - ரூ.மி.20.
III. HD/SD இறு வட்டுகளை ஒளிப்பதிவு செய்யும் இயந்திரங்களை கொள்வனவு செய்தல் - ரூ.மி.20.
IV. தயாரிப்பு நிகழ்ச்சிகளை களஞ்சியப்படுத்தும் முறையை ஸ்தாபித்தல - ரூ.மி.20.
V. வெளியக ஒளிபரப்பு வசதிகளை மேம்படுத்தல் - ரூ.மி.20.0
VI. (Virtual) கலையக முறைகளை ஸ்தாபித்தல் - ரூ.மி.20.
2. பிரதான கட்டுப்பாட்டு கலையகத்தின் வசதிகளை மேம்படுத்தல்.
I. பிரதான கட்டுப்பாட்டு கூடத்தின் வசதிகளை மேம்படுத்தல் - ரூ.மி.20.
II. அட்டவணைப்படுத்திய வர்த்தக அறிவிப்புகளை ஒளிபரப்பும் மென் பொருள்களை அறிமுகப்படுத்தல் - ரூ.மி.15.
III. பின் தயாரிப்பு பிரிவை மேம்படுத்தல் - ரூ.மி.30.
IV. குரல் பதிவு கலையகத்தை மேம்படுத்தல் - ரூ.மி.15.
V. 32x32 SDI Routing முறைமையை மேம்படுத்தல் - ரூ.மி.25.
VI. இறுவட்டுகள் - சிப் பதிவு செய்யும் இயந்திரங்களை கொள்வனவு செய்தல் - ரூ.மி.20.
3. நிகழ்ச்சித்திட்டங்களின் ஒலிபரப்பு நிலையத்தை மேம்படுத்தல்.
I. தெனியாய ஒலிபரப்பு நிலையத்தை மேம்படுத்தல் - ரூ.மி.15.
II. ஒலிபரப்பு வசதிகளை பரிசீலனை செய்யும் உபகரணங்களையும் உதிரிபாகங்களையும் கொள்வனவு செய்தல் - ரூ.மி.10.
4. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையை நவீனமயப்படுத்தல்.
I. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல - ரூ.மி.10.
II. புதிய சர்வர் முறைமையை ஸ்தாபித்தல் - ரூ.மி.20.
5. மின்சாரம் மற்றும் குளிரூட்டல் வசதிகளை மேம்படுத்தல்.
I. பிதுருதலாகலை ஒலிபரப்புக்கூடத்திற்காக 200 KVA தெகலா மின் உற்பத்தி இயந்திரத்தை கொள்வனவு செய்தல் - ரூ.மி.5.
“அச்சகத் தொழிலில் முதன்மையாதல் மூலம் வெளியீட்டில் அதிலும் விசேடமாக கல்வி அபிவிருத்தி வெளியீடுகளின் சுரக்ஷா அச்சக தொழில், அப்பியாச புத்தகங்கள் மற்றும் எழுதுகருவி பொருட்கள் என்பனவற்றின் உற்பத்தி சந்தையில் முன்னோடியாகத் திகழ்தல்.
" “திறமையும் தைரியமும் மிக்க மனநிறைவுடனான ஊழியர்களைக்கொண்ட முன்மாதிரியான அரச கூட்டுத்தாபனமாக, அச்சகத் தொழிலில் உயர் தர நிர்ணயங்களுக்கமைய போட்டியான விலை கணக்குகளுக்கு அச்சுப் பொருள் உற்பத்திகளை மக்களின் தேவை மற்றும் நலன் கருதி விநியோகிப்பதற்கு அர்ப்பணிப்பாக பணியாற்றுதல்.
இலக்குகள்.
01. அரச அமைச்சுக்கள், திணைக்களங்கள், உள்@ராட்சி நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பனவற்றில் அச்சு நடவடிக்கைகள் மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
02. தனியார் நிறுவனங்களின் அச்சீட்டு மற்றும் வெளியீட்டு வேலைகளைப் பொறுப்பேற்று முடிவுறுத்தி கையளித்தல்.
03. புத்தகங்களின் அச்சீட்டு பணிகளை மேற்கொள்ளுதல்.
04. வெளியீடுகள், எழுது கருவி பொருட்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
1. எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அபராதப்பணமின்றி உரிய திகதியில் வழங்குவதற்கு ஆண்டு ஆரம்பத்திலிருந்து முறையான காலவெல்லைக்கமைவாக நடைமுறைப்படுதல்.
2. ஆசிரியர் கைந்நூல்களின் பிரதிகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை களை திட்டமிடுதல்.
3. அச்சீட்டு நடவடிக்கைகளின் போது ஏற்படும் வீண்விரயத்தை குறைத்துக்கொள்வதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரித்தல் மற்றும் அதனூடாக உற்பத்திதிறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
4. உற்பத்தியின் தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி என்பவற்றை அதிகரிப்பதன் ஊடாக போட்டியாளர்களை நோக்கி எமது வாடிக்கையாளர்கள் செல்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
5. பல்வேறு துறைகளில் புதிய அச்சீடு வேலைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான வேலைதிட்டமொன்றை தயாரித்தல்.
6. ஊழியர்களின் ஆக்கத்திறனை அதிகரிப்பதற்காக வழங்கும் பயிற்சி நிகழ்ச்சிகளை அதிகரித்தல்.
7. சரியான நேரத்தில் அச்சீடு பணிகளை முடிவுறுத்தி வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளுதல்.
8. நாடு முழுவதும் புதிய வாடிக்கையாளர்களை கவருவதற்காக சிறந்த பிரச்சார நிகழ்ச்சிகளை அமுல்படுத்தல்.
9. தற்கால சந்தைக்கு ஏற்றவாறு சந்தைப்படுத்தல் பிரிவின் பணிகளை நவீனமயப்படுத்தல்.
10. கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊர்தி வண்டிச்சாலையை சீரமைத்தல்.
11. வேலை மதிப்பீட்டுக்கமைவாக புதிய முறை அறிமுகப்படுத்தல் மற்றும் அதனு டாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கை ஏற்படும் வண்ணம் மீண்டும் வேலைகளை பெற்றுக்கொள்வதற்கு பணியாற்றுதல்.
12. சந்தைப்படுத்தல் பிரிவுக்கு மோட்டார் சைக்கிள் கொள்வனவுசெய்தல்.
13. அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்தல்.
14. புதிதாக லொத்தர்சீட்டுகளை அச்சிடுவதற்கு எதிர்பார்த்தல்.
15. புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்தல்.
16. கேட்போர்கூடத்தை நவீனமயப்படுத்தல்.
17. புதிய மலசலகூட முறைமையை நிர்மாணித்தல்.
18. எல்லா விற்பனை நிலையங்களையும் வலையமைப்பு செய்தல் மற்றும் நவீனமயப்படுத்தல்.
19. புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்வதன் மூலம் நிறுவனத்தின் உற்பத்தி கொள்ளளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
20. சுரக்ஷா பிரிவு மற்றும் இருப்பு தொகை பிரிவு என்பவற்றுக்கு (Dispatch Section) புதிய களஞ்சியத்தை நிர்மாணித்தல்.
21. புதிய ஊர்தி வண்டிச்சாலையை நிர்மாணித்தல் மற்றும் தற்போதுள்ள ஊர்தி வண்டிச்சாலை யின் கூரையை சீரமைத்தல்.
22. புதிய எழுதுகருவிப்பொருள் தொழிற்சாலையின் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதற்காக புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்தல்.
23. முன்னேற்ற நிர்வாக பிரிவு மற்றும் கணினி பிரிவு என்பவற்றுக்கு மென்பொருள் அறிமுகப்படுத்தல்.
“தேசிய திரைப்படக் கைத்தொழிலின் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு சர்வதேச அந்தஸ்த்துக்கு அண்மிக்கக் கூடியதான சினிமா படைப்புகளை உருவாக்குவதற்கு முடியுமானவாறு சினிமா தொழிலை விருத்தி செய்தல்.
" 'தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமானது, சர்வதேச தரத்திற்கு அண்மிக்கக் கூடிய வகையில் சினிமா தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பலம்மிக்க நிறுவனமாகச் செயற்படுதல்.
கூட்டுத்தாபனத்தின் இலக்குகள்.
01. திரைப்பட தயாரிப்புக்கு அல்லது காட்சிப்படுத்தலுக்குத் தேவையான திரைப்படச் சுருள், திரைப்படங்கள், படப்பிடிப்பு உபகரணங்கள், பொருட்கள் உதிரிபாகங்கள் என்பவற்றை இறக்குமதி செய்தல்.
02. ஏற்றுமதி செய்யும் அலுவலுக்காக திரைப்படங்களை கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் திரைப்படங்களை ஏற்றுமதி செய்தல்.
03. திரைப்படங்களின் தயாரிப்புக்கு அல்லது காட்சிப்படுத்தலுக்குத் தேவையான திரைபடச் சுருள் திரைப்படங்கள், புகைப்பட உபகரணங்கள் அல்லது உதிரிப்பாகங்கள் விநியோகித்தலும் வழங்குதலும்.
04. இலங்கையில் திரைப்படத் தயாரிப்புக்கான கலையகம், மற்றும் திரையரங்குகளை அமைத்தல், ஸ்தாபித்தல், செயல்படுத்தல், வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
05. சேவைபெறுநர்களின் திரையரங்குகள் மற்றும் கலையகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்கு தேவையான போதிய சேவைகளையும் வசதிகளையும் தியைரங்குகள், கலையரங்குகள் என்பவற்றில் வழங்கப்படும் என்பதை உறுதிசெய்தல்.
06. இலங்கையில் திரைப்பட உற்பத்திக்காக ஈடுபடுதல் மற்றும் நிதி அல்லது வேறு வகையில் உதவி வழங்குதல்.
சிறந்த பெறுமதிகளைக் கொண்டுள்ள திரைப்படங்களின் தயாரிப்பாளர்களை கௌரவப்படுத்தி பரிசுகளும் விருதுகளும் வழங்குதல்.
கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் என்பவற்றை ஒழுங்கமைத்தல திரைப்பட விழாவை நடாத்தல் மற்றும் அவற்றில் பங்குகொள்ளுதல்.
திரைப்படங்கள் தொடர்பான வார சஞ்சிகைகள் மற்றும் சஞ்சிகைகள் என்பவற்றை வெளியிடுதல்.
07. திரைப்பட தொழிலை மேம்படுத்தல், ஊக்குவித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் இலங்கையில் உற்பத்தி செய்கின்ற திரைப்படங்கள் தொடர்பில் உயர் தரங்களை பேணுதல்.
இலங்கையில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பொருட்டு இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் அதற்கான கோரிக்கைகளும் குறித்த திரைப்பட வியாபாரத்தை ஊக்குவித்தலும் விரிவுபடுத்தலும்.
இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் திரைப்பட தொழிலுடன் தொடர்புடைய அல்லது அதில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் தொடர்பை ஏற்படுத்தல்.
திரைப்பட தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் பற்றி அமைச்சர் அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல்.
2015 ஆம் ஆண்டில் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களும் கருத்திட்டங்களும்.
1. தனியார் துறையின் காட்சிப்படுத்தல் சபையின் ஒத்துழைப்புடன் திரையரங்குகளில் D.C.P. (2K) முறையை ஸ்தாபித்தல், இதன் போது கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ள ரித்மா பிரிவின் திரையரங்குகளையும் டிஜிரல்மயப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
2. இதுவரை நிறைவேற்றுவதற்கு முடியாதுள்ள 2008 தொடக்கம் 2014 வரையிலான காட்சியிலிடப்பட்ட திரைப்படங்கள் தொடர்பாக சனாதிபதி விருது விழாவை நடாத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
3. தளுகம கலையகத்தின் ஒலி பிரிவை 5.1 டிஜிரல் தரப்படுத்தலுக்கமைய நவீனமயப்படுத்தல்.
தொகுப்பு கூடத்தின் டிஜிரல் தொகுப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்வதற்கு தேவையான நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
4. சீனா, இலங்கை கூட்டுத் தயாரிப்புகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
5. “சேத மாவத்தை” சினிமா வெளியீடுகளுக்காக பணியாற்றுதல்.
6. உள்நாட்டு ஆக்கப்படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய திரைப்பட அபிவிருத்தி நிதியம் ஊடாக தயாரிப்பு அல்லது உதவி தயாரிப்பு இன் கீழ் திரைப்படங்களுக்கு நிதி முதலீடு செய்தல்.